ராகுல் காந்தி பற்றி கார்திக் சிதம்பரம் கிண்டலடித்து வருவதாகவும் அவர் மீது பல்வேறு குற்றசாட்டுகள் வைக்கப்பட்டு காரைக்குடியிலிருந்து ஒரு வாட்ஸ் அப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பதிவு தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கும் சென்று சேர்ந்துள்ளது. இது தான் அந்த பதிவு.
கார்த்தியின் பேட்டி அவரின் நிலைப்பாடு. காங்கிரசின் நிலைப்பாடல்ல. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலினுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என நினைக்கிறார். சகோதரர் ஸ்டாலின் என்று அழைக்கிறார். திமுக தான் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என உறுதியாகச் சொன்னது.
அப்போது நெட்ப்ளிக்சில் படம் பார்த்துக் கொண்டு, வேர்டல் விளையாடிக் கொண்டிருந்த கார்த்தி தலைமைப் பண்பு குறித்த புத்தகத்தை தான் படித்ததாக ”ட்வீட்” செய்து ராகுல் காந்தியை கிண்டலடித்துக் கொண்டிருந்தார். காங்கிரஸ் கூட்டணியில் யார் பிரதமர் என்று கூட்டணிக் கட்சிகள் முடிவு செய்யும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
கடந்த பல ஆண்டுகளாக தலைவர் ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களும் என்ன சொல்கிறார்களோ அதில் இருந்து மாறுபட்டு முரண்பட்டு பேட்டி அளிப்பதே கார்த்தியின் வழக்கமாக இருந்து வருகிறது.
இது BJB அவருக்கு தந்திருக்கும் “கேம் பிளான்” இப்போது இந்தியா கூட்டணியை தகர்க்க பாரதிய ஜனதாவின் B டீம் , கார்த்தி அண்ட் கோ வின் அரசியல் யுக்தியே இந்த பேட்டி. காரணம் நிறைய கேஸ் இருக்கிறது. இன்னொரு முறை திகார் சிறைக்குப் போக முடியாது. தப்பிக்க இது ஒரு வழி, புதிய கண்டுபிடிப்பு. இதற்குப் பெயர் “நம்பிக்கை துரோகம்.” காங்கிரஸ் தலைமைக்கு பலமுறை நம்பிக்கை துரோகம் செய்தாயிற்று. இப்போது திமுகவுக்கு செய்து கொண்டிருக்கிறார்.
அதனால் தான் காங்கிரஸ் தொண்டர்கள் கார்த்திக்கு சீட் தரக்கூடாது என்று டெல்லிக்குச் சென்று சொல்லி வந்தார்கள். நேரு குடும்பத்தின் விசுவாசிகளுக்கு காங்கிரசில் சிதம்பரம் குடும்பம் எந்தப் பதவியும் தராது.
தமிழ் மாநில காங்கிரசுக்கு சென்று வந்தால் எம்எல்ஏ அல்லது மாவட்ட தலைவர் பதவி தருவார்கள். ஏனென்றால் நேரு குடும்பத்தை மட்டும் நம்பி இருப்பவர்களை இவர்கள் எப்போதுமே அங்கீகரிப்பதில்லை என்பதே அதன் உள்ளர்த்தம். ஆறு மாதத்திற்கு முன் காங்கிரஸ் கட்சியை வளர்க்க வேண்டும் என்று ஏன் கார்த்திக்கு தோன்றவில்லை. அப்போது நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமே அவர் கண்ணுக்கு தெரிந்தது.இப்போது எந்த காங்கிரஸ் தொண்டனும் ஒன்றிய கவுன்சிலராகவோ, நகர மன்ற உறுப்பினராகவோ, நகர மன்ற தலைவராகவோ வந்து விடக்கூடாது என்பது மட்டுமே அவர் கண்ணுக்கு தெரிகிறது. அதனால் தான் காங்கிரஸ் தொண்டனுக்கு கார்த்தியை பிடிக்கவில்லை. கார்த்தியின் சென்னை பைக் கிராஃப்ட்ஸ் கார்டன் இல்லத்தில் சில வருடங்களுக்கு முன் திருட்டுப் போனது. காவல் துறையின் எல்லா மட்டத்திலும் அழுத்தம் கொடுத்து வீட்டில் வேலை செய்த பெண்ணை கூட்டி வந்து அவரிடம் இருந்து களவு போன நகைளை மீட்டார்கள். அதே போல நாச்சியாபுரத்தில் ஒரு டெக்ஸ்டைல் மில்லில் திருட்டு போனது. அப்போது சாமான்களை கொண்டு போனவர்களோடு, மில் உரிமையாளரை சமாதானமாக போக சொன்னவர் கார்த்தி தனக்கு என்றால் ஒரு நியாயம் மற்றவருக்கென்றால் ஒரு நியாயம். அதுதான் கார்த்தி.
தலைவர் ராகுல் காந்தியும், முதல்வர் மு. க.ஸ்டாலினும் பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கையில், காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை பிஜேபி காப்பி அடித்து விட்டதாக மென்மையாக சொல்வதன் மூலம் காங்கிரசையும் சமாதானப்படுத்தி, பிஜேபிக்கும் நல்ல பிள்ளையாக இருக்க சிதம்பரம் முயற்சிக்கிறார் என்று அரசியல் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்.
தன்னுடைய நாடாளுமன்ற உறுப்பினர் நிதி முழுவதையும் லைட் மட்டுமே போடுவதற்கு காரணம் என்ன என்று கார்த்தி விளக்கமாக சொல்ல வேண்டும்.இல்லையென்றால் முழுமையான விளக்கத்தை நாம் தர வேண்டி இருக்கும். சில வருடங்களுக்கு முன் மேலிட பார்வையாளர் ஒருவரை சென்னையில் வைத்து தாக்குதல் முயற்சி செய்தார் கார்த்தி சிதம்பரம்.
அப்போது முதல் கார்த்தியின் அத்தனை நடவடிக்கைகளையும் காங்கிரஸ் மேலிடம் நன்கு அறிந்து, புரிந்து வைத்திருக்கிறது. இந்த முறை டெல்லி சென்ற காங்கிரஸ் தொண்டர்களிடம் மேலிட இரண்டாம் கட்ட தலைவர்கள் பத்திரிகைகளில் பேட்டி தராதீர்கள். டெல்லிக்கு வராதீர்கள். கதவை சாத்திக்கொண்டு உங்கள் எம்.பி க்கு புரிகிற மாதிரி நன்கு பாடம் சொல்லிக் கொடுங்கள்.
அதற்கு பிறகு டெல்லி வாருங்கள் என்று சொல்லி அனுப்பி இருக்கிறார்கள். காங்கிரஸ் தொண்டர்கள் தகுந்த சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கதவை சாத்துவதற்கு.