காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் செங்கல்பட்டு சென்னை ஆகிய பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் செய்பவர்களிடம் மிரட்டி பணம் பறிக்கும் ரவுடி கும்பலை ஒடுக்க திமுக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதைத்தொடர்ந்து காஞ்சிபுரத்தில் எஸ்.பி. டாக்டர் எம்.சுதாகர் உத்தரவின் பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டு குண்டர்களை தடுக்கும் செயல் நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த படப்பை குணா தானாக நீதிமன்றத்தில் சரணடைந்தார்.இவர் தற்போது பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.https://www.chennaireporters.com/news/dmk-deputy-chairmans-husband-complains-to-collector/
அதனைத் தொடர்ந்து அவரது கூட்டாளிகள் பிரபு, சேட்டு இருவரும் இரண்டு தினங்களுக்கு முன்பு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.முன்னதாக காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி தியாகு ஹரியானாவில் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இந்தோனேஷியாவின் தற்கொலை செய்துகொண்ட தமிழகத்தின் தாவூத்தின் அழைக்கப்பட்ட பிரபல ரவுடி ஸ்ரீதரின் டிரைவரும் அவரின் தளபதியுமான தினேஷ் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இன்னும் மீதமுள்ள ரவுடிகள் வசூல்ராஜா, நடிகையை மிரட்டிய பிரபல ரவுடி வைரம், உட்பட பல ரவுடிகளை பிடிக்க போலீசார் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை போலீசார் தெரிவிக்கின்றனர் .
தன் உயிருக்கு பயந்து ரவுடிகள் தனது கூட்டாளிகளிடம் எந்தவிதமான பஞ்சாயத்துகளும் செய்யக்கூடாது என்றும் என்று கட்டளையிட்டு போட்டுள்ளனராம்.
உயிருடன் இருந்தால் அதுவே பெரிய விஷயம் என்று கருதி என் கவுண்டரிலிருந்துதப்பிக்க உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நீதிமன்றத்தில் சரணடையும் முடிவை எடுத்திருக்கிறார்களாம் ரவுடிகள்.