chennireporters.com

#rowdy cd mani arrest; துப்பாக்கி முனையில் ரவுடி சிடி மணி சேலத்தில் கைது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பா?..

#CHENNAI REPORTERS.COM , EXCLUSIVE STORY, EXCLUSIVE STORY#..

சென்னையில் பிரபல ரௌடி சிடி மணி  இன்று காலை சேலத்தில் துப்பாக்கி முனையில்  கைது செய்யப்பட்டார். அவரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கார் மூலம் போலீசார் சென்னைக்கு அழைத்து வந்து கொண்டிருக்கின்றனர்.

சென்னையின் பிரபல ரவுடி சிடி மணி என்கிற மணிகண்டன். தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த இவர் மீது ஆயுதங்கள் பதுக்கல், தொழில் அதிபர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி பணம் பறித்தல், போலீசாரை துப்பாக்கியால் சுட்டது என பல வழக்குகள் உள்ளன. அதாவது கொலை வழக்கு 5 கொலை முயற்சி மற்றும் ஆள் கடத்தல் என 35 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

சிடி மணி மற்றும் காக்கா தோப்பு பாலாஜி

தமிழ்நாடு அளவில் பெரிய அச்சுறுத்தலாக திகழ்ந்த திண்டுக்கல் பாண்டியின் சிஷ்யனாக இருந்த சிடி மணி, அவரது மரணத்துக்கு பிறகு மிகப்பெரிய ரவுடியாக உருவெடுத்தார். சிடி மணி மீது அடையாறு, சைதாப்பேட்டை , கோட்டூர்புரம் , தேனாம்பேட்டை ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.ரௌடி சிடி மணி கடந்த 2007, 2009, 2012, 2015 ஆகிய ஆண்டுகளில் குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்தார். பின்னர் 2018ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த சிடி மணி தலைமறைவாக இருந்த நிலையில், 2021ல் மீண்டும் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்து, சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தார். பல்வேறு வழக்குகளில் விசாரணைக்கு ஆஜராகமல் சம்மன் அனுப்பப்பட்டும்,  தலைமறைவாக இருந்து வந்தார் சிடி மணி. தலைமறைவாக இருந்த சிடி மணி, வாரண்ட் ரீ-கால் செய்ய தனது வழக்கறிஞருடன் அல்லிக்குளம் நீதிமன்றம் வந்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கிலும் சிடி மணிக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. அவரிடம் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டிருந்தனர்.

sambava senthil Archives - மின்னம்பலம்

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் காக்கா தோப்பு பாலாஜிக்கும் ஆர்ம்ஸ்டாங் குலைக்கும் தொடர்பு இருக்கும் என்று விசாரணை நடத்தி வந்த போலீசார் இரண்டு தினங்களுக்கு முன்பு அவரை என்கவுண்டில் சுட்டு கொலை செய்தனர்.

இந்நிலையில் காக்கா தோப்பு பாலாஜியின் நெருங்கிய நண்பராக இருந்து வரும் சிடி மணிக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர் அதாவது தமிழ்நாட்டிலேயே ரவுடிகளையும் தனது விரோதிகளையும் தலையின் பின்பக்கத்தில் வெட்டும் பழக்கம் உடைய ஒரே ரவுடி சிடி மணி தான் என்கின்றனர் போலீசார். எனவே ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சிடி மணிக்கும் நேரடியான தொடர்பு இருக்கும் என போலீசார் சந்தேக வளையத்தில் அவரை ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கோயம்புத்தூரில் தலைமறைவாக இருந்த ரவுடி சிடி மணி பின்னர் சேலத்தில் ஒரு இடத்தில் தலைமறைவராக பதுங்கி இருக்கிறார் அவர் சென்னையில் உள்ள தனது கூட்டாளிகளுடன் பேசும்போது அவரது நடவடிக்கைகளை கண்காணித்த போலீசார் அவரை கைது செய்ய திட்டமிட்டிருந்தனர்.

சிடி மணி மற்றும் சம்பவ செந்தில்

சப் இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் சேலத்திற்கு சென்று அங்கு சி.டி.மணி தங்கி இருந்த இடத்தில் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து சிடி மணியை கைது செய்தனர். பின்னர் அங்கிருந்து சிடி மணி ஒரு வேன் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேலத்தில் இருந்து சென்னைக்கு அழைத்து கொண்டு வருகின்றனர்.

BSP Tamil Nadu chief hacked to death: Mayawati reacts. Who was K Armstrong? | Latest News India - Hindustan Times

சிடி மணி செய்த முதல் கொலை பல் ராஜா என்னும் திருவேங்கடத்தின் நண்பர் ஆவார். பின்னர் தேனாம்பேட்டை ஆலையப்பன் கொலை செய்யப்பட்டார். பின்னர் சைதாப்பேட்டை சேர்ந்த பிரபல ரவுடி ஜெகா வேளச்சேரியை சேர்ந்த பிரபல ரவுடி திருவேங்கடம் ஆகியோருடன் எதிர்ப்பும் பகையும் இருந்து வந்தது.

கடைசியாக மயிலாப்பூரை சேர்ந்த டொக்கன் ராஜா என்பவரை சிடி மணி கொலை செய்தார். சென்னை வேளச்சேரி கிண்டி திருப்போரூர் கேளம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலை என பல இடங்களில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த சிடி மணியின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் 300 கோடியிலிருந்து 500 கோடி  வரை இருக்கும் என்கின்றனர் போலீசார்.

திமுக புள்ளிகளுக்கு மட்டுமே குறிவைத்து ஸ்கெட்ச் - சிக்கிய டி சி.டி.மணியின் ரத்த ச(த)ரித்திரம்! | Gangster CT Mani's Crime History and Political Links - Tamil Oneindia

சிடி மணி பழைய படம்

சிடி மணிக்கு சென்னை மாநகர காவல் துறை மட்டுமல்லாமல் தமிழக காவல்துறையில் உள்ள முக்கிய அதிகாரிகளும் அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர்.அவரிடம் பிரதிபலன் பெறாத போலீஸ் அதிகாரிகளே இல்லை என்கின்றனர். சில நேர்மையான அதிகாரிகள்.

இந்நிலையில், தற்போது சேலத்தில் துப்பாக்கி முனையில் சிடி மணி கைது செய்யப்பட்டிருப்பது  சென்னையில்  ரவுடிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்தி;
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் சென்னை அண்ணா சாலையில் காக்காத்தோப்பு பாலாஜியும் சிடி மணியும் காரில் வந்து கொண்டிருந்த போது சம்பவ செந்தில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி சிடி மணி மற்றும் காக்கா தோப்பு பாலாஜியை கொலை செய்ய திட்டமிட்டார் ஹாலிவுட் படத்தையே மிஞ்சும் அளவிற்கு நடந்த அந்த சம்பவத்தில் மயிரிழையில் சிடி மணியும் காக்கா தோப்பு பாலாஜியும் உயிர் தப்பினர்.
பின்னர் தனக்கு வேண்டப்பட்ட ஒரு பிரபல ரவுடியிடம் பேசி சம்பவ செந்திலிடம் நட்பு பாராட்டினார் சிடி மணி அதன் பின்னர் சீரிமணியும் சம்பவ செந்திலும் நெருங்கிய நண்பர்களாக மாறினர்.
14,700+ Mafia Gun Stock Photos, Pictures & Royalty-Free ...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிடி மணியிடம் உள்ள சுள்ளான்கள் தான் மிகச் சிறப்பாக சம்பவத்தை கச்சிதமாக செய்வார்கள் என்று நினைத்த சம்பவ செந்தில் சிடி பணியிடம் அந்த அசைன்மென்ட் கொடுக்கப்பட்டதாக சொல்லுகிறார்கள் சில முக்கிய போலீஸ் அதிகாரிகள் அதன் அடிப்படையிலேயே ஆற்காடு சுரேஷின் தம்பி மற்றும் அவரது உறவினர்கள் அந்த கொலை வழக்கில் பங்கு கொண்டாலும்  ஆம்ஸ்ட்ராங்கை தலை மற்றும் காலில் வெட்டும் செயலை செய்தது சிடி மணியின் ஆட்கள்தான் என்கின்றனர் போலீசார். எனவே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திரை மறைவில் இருந்து சம்பவ செந்திலும் சிடி மணியும் பின்னால் இருந்து இயக்கியது தெரியவந்துள்ளது என்கின்றனர் போலீஸ் அதிகாரிகள்.

சி.டி.மணி என்கிற மணிகண்டன் மீது உள்ள வழக்குகள் விவரம்;

  • K10-Koyambedu
    524/09 u/s 148, 341, 302 r/w 149, 120(B) IPC ,
  • R7-K.K. Nagar
    301/2009 u/s 147,148, 341,302 IPC @ 120(B), 302 r/w 114, 149 IPC
  • J4-Kotturpuram
    96/2012 u/s 147, 148, 341, 302, 506(ii) IPC r/w 149 IPC
  • D2-Walajah
    471/13 u/s 399 IPC r/w Sec 25 (1), (B) (a) Arms Act.
  • D2-Walajah
    701/13 u/s 176(iii) Cr.PC @ 201, 302 IPC
  • J1-Saidapet
    168/2014 u/s 147, 148, 341, 302 IPC r/w 120(B) IPC
  • R6-Kumaran Nagar
    1492/2015 u/s 147, 148, 450, 307, 109, 149 IPC r/w 3 of Explosive substance act 1908
  • T20-Kanathur
    3056/15 u/s 395 IPC
  • J2-Adyar
    2229/ 2015 u/s 147, 148, 307, 506(ii) IPC r/w 25(i)(a) Indian Arms Act
  • R6-Kumaran Nagar
    97/2016 u/s 147, 148, 341, 324, 307, 506 (ii) IPC r//w 25(1)(a) Indian Arms Act.
  • E3-Teynampet
    401/2016 u/s 399 IPC r/w 25 1(A), Indian Arms act 1959
  • R4-Pondy Bazaar
    462/16 u/s 147, 148, 294(b), 392 and 506 (ii) IPC
  • E3-Teynampet
    861/ 2016 u/s 147,148, 341, 294(b), 336, 427, 392, 397, 506(ii), 149 IPC
  • E3-Teynampet
    859 /2016 u/s 147, 148, 341, 294(b), 384, 149, 506(ii) IPC
  • D1-Chengalpattu Town
    756/16 u/s 147, 148, 120(B), 294 (b), 341, 302, 149, 114, 506(ii) IPC
  • T20-Kanathur
    437/18 u/s 148, 353, 307, 506 (ii) IPC & 25 (1B) (a), 3, 5, 27(1), 28 of Indian Arms Act 1959
  • R9-Valasaravakkam
    524/21 U/s 294(b), 332, 353, 307, 506(ii) IPC and 25(b) Arms Act. இன்னும் பல முக்கிய வழக்குகள் உள்ளன.

இதையும் படிங்க.!