chennireporters.com

#rowdy sising raja encounter; நீலாங்கரை அருகே அக்கரையில் ரவுடி சீசிங் ராஜா என் கவுன்டரில் சுட்டு கொலை. அச்சத்தில் ரவுடிகள்.

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய சீசிங் ராஜா ஆந்திராவில் பதுங்கி இருந்தார் அவரை தனிப்படை பொலீசார் கைது செய்து அழைத்து வந்தனர். இன்று அதிகாலை (செப்., 23/9/2024)  திங்கள் கிழமை நீலாங்கரை அடுத்த அக்கரை பகுதியில் போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற ரவுடி சீசிங் ராஜாவை போலீசார் சுட்டு கொன்றனர். 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவராக சந்தேகிக்கப்படும் பிரபல ரவுடி சீசிங் ராஜாவை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், தலைமறைவாக இருந்த சீசிங் ராஜாவை ஆந்திர மாநிலம் கடப்பாவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.

ரவுடி சீசிங் ராஜா

இதன் மூலம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 29வது நபராக சீசிங் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 7 ஆம் தேதி சென்னை பெரம்பூர் செம்பியம் பகுதியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொடூர கொலைச் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து தீவிரமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். ” தாம்பரம் ஏரியா முழுக்க பிரபல ரவுடி சீசிங் ராஜா படத்துடன் போஸ்டர்.. வலைவீசி தேடும் போலீஸ்!” ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள், திருவேங்கடம், திருமலை, பாஜக நிர்வாகி செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், ராமு, கோகுல், சிவசக்தி, தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகியாக இருந்த ஹரிகரன், அதிமுக நிர்வாகியாக இருந்த வழக்கறிஞர் மலர்கொடி சேகர், திமுக நிர்வாகி மகன் சதீஷ், வடசென்னை பாஜக நிர்வாகி அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிஹரன், ரவுடி நாகேந்திரன், காங்கிரஸ் கட்சியில் இருந்த அஸ்வத்தாமன், ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி, ரவுடி சி.டி.மணி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Chennai: BSP State Leader Armstrong Murdered 8 Special Teams Formed |  சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக்கொலை - 8  தனிப்படைகள் அமைப்பு | News in ...

ஆம்ஸ்ட்ராங்

கட்சி வேறுபாடின்றி பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும், பிரபல ரௌடிகள் பலரும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய அரசியல் பிரமுகர்களும், பிரபல ரௌடிகளும் இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவ செந்தில், சீசிங் ராஜா உள்ளிட்ட ரௌடிகளையும் போலீசார் தேடி வந்தனர். ஆற்காடு சுரேஷ், மார்க்கெட் ரவி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த சீசிங் ராஜா, தனக்கென தனிக் கூலிப்படை வைத்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தவர். சென்னையில் மட்டுமின்றி ஆந்திராவிலும் சீசிங் ராஜா மீது கொலை வழக்குகள் உள்ளன.

ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்ட நாள் - போலீஸார் தீவிர கண்காணிப்பு |  On the Day of the Murder of Rowdy Arcot Suresh - Police kept a Close Watch  - hindutamil.in

ஆற்காடு சுரேஷ்

இதற்காக பல முறை சிறை சென்றுள்ளார். சீசிங் ராஜா மீது மொத்தம் 32 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 5 கொலை வழக்கும் 15, கொலை முயற்சி வழக்குகளும் 12 இதர வழக்குகளும் உள்ளன. அவன்  7 முறை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ” தாம்பரம் ஏரியா முழுக்க பிரபல ரவுடி சீசிங் ராஜா தேடப்படும் குற்றவாளி என்று அவனது  படத்தை அச்சிட்டு தாம்பரம் ஏரியா முழுக்க போஸ்டர் ஒட்டி இருந்தனர்.

chennai Police arrested rowdy Seizing Raja at tamil nadu andhra pradesh  border | Crime : கையில் துப்பாக்கியுடன் பிரபல ரவுடி சீசிங் ராஜா..!  துப்பாக்கி முனையில் கைது செய்த போலீஸ் ...

சீசிங் ராஜா

இந்நிலையில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நீலாங்கரை அடுத்த அக்கரை பகுதியில் விசாரணைக்கு அழைத்து சென்றபோது பாதுகாப்பு பணியில் இருந்த போலிசாரை சீசிங் ராஜா தாக்கி விட்டு தப்ப முயன்ற போது போலீசார் அவனை சுட்டு கொலை செய்தனர். இதில் சம்பவ இடத்திலேயே அவன் உயிரிழந்தான் . அவனது உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தேடப்பட்டு வரும் ரவுடி சீசிங் ராஜா மீது மேலும் ஒரு  வழக்கு | Another case filed against rowdy Seizing Raja, who is wanted in  Armstrong's murder - hindutamil.in

இதுவரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மூன்று பேர் போலீஸ் என்கவுன்டரில் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். சீசிங் ராஜாவை விசாரணைக்கு அழைத்து சென்போது நீலாங்கரை அக்கரை அருகே பக்கிங்காம் கால்வாய் அருகே பதுக்கி வைத்து இருந்த ஆயுதங்களை கைப்பற்ற அழைத்து சென்போது அங்கு மறைத்து வைத்து இருந்த கள்ளதுப்பாக்கியால் போலீசை சுட்டுள்ளதாகவும், போலீசார் வாகனத்தை நோக்கி இரண்டு முறை சுட்டதாகவும், தற்காற்புக்காக காவல் வேளச்சேரி இன்ஸ்பெக்டர் விமல் இரண்டு முறை சுட்டத்தில் மார்பு மற்றும் மேல்வயிறு ஆகிய பகுதிகளில் தோட்டா பாய்ந்துள்ளது. சம்பவ இடத்திலேயே அவன் உயிரிழந்தான். இந்த சம்பவம் ரவுடிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

இதையும் படிங்க.!