chennireporters.com

ஜெ.சேகர் ஆன சேகர் ரெட்டி. கோட்டையில் நடந்த குழப்பம்.

sekar reddy
சேகர் ரெட்டி

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள தொண்டான் துளசி கிராமத்தில் மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் சேகர் ரெட்டி சென்னை ஐ.சி.எப் தொழிற்சாலையில் தினக்கூலியாக வாழ்க்கையை தொடங்கியவர்.

ரயில்வே ஒப்பந்ததாரர்களுக்கு ஆட்களை ஏற்பாடு செய்து கொடுத்து கமிஷன் பெற்று வந்தவர் அப்படியே ரயில்வே யூனியன் தேர்தலுக்கும் தேர்தலில் போட்டியிடும் அணிகளுக்கு ஆட்களை திரட்டி கொடுத்து ரயில்வே ஒப்பந்தங்களை பெற துவங்கியவர்.

இது தான் சேகர் ரெட்டியின் ஆரம்ப கால வாழ்க்கை இதனையடுத்து வில்லிவாக்கம் தொகுதி எம்.எல்.ஏ மேம்பாட்டுக்கான ஒப்பந்தம் கிடைத்தது 1994லில் அ.இ.அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக சேகர் ரெட்டி கட்சியில் இணைந்தார்.

அதன் பிறகு டாக்டர் விஜய பாஸ்கரின் அறிமுகம் கிடைத்தது.அதன் பிறகு சேகர் ரெட்டியின் வாழ்க்கையில் ஏறு முகம்தான் சேகர் ரெட்டி தமிழக அரசியலில் அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் அசைக்க முடியாத ஆளாக இருந்தார்.

கட்சியிலும் ஆட்சியிலும் முக்கிய அங்கமாக செயல்பட்டார்.ஓ. பி.எஸ்.சுக்கு ஆல் இன் ஆல் ஆக இருந்தவர் ஓ.பி.எஸ் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது நெடுஞ்சாலைகள் துறையில் சாலை போடுவதற்கு 200 கோடி ரூபாய் அளவிற்கு டெண்டர் எடுத்தவர்.

ஓ.பி.எஸ்சும் சேகர் ரெட்டியும் மிக நெருக்கமாக இருந்தவர் ஓ.பி.எஸ் திருப்பதியில் மொட்டை அடித்துயடித்த போது அவருடன் ஒன்றாக சேகர் ரெட்டி எடுத்த புகைப்படம் பரபரப்பாக பேசப்பட்டது.

பிறகு அமைச்சர் விஜயபாஸ்க ருடன் நெருக்கமாக இருந்தார்.விஜய பாஸ்கரின் உதவியால் பல டெண்டர்கள் அவர் எடுத்தார் இதுதொடர்பாக அன்றைக்கு எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க தலைவர் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டைம்ஸ் நவ் சேனல் வெளியிட்ட செய்தி குறித்து மு.க .ஸ்டாலின் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தார்.

சேகர் ரெட்டியுடன் தொடர்பில் இருக்கும் அமைச்சர்கள் அவர்கள் சம்பாதித்த சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

சேகர் ரெட்டி வீட்டில் பணமதிப்பிழப்பு காலத்தில் 34 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது அவர் மீது மூன்று வழக்குகள் போடப்பட்டிருந்தன. அதில் இரண்டு வழக்குகள் ரத்து செய்யப்பட்டது.

வருமான வரித்துறையிலும் மற்றும் சி.பி.ஐ யிலும் ரெட்டிக்கு நெருக்கமான பல அதிகாரிகள் இவருக்கு ஆதரவாக செயல்படுவதாக இன்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர் இப்படி பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சேகர் ரெட்டி கொஞ்சநாள் தமிழக அரசியலில் தலையிடாமல் ஒதுங்கி இருந்தார்.

தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் 18.5.2021 இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்து கொரோனா நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் நிதி அளித்துள்ளார்.

முதல்வரிடம் நிதி கொடுக்கும் சேகர் என்ற சேகர் ரெட்டி.

இதுதொடர்பாக தமிழக செய்தித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் சேகர் ரெட்டியின் பெயரை மறைத்துவிட்டு சேகர் என்று குறிப்பிடப்பட்டுள்ளனர்.
உண்மையிலேயே அதிகாரிகளுக்கு இவர் சேகர் ரெட்டி என்று தெரியாதா? இல்லை சேகர் ரெட்டி என்ற பெயரை மாற்றி சேகர் என்று குறிப்பிட்டுள்ளனரா?

முதல்வருக்கு தெரிந்துதான் இது நடக்கிறதா எதிர்க்கட்சியாக இருந்தபோது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்த ஸ்டாலின் இன்றைக்கு அவரிடம் இருந்து நிதி பெறுவது எப்படி நன்றாக இருக்கும் என்று உடன்பிறப்புகள் பெரும் வருத்தத்துடன் கேள்வி எழுப்புகின்றனர்.

சேகர் ரெட்டி க்கு முதலமைச்சரை சந்திக்க வழி ஏற்படுத்தி கொடுத்தது யார்?

அ.தி.மு.கவிற்கும் நமக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்கிறார்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் மூத்த உறுப்பினர்கள்.

தி.மு.க ஆட்சி காலத்திலும் சேகர் ரெட்டியின் கை ஓங்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க.!