chennireporters.com

#Selva’s Mark Group event; செல்வாஸ் மார்க் குழும நிகழ்ச்சியில் தாய்லாந்து ராணுவ தளபதி பங்கேற்பு.

செல்வாஸ் மார்க் குழுமத்தின் வெற்றி விழாவில் கலந்துகொள்ள தாய்லாந்து லெப்டினன்ட் ஜெனரல் பங்கேற்பு. திருவிடைமருதூரில் 2026 ஆம் ஆண்டு வெற்றி விழா பொதுக்குழு கூட்டத்திற்கு தாய்லாந்தின் நாட்டை சேர்ந்த லெஃப்டடிணண்ட் ஜெனரல் அனுதாத் புன்னாக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

தொழில்துறையில் தென்னிந்தியாவின் தனித்துவமாக இயங்கி வரும் தொழிலதிபர் செல்வகுமார் அவர்கள் தாய்லாந்து மற்றும் இந்தியா கூட்டுறவு அமைப்பின் சார்பில் செல்வாஸ் குழுமத்தில் வெற்றி விழா சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டமும் தாய்லாந்து இந்தியா கூட்டுறவு தொழில் வர்த்தக ஒப்பந்தம் சார்பாகவும் இயற்கை சுற்றுச்சூழலை காத்திடவும் மாற்றுத்திறன் அதன் வளர்ச்சி தொழில் துறை தொடர்பான கலந்தாய்வாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தென் தமிழகத்தில் உள்ள கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் சாரதா மஹாலில் செப்டம்பர் 26ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் தமிழகத்திற்கு வருகை தரும் சிறப்பு விருந்தினர் தாய்லாந்து நாட்டு ராணுவத்தின் முன்னாள் லெப்டினன்ட் ஜெனரல் அணுத புன்னாக் அவர்களை தமிழ் மரபுப்படி சிறப்பான முறையில் வரவேற்க சிறப்பான ஏற்பாடுகளை செல்வாஸ் குழுமம் செய்து வருகிறது.

விழாவில் பங்கேற்க வரும் தாய்லாந்து ராணுவத்தின் முன்னாள் லெப்டின்னட் அண்டை நாடுகளின் ஒருங்கிணைப்பு மையத்தின் இயக்குனராகவும் அங்கீகரிக்கப்பட்டவர் தாய்லாந்து நாட்டில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி வழங்கும் ரே ஆப் ஹேப்பினஸ் தொண்டு நிறுவன கூட்டமைப்பின் நிறுவி அதன் தலைமை பொறுப்பையும் வகித்து வருகிறார்.

செல்வாஸ் குழுமத்தின் தாய்லாந்து இந்தியா கூட்டுறவு தொழில் அபிவிருத்தி மற்றும் தொழில் கூட்டமைப்பு பங்குதாரராகவும் இணைந்து பணியாற்ற ஒப்பந்தம் நடைபெற உள்ளது இதில் சில சிறப்பான ஆலோசனைகளை வழங்கவும் உள்ளார்.

அனுதத் புன்னாக் ஒரு தாய் நாட்டவர் மற்றும் முக்கிய புன்னாக் குடும்பத்தைச் சேர்ந்தவர், ராயல் தாய் ராணுவத்தில் முன்னாள் லெப்டினன்ட் ஜெனரலாகவும், அண்டை நாடுகளின் ஒருங்கிணைப்பு மையத்தின் இயக்குநர் ஜெனரலாகவும் அங்கீகரிக்கப்பட்டவர். தாய்லாந்தில் அனாதை குழந்தைகளுக்கு உதவி வழங்கும் “ரே ஆஃப் ஹேப்பினஸ்” தொண்டு கூட்டமைப்பை நிறுவியதற்காகவும் அவர் அறியப்படுகிறார் . கூடுதலாக, அவர் பல்வேறு வணிக முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார் மற்றும் சர்வதேச பொறியியல் பொது நிறுவன லிமிடெட் (IEC) இன் முன்னாள் இயக்குநராக இருந்தார்.

தாய்லாந்து அரச இராணுவம்: அவர் லெப்டினன்ட் ஜெனரல் பதவியை வகித்து, அண்டை நாடுகளின் ஒருங்கிணைப்பு மையத்தின் இயக்குநர் ஜெனரலாகப் பணியாற்றினார். தாய்லாந்தில் அனாதை குழந்தைகளை ஆதரிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தொண்டு நிறுவனமான ரே ஆஃப் ஹேப்பினஸ் கன்சோர்டியத்தை அவர் நிறுவினார்.அவர் BBG & PALLAS INVESTMENT GROUP PNG LIMITED உட்பட பல நிறுவனங்களில் இயக்குநராகவும் பங்குதாரராகவும் பட்டியலிடப்பட்டுள்ளார், மேலும் முன்னர் சர்வதேச பொறியியல் பொது நிறுவன லிமிடெட் (IEC)இன் இயக்குநராகவும் பணியாற்றினார் . அவர் பொது சேவை மற்றும் ராஜதந்திரத்தில் ஈடுபட்டுள்ளார், குறிப்பாக 2018 இல் தாய்லாந்திற்கான மலேசிய தூதரை சந்தித்தார்.

2024 ஆம் ஆண்டில், தாய்லாந்தின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (SEC), ஒரு உயிரி எரிபொருள் மின் உற்பத்தி நிலையம் மற்றும் பிளாஸ்டிக் மறுசுழற்சி வசதியில் முதலீடுகள் தொடர்பான ஊழல் செயல்கள் தொடர்பாக அவருக்கும் மற்றவர்களுக்கும் எதிராக குற்றவியல் புகாரைப் பதிவு செய்தது.

இதையும் படிங்க.!