சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் உணவகம் சுகாதாரமற்ற முறையில் செயல்படுகிறது என்று சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சுத்தமில்லாத சில காட்சிகளை படம்பிடித்து காட்டுகிறார்கள்.
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
உணவகத்தில் உள்ள டேபிள்களை சுத்தம் செய்யாமலும் தரைகளை சுத்தம் செய்யாமல் இருப்பதால் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.
சென்னையில் முக்கியமான மருத்துவமனையாக செயல்பட்டு வரும் அரசு ஸ்டான்லி மருத்துவமனை இந்த மருத்துவமனைக்கு சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்கள் பிற மாநிலங்களில் சேர்ந்த நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்

தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சொல்லக்கூடிய மருத்துவமனையில் செயல்பட்டு வரும் உணவகத்தில் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும் டேபிள்களை சுத்தம் செய்யாமல் உணவகத்தில் தரைப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் இது பற்றி அங்குள்ள ஊழியர்கள் கேட்டால் அலட்சியமாக பதில் அளிப்பதாகவும் மிரட்டும் தொணியில் பேசுவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டை வைக்கின்றனர். 
மருத்துவமனை முதல்வர் உள்ளிட்ட மருத்துவமனை நிர்வாக அதிகாரிகள் ஆய்வு செய்து பொதுமக்கள் சிரமமின்றி உணவகத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசு இதுபோல் அலட்சியத்துடன் செயல்படும் மருத்துவமனை உணவாக ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுபிரமணியம்.
ஸ்டான்லி மருத்துவமனை மட்டுமல்ல சென்னையில் உள்ள எல்லா அரசு மருத்துவமனைகளின் நிலையும் இதுதான்.என்கிறார் ஒரு நோயாளி.
ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் அமைச்சர்களின் உதவியாளர்களின் உறவினர்கள் என ஏதாவது ஒரு திமுக அமைச்சரவையில் உள்ளவர்களின் பரிந்துரை அல்லது லெட்டர் பேட் , போன் கால், போன்றவற்றை எடுத்துக் கொண்டு மருத்துவமனையில் வந்தால் தான் தரமான சிகிச்சை இல்லை என்றால் அவர்களுக்கு வழங்கப்படும் வசவு மொழிகளை சொல்லி மாளாது.
எதற்கெடுத்தாலும் அரசு ஊழியர்களை டாக்டர்களை அடித்தாலோ சண்டை போட்டாலோ போலீசை அழைத்து மிரட்டுவது அல்லது கைது செய்வது என இதையே வாடிக்கையாக வைத்துக் கொண்டு எல்லா விதமான மோசடி வேலைகளிலும் அரசு மருத்துவமனையில் உள்ள சில ஊழியர்கள் சில டாக்டர்கள் சில நிர்வாகிகள் பலர் இந்த வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.சேகர்பாபு.
இதை தடுக்கும் விதமாக தமிழக முழுவதும் உள்ள அரசு தலைமை மருத்துவமனை தாலுக்கா மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் ஒவ்வொரு வாரமும் பொதுமக்கள் குறைகளை கேட்கும் வகையில் புகார் பெட்டி வைக்க வேண்டும். வாரம் ஒரு முறை பொது மக்களின் பிரச்சினைகளை கேட்கும் வகையில் நேர்முக கூட்டம் பொதுமக்கள் மற்றும் அரசு டாக்டர்கள் இரு தரப்பும் உட்கார்ந்து பேச கூடிய ஆலோசனை கூட்டங்களை புதிதாக பதவி ஏற்றிருக்கிற தமிழக வெற்றிக்கழக அரசு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை மாநகர மேயர் பிரியா.
சிலர் பொதுமக்கள் இணையதளத்தில் இந்த செய்தி குறித்து தூய்மையாக இல்லாத மருத்துவமனைகளில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுபிரமணியம் அல்லது ஜால்ரா பாபு சென்னை மாநகர மேயர் பிரியா மூவரையும் வைத்து குப்பையை கூட்டச் செய்து டேபிளை துடைக்க வைக்க வேண்டும் என்று தவெக தொண்டர்கள் தங்களது ஆசைகளை தெரிவித்து வருகின்றனர். அரசு இதை உடனே செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய்க்கு டேக் செய்தும் வருகின்றனர்.
