chennireporters.com

தமிழகத்தின் முதலமைச்சராகிறார் மு.க. ஸ்டாலின்.

mk.staalin
மு.க. ஸ்டாலின்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க 125 இடங்களை பெற்று ஆட்சி அமைக்கிறது.அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் 17 இடங்களையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி 4 இடங்களையும் கம்யூனிஸ்டுகள் தலா இரண்டு இடங்கள் என மொத்தம் நான்கு இடங்களையும் ம.தி.மு.க நான்கு இடங்களையும் பெற்று திமுக கூட்டணி 159 இடங்களை  வென்றுள்ளது.அதேபோல அ.தி.மு.க 66 இடங்களைப் பெற்று கூட்டணி கட்சிகளான பாட்டாளி மக்கள் கட்சி ஐந்து இடங்களையும் பா.ஜ.க நான்கு இடங்களையும் பெற்றுள்ளது.

ஏற்கனவே தி.மு.க ஆட்சி அமைக்கும் என்கிற நிலை பரவலாக பேசப்பட்டு வந்தது.தமிழகத்தில் ஏற்பட்ட பெட்ரோல் டீசல் விலை உயர்வு, எரிவாயு சிலிண்டர் விலை,சேலம் எட்டு வழி சாலை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடி துப்பாக்கி சூடு என பல்வேறு அராஜக வன் முறைகளுக்கு எதிராக மக்கள் ஒரு எதிர்ப்பான மன நிலையை கொண்டிருந்தனர்.

அந்த மனநிலையின் வெளிப்பாடு தான் இன்றைக்கு தி.மு.க வெற்றி பெறுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.இன்னும் முடிவுகள் சரிவர தெரியாத காரணத்தினால் தற்போது தி.மு.க கூட்டணி 159 இடங்களைப் பெற்றுள்ளது. பத்தாண்டுகளுக்குப் பிறகு தி.மு.கவின் தலைவர் ஸ்டாலின்  தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்கப் போகிறார்.பொது மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப அவர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப இந்த ஆட்சி செயல்படும் என்பதை தி.மு.க.வினர் பெரும் பாலானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க.!