#abandoned Paranthur airport ; கைவிடப்படும் பரந்தூர் விமான நிலையம் விரிவாக்கப்பணி, தமிழக அரசு முடிவு, பொதுமக்கள் மகிழ்ச்சி.

June 2, 2026

By இரா. தேவேந்திரன்.

பரந்தூர் விமான நிலையம் விரிவாக்க பணி தொடர்பாக தமிழக அரசு கைவிடப்போவதாக தகவல்கள் பரவி வருகிறது. இந்த செய்தியால் அந்த பகுதி பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அதனுடைய பாதிப்பு அதிகமாக  இருக்கும் என்கின்றர் பொருளாதாரா நிபுனர்கள். தமிழ்நாட்டின் வான்வழிப் போக்குவரத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில், சுமார் 32,700 கோடி ரூபாய் வரையிலான முதலீட்டில் இந்த பரந்தூர் பசுமை விமான நிலையம் திட்டமிடப்பட்டது. ஆண்டுக்குச் சுமார் 10 கோடி பயணிகளைக் கையாளுவது, இரண்டு அதிநவீன ஓடுதளங்கள் (Runways), பிரம்மாண்டமான சரக்கு போக்குவரத்து மையம் (Cargo Hub) மற்றும் பன்னாட்டு வர்த்தகங்களை ஈர்க்கும் ஏரோசிட்டி (AeroCity) ஆகியவை இந்த மெகா திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.விமான நிலையத்தை சுற்றி 50,000 கோடி ரூபாய் அளவில் மிகப்பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களுடன், அதிவேக மெட்ரோ ரயில், விரைவுச்சாலை இணைப்புகள், AeroCity எனத் தமிழகத்தின் அடுத்த 20 ஆண்டுகால வளர்ச்சியைத் தீர்மானிக்கக்கூடிய திட்டங்கள்.

Master plan for Parandur airport under preparation: TIDCO MD | Maritime Gateway - South Asia’s Premier Shipping and Logistics News Portal

பரந்தூர் மெட்ரோ காரிடார், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தால் சென்னை நகரின் போக்குவரத்து முகவரியே மாறவிருந்தது. பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் ஆகிய முக்கியத் தொழில்துறை பகுதிகளைப் பரந்தூர் விமான நிலையத்துடன் இணைக்கும் வகையில் 15,906 கோடி ரூபாய் மதிப்பில் 53 கிலோமீட்டர் நீளத்திற்கு அதிவேக மெட்ரோ ரயில் காரிடார் திட்டமிடப்பட்டிருந்தது.சுமார் 20 மெட்ரோ ரயில் நிலையங்களுடன் அமையவிருந்த இந்த வழித்தடத்திற்கான நில கைப்பற்றல் மற்றும் ஆரம்பகட்டப் பணிகளுக்காக 2,126 கோடி ரூபாய் ஏற்கனவே முந்தைய தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டிருந்தது.

பெங்களூரு விரைவுச்சாலை, அதிவேக ரயில்போல் பரந்தூர் விமான நிலையத்தை ஒரு சர்வதேச லாஜிஸ்டிக்ஸ் மையமாக மாற்றுவதற்குப் போக்குவரத்து இணைப்புகள் மிக முக்கியப் பங்கு வகிக்கவிருந்தன. சென்னை – பெங்களூரு விரைவுச்சாலையுடன் (Chennai-Bengaluru Expressway) பரந்தூர் நேரடியாக இணைக்கப்படவிருந்தது. இதுமட்டுமன்றி, சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களுக்கு இடையே திட்டமிடப்பட்டுள்ள அதிவேக ரயில் காரிடாரில் (HSR Corridor) பரந்தூர் ஒரு முக்கிய நிறுத்தமாக அமையவிருந்தது. மேலும், விமான நிலையப் போக்குவரத்தை எளிதாக்க இரண்டு முக்கிய சாலை வழித்தடங்கள் இறுதி செய்யப்பட்டிருந்தன.

பரந்தூரில் சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்கு அருகிலேயே ஒரு தனி ‘சரக்கு கிராமம்’! | Parandur airport news latest – parandur airport to have a separate cargo village near TIDCO - Tamil Nativeplanet

முதலாவதாக, பல்லூர் முதல் சோகண்டி வரையிலான மாநில நெடுஞ்சாலை-58 (SH-58) பகுதியை 23.8 கிலோமீட்டர் நீளத்திற்குச் சேவைச் சாலைகளுடன் கூடிய 4 வழிச்சாலையாக விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டது.

இரண்டாவதாக, ஒரகடம் தொழில்துறை காரிடாரை இணைக்கும் வகையில் சிங்கபெருமாள் கோவில் முதல் பரந்தூர் வரை சென்னை பெரிபரெல் ரிங் ரோடு (CPRR) வழியாக 30.7 கிலோமீட்டர் நீள புதிய சாலை வழித்தடமும் வடிவமைக்கப்பட்டிருந்தது.ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் மற்றும் சிப்காட் (SIPCOT) தொழிற்பேட்டைகளை உள்ளடக்கிய தமிழகத்தின் மிகப்பெரிய உற்பத்தி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பகுதியை பரந்தூர் விமான நிலையம், மெட்ரோ, விரைவுச்சாலை மற்றும் சென்னை பெரிபெரல் ரிங் ரோடு ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்க இந்த உள்கட்டமைப்பு அத்தியாவசியமாக இருந்தது.

இதன் மூலம் கிடங்குகள் (Warehousing), மின்னணு சாதனத் தயாரிப்பு (Electronics Manufacturing), விண்வெளி உள்கட்டமைப்பு (Aerospace Logistics) மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் பல்லாயிரக்கணக்கான கோடி முதலீடுகளும், லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளும் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில்,சென்னை 2-வது சர்வதேச விமான நிலையமாகத் திட்டமிடப்பட்ட பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு முட்டுக்கட்டை போட்டுள்ள நிலையில், தற்போது அங்கு கைப்பற்றப்பட்ட 1700 ஏக்கர் நிலத்தில் சிப்காட் கட்டுவதற்கான பேச்சுவாத்தை தொடர்ந்து கொண்டிருப்பதால் பரந்தூர் விமான நிலைய திட்டத்தில் எவ்விதமான முடிவும் எடுக்காமல் அப்படியே வைத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.விமான நிலையம், அதிவேக மெட்ரோ ரயில், விரைவுச்சாலை இணைப்புகள், AeroCity எனத் தமிழ்நாட்டின் அடுத்த 20 ஆண்டுகால வளர்ச்சியைத் தீர்மானிக்கவிருந்த திட்டங்கள் அனைத்தும் முடங்கும் அபாயத்தில் இருக்கிறது.

இத்தகைய மாபெரும் விமான நிலையம் கைவிடப்படும் பட்சத்தில், அதனைச் சார்ந்து வரவிருந்த பல்லாயிர கோடி மதிப்பிலான தனியார் முதலீடுகளும், உலகளாவிய விநியோகச் சங்கிலி (Supply Chain) உள்கட்டமைப்புகளும் தமிழ்நாட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது..

இந்த உள்கட்டமைப்புச் சங்கிலி தொடர் உடைந்தால், சென்னைக்கு மேற்கே அமையவிருந்த இந்தியாவின் அடுத்த மாபெரும் பொருளாதாரக் காரிடார் தொடக்கத்திலேயே முடங்கி போவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் விஜய் தலைமையிலான அரசுக்கு எச்சரிக்கையும் கொடுத்திருக்கிறார்கள்.NEWSTRAIL | English daily published in Bengaluru & Dohaஇதையும் மீறி ஜோசப் விஜய் தலைமையிலான அரசு சென்னை பாரந்தூர் விமான நிலைய செயல்பாடுகளை நிறுத்துவது போல் தெரிகிறது…

Share:

இரா. தேவேந்திரன்.

June 2, 2026

Leave a Comment