அதிமுகவின் இரட்டை தலைமை குறித்து உச்ச நீதிமன்றத்தில் இரண்டு நாட்களாக வழக்கு நடைபெற்று வருகிறது. இதில் ஓபிஎஸ் தரப்பில் உள்ள நியாயங்களை தனது வாதத்தின் மூலம் மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார் எடுத்து வைத்துள்ளார்.
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்காக கட்சி விதிகளில் திருத்தம் செய்துள்ளனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று கட்சி விதிகளில் எங்கெங்கு உள்ளதோ அதை பொதுச்செயலாளர் என்று மாற்றி உள்ளனர் என்று வாதிட்டார்.
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்காக கட்சி விதிகளில் திருத்தம் செய்துள்ளனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று கட்சி விதிகளில் எங்கெங்கு உள்ளதோ அதை பொதுச்செயலாளர் என்று மாற்றி உள்ளனர் என்று வாதிட்டார்.
நேற்று மாலை 4.30 மணி வரை வாதங்கள் நீடித்ததால் விசாரணையை இன்று மதியம் 2 மணிக்கு தள்ளி வைத்தார்.
இன்று இந்த வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கியதும் வைரமுத்து வழக்கறிஞரும், ஓ.பன்னீர் செல்வம் வழக்கறிஞரும் முதலில் வாதங்கள் செய்ய உள்ளனர். அதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் சி.ஏ.சுந்தரம் வாதாட உள்ளார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் இன்று நிறைவு செய்ய வேண்டும என்று நீதிபதிகள் கூறி உள்ளதால் அ.தி.மு.க. வழக்கு விசாரணை இன்று முடிவுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் பெரும் ஆவலாக உள்ளது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமா? அல்லது இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியா? என்ற சர்ச்சைக்கு வரும் பத்தாம் தேதி அன்று வழங்கப்படும் தீர்ப்பில் அன்று விடை கிடைத்துவிடும்.