chennireporters.com

அரசு மகளிர் பள்ளியில் புதிய அறிவியல் ஆய்வுக்கூட கட்டிடம் திறப்பு.

திருவள்ளூர் அடுத்த மணவாள நகரில் உள்ள அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளிக்குத்தேவையான அறிவியல் ஆய்வுக்கூடம் மற்றும் நூலகம் , குடிநீர் வசதி செய்து தரவேண்டும் என்று பள்ளி நிர்வாகம் கோரிக்கை வைத்திருந்தது.

 

அதன் அடிப்படையில் ஒருங்கிணைந்த பள்ளி ஐ.எஸ்.எஸ்.இ.  திட்டத்தின் கீழ் ரூபாய் 36. 46 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. மேற்படி கட்டிடங்களை பள்ளிக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது .

நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பொ. அமுதா தலைமை தாங்கினார்.  சிறப்பு விருந்தினராக திருவள்ளூர் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் கலந்துகொண்டு கட்டிடங்களை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் அரசியல் கட்சியைச் சார்ந்த பிரமுகர்கள் உள்ளாட்சித் துறை பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் முடிவில் தலைமை ஆசிரியர் அமுதாவுடன் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இதையும் படிங்க.!