chennireporters.com

கடன் கொடுத்த டாக்டரை அடித்த பெண் வழக்கறிஞர் மீது போலீஸ் வழக்கு.

வி.ஆர். மாஹாலில் டாக்டரை ஒரு பெண் வழக்கறிஞர் அடிக்கும்  சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.  இது குறித்து நாம் விசாரித்த போது ஓய்வு பெற்ற போலீஸ அதிகாரியின் மருமகள் நடந்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் நம்மிடம் தெரிவித்தனர்.

கடன் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட டாக்டரை சென்னையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் அடித்து உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  இது தொடர்பாக சென்னை திருமங்கலம் போலீசார் பெண் வழக்கறிஞரை கைது செய்தனர்.

டாக்டர் பிரபு திலக்.

மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலத்தை சேர்ந்தவர் டாக்டர் இந்திரா இவர் சென்னையில் கொளத்தூரில் புதிய மருத்துவமனை ஒன்றை கட்டி வருகிறார்.  அந்த பணிகளை முன்னாள் டிஜிபி திலகவதியின் மகன் டாக்டர். பிரபு திலக் பொறுப்பாளராக இருந்து கவனித்து வருகிறார். பிரபு திலக்கின் மனைவி ஸ்ருதி இவரை 2007 ஆம் ஆண்டு பிரபு திலக் திருமணம் செய்து கொண்டார்.

ஸ்ருதி டாக்டர் இந்திராவிடம் குடும்ப செலவிற்காக 8 லட்சம் ரூபாய் கடனாக பணம் வாங்கியுள்ளார்.  கொடுத்த  பணத்தை திரும்ப கேட்டபோது தர முடியாது என்றும் மிரட்டி தராமல் ஏமாற்றியதாக   கூறப்படுகிறது. இது தொடர்பாக ஸ்ருதி குடும்பத்தாருடன் டாக்டருக்கு மோதல் இருந்துள்ளது.

கண்ணுசாமி

இந்நிலையில் பிரபு திலக்கிற்கும் ஸ்ருதிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனியாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் 25ஆம் தேதி அண்ணா நகரில் உள்ள

வி.ஆர்.மாலில்  உள்ள ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்த டாக்டர் இந்திரா  பிரபு திலக் மற்றும் அவரது நண்பர்கள்  இருந்துள்ளனர்.  அப்போது அங்கு சென்ற ஸ்ருதி அவரது அப்பா கண்ணுசாமி மற்றும் கண்ணுசாமியின் மனைவி உஷா ஆகியோர் டாக்டர் இந்திராவை அசிங்கமான வார்த்தைகளால் திட்டி மூவரும் அடித்து உதைத்துள்ளனர்.

                                                                  வழக்கறிஞர் ஸ்ருதி

வழக்கறிஞர் ஸ்ருதி தனது செருப்பால் டாக்டரை அடித்து அவரின் ஆடைகளை கிழித்துள்ளார் மேலும் தனது கணவர் பிரபு திலக்கையும் அடித்து காயப்படுத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் அங்குள்ள சிசி டிவியில் பதிவாகியுள்ளது.

இது தொடர்பாக டாக்டர் இந்திரா திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் ஸ்ருதி அவரது அப்பா கண்ணுசாமி அவரது அம்மா உஷா ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக பிரபு திலகை நாம் விசாரித்த போது அவரது மனைவி நடத்தை சரியில்லாதவர் என்றும் பல ஆண்களுடன் அவருக்கு பழக்கம் இருக்கிறது என்று தெரிவித்தார்.

வக்கீல் ஸ்ருதி அவரது அம்மா உஷா

மேலும் டாக்டரிடம் வாங்கிய பணத்தை தராமல் இழுத்து அடித்தது தவறு என்றும் அந்த பணம் என்னிடம் கேட்காமல் எனக்கு தெரியாமல் வாங்கி இருக்கிறார்கள் என்றும் சொன்னார். மேலும் பெண் வழக்கறிஞர் ஸ்ருதி ஏற்கனவே திருமணம் ஆனவர்.

அவரை நான் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டேன் எனக்கும் ஏற்கனவே திருமணம்  ஆகியிருக்கிறது.  இருப்பினும் சுமுகமாக தான் வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது. ஸ்ருதியின் நடத்தை சரியில்லாமல் போனது கண்டு மனம் வேதனை அடைகிறது வார்த்தைகளால் சொல்ல முடியாது அவ்வளவு இருக்கிறது.

அவர் தனிமனித ஒழுக்கமற்றவராக நடத்தை சரியில்லாதவராகவே இருந்து வருகிறார் என்று முடித்துக் கொண்டார்.  வீட்டிலிருந்து 16 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு ஒரு தடவை வீட்டை விட்டு ஓடிப் போய்விட்டார். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போனார் டாக்டர் பிரபு திலக் இது தொடர்பாக வழக்கறிஞர் ஸ்ருதியை தொடர்பு கொண்டு அவரது கருத்தை அறிய முயன்றோம் அவர் நமது அழைப்பை எடுக்கவில்லை.

இதையும் படிங்க.!