chennireporters.com

#aiadmk split into two; எடப்பாடிக்கு கல்தா; அதிமுக இரண்டாக உடைந்தது. வேண்டும், மீண்டும் சசிகலா..

#TN 2026 Tamil Nadu assembly election.  #ADMK party news. #Special story big story.

தமிழக சட்ட மன்றத்தில் தவெக தனது பெரும்பாண்மையை நிருபித்து ஆட்சியை தக்கவைத்து கொண்டது. தமிழக வெற்றி கழக அரசுக்கு ஆதரவாக 140 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். அதில் சி.வி.சண்முகம் மற்றும் வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் 25பேர் ஆதரவு தெரிவித்தனர். முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்.

தவெகவிற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிச்சாமி அணியை சேர்ந்த 22 பேர் எதிராக வாக்களித்தனர். இந்த நிலையில் அதிமுக இரண்டாக உடைந்தது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியும் வேலுமணி தலைமையில் ஒரு அணியும் உருவானது.எடப்பாடி பழனிச்சாமி.

ஜெயலலிதா இறப்புக்கு பிறகு அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டது.  அப்போது சசிகலா முதலமைச்சராவார் என்றும் அவர்தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பொதுச்செயலாளர் என்றும் பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஏற்கனவே கர்நாடகாவில் உள்ள வழக்கின் தீர்ப்பு வெளியானதால் சசிகலா பெங்களூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். தோழியிலிருந்து தலைவி வரை: வி.கே. சசிகலாவின் அரசியல் பயணம் - BBC News தமிழ்சசிகலா.

அதன் பிறகு அவசரமாக அதிமுக பொதுக்குழு கூடி ஒரு முடிவெடுத்து எடப்பாடி பழனிச்சாமிக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது.  எடப்பாடி பழனிச்சாமியும் முட்டி போட்டுக்கொண்டு தவழ்ந்து சசிகலா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி முலமைச்சர் பதவியை பெற்றார். பின்னாளில் சசிகலாவுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி போர்கொடி தூக்கி அதிமுகவை கைப்பற்றினார். இதில் ஓபிஎஸ்சுக்கும் எடப்பாடிக்கும் மோதல் ஏற்பட்டு ஓபிஎஸ் கட்சியில் இருந்து விலகினார். அதன் பிறகு அதிமுகவில் மூன்று அணிகளாக பிரிந்தது.  சசிகலா தனியாகவும்,  ஓ பன்னீர்செல்வம் தனியாகவும்,  டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்கிற ஒரு கட்சியை தொடங்கி தனியாக சென்று விட்டார். மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்..எம்ஜிஆர் எனும் மந்திர சொல்! வாத்தியாராய் வணங்கும் மக்கள்! காரணம்? | Today is the birthday of MGR popularly known as the puratchi ...எம் ஜி ஆர்.

அதன் பிறகு கட்சியையும் ஆட்சியையும் தக்க வைத்துக் கொள்ள எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான எம்எல்ஏக்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து கடந்த ஐந்து ஆண்டு காலம் வெற்றிகரமாக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டனர் ஆனால் அதில் பல்வேறு ஊடல்களும் பல முறைகேடுகளும் நடந்து வந்து அதன் பிறகு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் எடப்பாடி தலைமையிலான அதிமுகவினர் கூட்டணி வைத்தனர். அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு 10 நாள் கெடு விதித்துள்ளார் தமிழக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் - தி இந்துஅதில் பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணி தரப்பு பாஜக எடப்பாடி பழனிச்சாமி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என பல்வேறு கட்சியின் கூட்டு சேர்ந்து கூட்டணி அமைத்தனர் அந்தத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக படுதோல்வி அடைந்தது.  இதில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலைமையிலான அரசு ஆட்சி அமைத்தது தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க போதிய இடம் இல்லாததால் விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் முஸ்லிம ஆகிய கட்சிகளுடன் துணையுடன் ஆட்சி அமைத்தது. தற்போதைய சபாநாயகர்.. முன்னாள் மதபோதகர் போல. 😜😜 | அருப்புக்கோட்டை அரண்கள் | Facebookசபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

அதன் பின்னர் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க விஜய்க்கு சி.வி சண்முகம் வேலுமணி தலைமையிலான ஒரு அணி தனியாக உருவாகி சபாநாயகரை சந்தித்து கடிதம் கொடுத்தனர் எடப்பாடி தலைமையிலான ஒரு அணியினரும் சபாநாயகர் இடம் கடிதம் கொடுத்தனர்.  எனவே அதிமுக தமிழ்நாட்டில் இரண்டாக உடைந்து தற்போது கவலைக்கிடமான நிலையில் உள்ளது. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சி.வி.சண்முகம் அணியினரின் எம்.எல்.ஏ பதவி பறிபோகுமா? தப்பிக்க இருக்கும் ஒரே வழி என்ன?

இந்த நிலையில் சில அதிமுக தலைவர்கள் மீண்டும் சசிகலாவிடும் கட்சியை ஒப்படைக்க வேண்டும் என்றும் சசிகலா தலைமையிலான அணி தலைமையில் தான் அதிமுக இயங்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  இந்த நிலையில் கட்சி கட்டுப்பாடுகளை மீறி தனி அணியாக உருவாகி கொரடாவின் உத்தரவை மீறி செயல்பட்ட 25 எம்எல்ஏக்களை மாவட்ட செயலாளர்களையும் எடப்பாடி நீக்கி அதிரடி காட்டியுள்ளார். தவெகவுக்கு அதிமுகவின் எஸ்.பி. வேலுமணி அணி ஆதரவு- சி.வி.சண்முகம் பரபரப்பு | Former Minister C.V. Shanmugam Claims AIADMK's S.P. Velumani Camp Supporting TVK, Demands General Council Meeting ...சி.வி சண்முகம் மற்றும் எஸ்பி வேலு.

இதனை எதிர்த்து சி.வி சண்முகம் மற்றும் எஸ்பி வேலுமணி தலைமையில் ஆனோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் இது குறித்து சசிகலாவின் ஆதரவு பெற்ற சில முக்கிய அரசியல் தலைவர்களும் முக்கிய விஐபிகளும் சசிகலாவுக்கு எடப்பாடி பழனிச்சாமி செய்த துரோகம் மீண்டும் அவரையே நோக்கி வந்து ஜெயலலிதா ஆத்மா வரை அடித்து நொறுக்கி இருக்கிறது என்கிறார்கள்.இரும்புப் பெண்மணி' ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் அன்று அவரை நினைவுக் கொள்வோம்! | YourStoryஜெயலலிதா.

அதிமுகவின் நிரந்தர எதிரியான திமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு முதலமைச்சர் பதவி பெற்றுவிட வேண்டும் என்று நினைத்த எடப்பாடி பழனிச்சாமியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் நாங்கள் தனி அணியாக செயல்பட்டோம் என்று சிவி சண்முகம் தரப்பினரும் இவர்களுக்கு பதவிதான் முக்கியம் என்று விஜயை ஆதரித்து அமைச்சர் பதவி பெற்றுவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி அணியினரும் மாறி மாறி குற்றம்  குற்றம் சாட்டிக் கொள்கின்றனர். இருப்பினும் கடந்த ஐந்து ஆண்டுகளாக எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவுக்கு செய்த துரோகத்தை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் சசிகலா தரப்பினர். மீண்டும் 'அம்மா' ஆட்சி.. எல்லாப் பெருமையும் சசிகலாவுக்கே... புதுவை அன்பழகன் புளகாங்கிதம்! | Sasikala secured ADMK ruling among the plot of DMK and congress: MLA Anbazhagan - Tamil ...சசிகலா.

எனவே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  கட்சியையும் அதிகாரிகளையும் ஆட்டிப்படைத்து அதாவது ராணுவ கட்டுப்பாட்டுடன் ஆட்சி நடத்தி வந்த ஜெயலலிதாவின் இயக்கத்தை எம்ஜிஆர் தோற்றுவித்த இயக்கத்தை எடப்பாடி பழனிச்சாமி என்கிற பதவி வெறி பிடித்த நபரின் செயலால் இன்றைக்கு அவர் நடுத்தெருவில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்கின்றனர் வேலுமணி அணியினர்.

இதையும் படிங்க.!