chennireporters.com

#tasmac strike is wrong; டாஸ்மாக் போராட்டம் தவறு, பணியாளர்களை உடனே பணி நீக்கம் செய்ய வேண்டும்.

டாஸ்மாக் பணியாளர்களின் போராட்டம் எந்த வகையிலும் நியாயமற்றது. ஒவ்வொரு கடை விற்பனையாளர் முதல் உயர் அதிகாரிகள் வரை கூடுதல் விலைக்கு மதுவை விற்பது மட்டுமல்லாமல் குடிமகன்களை அவமரியாதையுடனும் போலீசை வைத்து மிரட்டுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு தமிழகம் முழுவதும் பரவலாக எழுந்துள்ளது.

இந்த நிலையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம் நடத்துவது எந்த வகையிலும் ஏற்க முடியாது என்கின்றனர் தமிழக குடிமகன்கள். எனவே தமிழக முதலமைச்சர் அவர்களை உடனடியாக நிரந்தர பணி நீக்கம் செய்துவிட்டு ஏற்கனவே வேலையில்லா பட்டதாரிகளுக்கு அந்த பணியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக அரசு டாஸ்மாக் கடைகளில் பணியாற்ற அறிவிப்பு வெளியிட்டபோது எந்தவிதமான சலுகைகளையும் வழங்க முடியாது தினக்கூலி அடிப்படையில் தான் பணியமர்த்த முடியும் என்று ஏற்கனவே அறிவிப்பு ஆணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் டாஸ்மாக் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை அரசோ அல்லது பொதுமக்களோ எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அது மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடையில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மேலாளர்கள் மேற்பார்வையாளர்கள் என கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை இருக்கும் எந்த உயர் அதிகாரிகளும் நேர்மையானவர்களாக ஒருவர் கூட இல்லை என்பது அவமானத்தின் உச்சம். ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வாங்குவது அமைச்சர் தரப்பு மட்டுமல்ல ஒரு கடையில் பணியாற்றும் விற்பனையாளரிலிருந்து தொடங்குகிறது.

லஞ்சம் அதாவது ஒவ்வொரு மாவட்டத்தில் இருக்கும் டாஸ்மாக் குடோனில் பணியாற்று மேனேஜரிடம் ஒரு கடை விற்பனையாளர் தங்களுடைய கடையில் கிங்பிஷர் பீர் அல்லது TEN THOUSAND பீர் அதாவது மக்கள் விரும்பி குடிக்கும் பானங்கள் இல்லை என்று சொன்னால் உடனடியாக அந்த பானங்களை வேகமாக எங்கள் கடைக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காகவே மாவட்ட டாஸ்மாக் குடோனில் பணியாற்றும் மேலாளருக்கு பத்தாயிரம் ரூபாய் வரை லஞ்சமாக தருகிறார்கள். ஏன் என்று சொன்னால் அப்போது தான் அவர் கூடுதலாக மற்ற கடைகளுக்கு தருவதை விட்டுவிட்டு குறிப்பாக ஒரு குறிப்பிட்ட கடைக்கும் மட்டும் வேகமாக அந்த சரக்கை அனுப்பிவைப்பார்.

அதிலிருந்து தொடங்குகிறது லஞ்சம் .அது மட்டுமல்லாமல் அந்த பாட்டிலுக்கு கூடுதலாக ஒரு கடை விற்பனையாளர் பத்திலிருந்து 20 ரூபாய் வரை கூடுதலாக பெறுகிறார். சிலர் கூடுதலாக பணம் கொடுத்து வாங்க விரும்புகிற குடிமக்கள் பத்து ரூபாய் இருபது ரூபாயை பெரிதாகக் கண்டு கொள்ளாமல் தாங்கள் விரும்பும் சரக்கு இருந்தால் கூடுதலாகவே அவர்கள் தருகிறார்கள்.

ஆனால் இதே சூழலை எல்லா பொது மக்களிடமும் அதாவது எல்லா குடிமகன்களிடமும் கடையின் விற்பனையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். இல்லை என்று சொன்னால் கடையில் பணியாற்றும் விற்பனையாளர்கள் குடிமக்களை மிகக் கடுமையான ஆபாசமான வார்த்தைகளில் திட்டி மிரட்டுகிறார்கள். இல்லை என்று சொன்னால் அவசர போலீஸ் 100க்கு அழைத்து ஒருவர் கடை அருகே வந்து பெரும் தொந்தரவு செய்கிறார் என்று பொய்யான புகார் அளிக்கிறார்கள்.

உடனடியாக எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் அந்த பிரச்சனைகளை விட்டுவிட்டு ஹைவே பெட்ரோல் காரில் வேகமாக சம்பந்தப்பட்ட கடைக்கு வந்து குடிமகனை போலீசார் மிரட்டி அடித்து விரட்டுகிறார்கள். காரணம் ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் விற்பனையாளர் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கும் ரோந்து போலீசாருக்கும் தினமும் மாமுல் வழங்குகின்றனர். அது மட்டும் இல்லாமல் அவர்கள் விரும்பி குடிக்கும் சரக்கையும் இலவசமாக ஓசியில் தருகிறார்கள்.

அது மட்டும் இல்லாமல் ஒரு விற்பனையாளர் போலியாக அடையாள அட்டையை தயாரித்து தினக்கூலிக்கு இரண்டு பேரை கடையின் ஊழியர்களாகவே வேலைக்கு அமர்த்துகிறார். இது தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு புகார்கள் வந்தும் கூட டாஸ்மாக் உயர் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் கடையில் பணியாற்றும் ஒரு விற்பனையாளரின் சொத்து மதிப்பு சராசரியாக ஒரு கோடி ரூபாயிலிருந்து பத்து கோடி ரூபாய் வரை தங்களது சொத்து சம்பாதித்து இருக்கிறார்கள்.Tamil Nadu home secretary urged to ensure safety of Tasmac employees ahead of of dry days | Chennai News - Times of Indiaகுறிப்பாக ஒவ்வொருவரும் சொந்தமாக வீடு கட்டி விவசாய நிலம் வாங்கி கார் டிராக்டர் போன்ற பொருட்களையும் வாங்கியுள்ளனர் விற்பனையாளர்களின் சொத்து மதிப்பே 5 கோடியில் இருந்து 10 கோடி ரூபாய் வரை என்றால் அந்த கடையின் மேற்பார்வையாளர் கிளை மேலாளர் மாவட்ட மேலாளர் முதன்மை மேலாளர் என ஒவ்வொரு அதிகாரிகளின் சொத்து மதிப்பும் 10 மடங்கு உயர்ந்திருக்கிறது. இதை யாரும் இல்லை என்று மறுக்க முடியாது. Before dry day, Tamil Nadu's TASMAC registered Rs 200 crore business on Mondayலஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தமிழ்நாடு முழுவதும் ஒரு சர்வே நடத்தி ஒரு கடையில் பணியாற்றும் ஒரு விற்பனையாளரின் ஒரு ஆண்டு வருமானம் எவ்வளவு என்பதை ஆய்வு செய்தால் இந்த உண்மை வெளிவரும் எனவே தற்போது போராட்டம் நடத்தி வரும் டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகளை அரசு செவிசாய்க்காமல் உடனடியாக அவர்களை பணி நீக்கம் செய்து வேலையில்லாமல் தவிக்கும் மேற்படிப்பு பட்ட மேற்படிப்பு படித்த இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்கின்றனர்.M. K. Stalin - Wikipedia

பொதுமக்கள் இந்த டாஸ்மாக் கடையில் நடக்கும் முறைகேடுகளை ஆய்வு நடத்தி ஒவ்வொரு அதிகாரிகளின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை கூர்ந்து கவனித்து லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் அளித்த மூத்த பத்திரிகையாளர் கண்ணோட்டம் சண்முகம் என்பவர் கூறுகையில்..

அரசு இவர்களது கோரிக்கைகளை செவி சாய்க்காமல் உடனடியாக தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து விற்பனையாளர்கள் மற்றும் ஊழியர்களை எந்த தயவு தாட்சண்யம் இன்றி பணி நீக்கம் செய்து நிரந்தர பணி நீக்கம் செய்து புதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும்.

வேலையில்லா பட்டதாரிகள் தமிழ்நாட்டில் ஏறக்குறைய பல லட்சம் பேர் தினக்கூலிக்கும் குறைவான சம்பளத்திற்கும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்கள்.  எனவே அவர்களுக்கு அரசு டாஸ்மாக் கடையில் புதிய பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என்கிறார் மொத்த பத்திரிகையாளர் கண்ணோட்டம் சண்முகம்.

இதையும் படிங்க.!