chennireporters.com

திருத்தணி முருகன் கோயில் சி.சி.டி.வி விவகாரம் இரண்டு அர்ச்சகர்கள் பணி மாற்றம் செய்து அமைச்சர் உத்தரவு.

திருத்தணி முருகன் கோயிலில் கருவறையில் உள்ள உண்டியல் அருகில் இருந்த சி.சி.டிவியை துணியால் மூடி மறைத்த இரண்டு அர்ச்சகர்களை இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து இருவரையும் பணி மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

எதற்காக சிசிடிவி மறைக்கப்பட்டது என்பது குறித்து விசாரணை கமிஷன் வைக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முருகன் கோயிலுக்கு சொந்தமான மொத்த சொத்து எவ்வளவு, நிலம், வைப்புத்தொகை, பணம், ஆபரணங்கள் ஆகியவற்றை வெளிப்படையாக அரசு அறிவிக்க வேண்டும் என்று முருக பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதனை ஏற்று அமைச்சர் ஆவணம் செய்வாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

முருகன் கோவிலில் உள்ளூர் பிரமுகர்களுக்கு முதலிடமும் விஐபிகளுக்கு கட்டணம் இல்லாமல் சிறப்பு தரிசனமும் வழங்கப்படுகிறது பொது மக்களை நீண்ட நேரம் காக்க வைப்பது மட்டுமல்லாமல் அவ மரியாதையுடன் கோயில் ஊழியர்கள் மற்றும் ரசிகர்கள் பேசுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

காசு கொடுத்தால் கடவுள் அருகே உட்கார வைத்து சிறப்பு தரிசனம் செய்வார்கள் காசு இல்லை என்றால் கால் கடுக்க நின்று முருகனுக்கு அரோகரா போட்டு விட்டுத்தான் வர வேண்டும் இப்போதாவது இந்த கல்லா கட்டும் கோயில் ஊழியர்களுக்கும் வாசகர்களுக்கும் அமைச்சர் மணி கட்டுவாரா?

இதையும் படிங்க.!