தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர்
அருட்தந்தை .சொ.ஜோ.அருண்.சே.ச அவர்கள் தலைமையில் சிறுபான்மையினர் மக்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் அன்று (30.01.2025) நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் செயலாளர் சம்பத் .இ.ஆ.ப. ஆட்சியர் டாக்டர்.த.பிரபு சங்கர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாச பெருமாள் மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத் தலைவர் எம்.எம்.அப்துல் குத்தூஸ் (எ) இறையன்பன் குத்தூஸ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.பின்னர் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டுதலின்படியும் , தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தலின்படியும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அவர்கள் எங்களோடு வழி நடத்தலின்படியாகவும் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களிலும் சிறுபான்மையினர் மக்களிடம் குறைகளை கேட்டு தமிழ்நாடு அரசு செயல்படுத்த அனைத்து திட்டங்களும் சரியான முறையில் சென்றடைந்ததா என்று கள ஆய்வு மேற்கொண்டும் நலத்திட்டங்கள் அவர்களின் உரிமைகள் கொடுக்கப்பட்ட பாதுகாப்புகள் பற்றிய ஆய்வுகள் நடத்தி அவர்களுடைய குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யும் வகையில் கலந்தாய்வு கூட்டம் நடத்தியுள்ளோம்.
சிறுபான்மையினர் மக்கள் மீது அக்கரைகொண்டு 1989 ஆம் ஆண்டு சட்டபூர்வமாக சிறுபான்மையினர்காக தனி ஆணையத்தை உருவாக்கியவர் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தான் அதன் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சிறுபான்மையினர் மக்களின் பாதுகாப்பு, உரிமைகள், நலத்திட்டங்கள், அறிவித்தோடு மட்டுமல்லாமல் அதனை கண்காணித்தும் வருகிறார்கள். நலவாரிய உறுப்பினர்களுக்கு மொத்தம் 55 பயனாளிகளுக்கு ரூ. 7, 53,500 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் அருட்தந்தை சொ ஜோ அருண்.சே.ச அவர்கள் வழங்கினார்கள். தொடர்ந்து சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் அவர்களிடம் சிறுபான்மையினர் சங்கத்தைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை மனுக்கள் வழங்கினார்கள்.
ஜெயசீலன்.
கடந்த 30 ஆம் தேதி நடைபெற்ற இந்த விழாவில் துறை சார்ந்த அதிகாரியை ஒருவரை சந்தித்த ஒரு செய்தியாளர் அவரை பிஆர்ஓ அலுவலக அதிகாரிகள் டுபாக்கூர் ரிப்போர்ட்டர் என்கிறார்கள்.
அதாவது ஜெயசீலன் என்பவர் அந்த அதிகாரியை சந்தித்து நாங்கள் 40 பேர் இருக்கிறோம் என்று செய்தி போடுவதற்கு பணம் கேட்டு உள்ளார் அந்த அதிகாரியும் 12,500 பணம் கொடுத்து அனைவரும் பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.பணத்தை வாங்கி வந்த ஜெயசீலன் திருவள்ளுவர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிரசுரம்விற்கு வந்து ஒவ்வொருவருக்கும் தலா 200 ரூபாய் பிரித்துக் கொடுத்தார்.
டுபாக்கூர்களெல்லாம் வாங்கி சென்று விட்டார்கள்.
மீன் ஸ்ட்ரீம் மீடியாவில் வேலை பார்க்கும் பத்திரிகையாளர்கள் நீ யார் உனக்கு இங்கே என்ன வேலை நீ பணத்தை வசூல் செய்வதற்கு உனக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு அவரை தொலைத்தெடுத்து விட்டார்கள் அவரோ 300 ரூபாய் கொடுத்துவிட்டு அவர் 2000-க்கு மேல் சுருட்டி விட்டதாக குற்றம் சுமத்துகிறார்கள் 300 ரூபாய் கவர் வாங்கிய பத்திரிகையாளர்கள்.
அதுமட்டுமில்லாமல் பிஆர்ஓ அலுவலகத்தில் உள்ள சிலருக்கும் இந்த ஜெயசீலன் வாங்கி வந்த பணத்தில் உன் போன் தான் சிலருக்கு கொடுத்து இருக்கிறார்.
எந்த பத்திரிகலையும் இல்லாத இவரை ஏன் உள்ளே விடுகிறீர்கள் என்று சில பத்திரிகையாளர்களும் பி.ஆர்.வி கேட்டிருக்கிறார்கள் ஆனால் பிஆர்ஓ நான் அவரை உள்ளே விடுவதில்லை நீங்களே ஏன் அவரை பணம் வாங்க சொல்லுகிறீர்கள் என்று பிஆர்ஓ பத்திரிகையாளர்களை பார்த்து கேட்டதாகவும் சொல்கிறார்கள்.
வழிப்பறிக் கொள்ளையர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை, வழிப்பறிக் கொள்ளையர்கள் கையில் கத்தி, முகமூடி அணிந்து கொண்டு பணம் பறிக்கிறார்கள். பத்திரிகையாளர்கள் கையில் கேமரா, பேனா வைத்துக் கொண்டு பணம் பறிக்கிறார்கள்.கடந்த ஆண்டு இதேபோல அம்மா எக்ஸ்பிரஸ் என்கிற பத்திரிகையில் பணியாற்றிய மாறன் என்பவரை நியூஸ் தமிழில் பணியாற்றும் தமிழன் என்பவர் கவருக்கு ஏற்பட்ட பிரச்சனையில் அடித்து உதைத்த சம்பவம் நடந்தது.
இதுகுறித்து சில நேர்மையான பத்திரிகையாளர்களை கேட்டபோது செய்தி போடுவதற்கு பணம் தர வேண்டும் என்று எந்த பத்திரிகையை அலுவலகமும் விதிமுறை வகுக்க வில்லை விளம்பரம் போடுவதற்கு மட்டும்தான் பணம் வாங்குவார்கள் .ஆனால் செய்தி போட பணம் கொடுத்தால் தான் செய்தி போடுவேன் என்ற நிலையை உருவாக்கி விட்டார்கள் இந்த பத்திரிகையாளர்கள் இதுபோன்ற செய்தி திருவள்ளூர் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் இதே நிலையை உருவாக்கி விட்டார்கள் பத்திரிகையாளர்கள் என்கிறார்கள்.
கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் மனுவில் தங்களுடைய குறைகளை கலெக்டர் கேட்டறிவார் என்று மனு கொடுக்க வருபவர்களிடம் பணம் கேட்கும் பத்திரிகையாளர்களை பொதுமக்கள் எப்போது கண்டிக்கும் வகையில் நடந்து கொள்கிறார்களோ அப்போதுதான் பிச்சை எடுக்கும் செயலை பத்திரிகையாளர்கள் கைவிடுவார்கள் என்கிறார்கள் அறப்போர் இயக்கத்தை சேர்ந்தவர்கள்.
பத்திரிகையாளர்கள் இனிமேலாவது ஓரளவு நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும் மலத்தை தின்னாலும் மறைவாக தின்ன வேண்டும் என்கிற பழமொழியை பத்திரிகையாளர்கள் கடைபிடிக்க வேண்டும்.
இந்த செய்தி குறித்து சம்பந்தப்பட்டவர்கள் அவர்கள் தரப்பு விளக்கத்த அளித்தால் அதை நான் பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.