#thiruverkadod town planning officer arrested; லஞ்சம் வாங்கிய திருவேற்காடு நகரமைப்பு அலுவலர் கைது.

February 4, 2026

By இரா. தேவேந்திரன்.

திருவேற்காடு நகராட்சி நகரமைப்பு அலுவலர் சாந்தி என்பவர் 10000 ரூபாய் மனை பிரிவு அனுமதி வழங்க ஜெயலட்சுமி என்பவரிடம் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டது அடிப்படையில் ஜெயலட்சுமி அவர்கள் லஞ்சம் கொடுக்க வரும் விரும்பாததால் லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் கொடுத்த அடிப்படையில் இன்று திருவேற்காடு நகராட்சி நகராட்சி அலுவலர் சாந்தி என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தார்கள்

ஆவடி அடுத்த திருவேற்காடு நகராட்சியில் நகரமைப்பு அலுவலராக சாந்தி என்பவர் பணியாற்றி வருகிறார் இவரிடம் மனை பிரிவிற்கு அனுமதி கேட்டு வந்த பெண்ணிடம் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார் இதனை அடுத்து லஞ்சம் தர மறுத்த பெண் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளார் அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடியாக திருவேற்காடு நகராட்சிக்குள் நுழைந்து சோதனை நடத்தி சாந்தி என்பவரை கைது செய்தனர்.

நகரமைப்பு அலுவலர் சாந்தி.

இவருக்கு ஆதரவாக இருந்த லைசென்ஸ் சர்வேயர் சக்திவேல் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

 

லஞ்ச ஒழிப்புத் துறையில் சிக்கிய டவுன் பிளானிங் இன்ஸ்பெக்டர் சாந்தியின் சொத்து மதிப்பு சுமார் 50 கோடி ரூபாய் வரை இருக்கும் என்கின்றனர் திருவேற்காடு நகராட்சியில் பணியாற்றும் அதிகாரிகள். எந்த வேலையாக இருந்தாலும் குறைந்தபட்சம் 10,000 லஞ்சம் வாங்குவார் அதிகபட்சமாக 5 லட்சம் வரை வாங்குவார் சாந்தி என்கின்றனர். திருவேற்காடு நகராட்சியில் பணியாற்றும் ஊழியர்கள்.

அனைத்து லஞ்ச பணங்களும் சாந்தி வாங்கும் கட்டிங் அனைத்தும்  லைசன்ஸ் சர்வேயர் சக்திவேலிடம் தான் கொடுக்க வேண்டும். அவர் சாந்தி வீட்டிற்கு போகும்போது ஒரு ஹோட்டல் அருகே நின்று லஞ்சப் பணத்தை அவரிடம் வழங்குவார் என்கிறார்கள் திருவேற்காடு நகராட்சியில் பணியாற்றும் ஊழியர்கள்.

ஏற்கனவே திருவேற்காடு நகராட்சியில் கமிஷனராக வேலை பார்த்த பிரகாஷ் ஐஏஎஸ் க்கு நெருக்கமான கமிஷனர் சித்ரா அங்கு பணியாற்றும்போது பல லட்ச ரூபாய் பணத்தை போலி கையெழுத்திட்டு திருடி சென்றார் என்ற செய்தி நகராட்சி துறையில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

அதன் பிறகு சுகாதார ஆய்வாளர் ஸ்டீபன் மற்றும் கணேசன் அவருடன் பணியாற்றி அதிகாரிகள் பல கோடி ரூபாய் அளவிற்கு ப்ளீச்சிங் பவுடர் வாங்கியதில் கொள்ளையடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

இரா. தேவேந்திரன்.

February 4, 2026

Leave a Comment