“தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வசவப்பபுரம் பசும்பொன் நகரைச் சேரந்தவர் கூலித் தொழிலாளி சுடலைமுத்து.
இவருக்கு மாலை ராஜா (22) என்ற ஒரு மகனும், கவிதா (17) உட்பட மூன்று மகள்களும் உள்ளனர்.நேற்று (29.06.2021) கவிதாவின் அண்ணன் மாலைராஜா வெளியில் போய் விட்டு வீட்டிற்கு வந்தார்.
அப்போது சாப்பாடு கேட்டுள்ளார் அதற்கு கவிதா அண்ணனுக்கு சாப்பாடு போடாமல் செல்போனை பார்த்து கொண்டு இருந்தார்.
உடனே கோபமடைந்த மாலை ராஜா தன் தங்கையிடம் செல்போன் பயன்படுத்த
கூடாது என்று பல முறை சொல்லியும் நீ கேட்கவில்லை என்ன திமிர் உனக்கு என்று சண்டை போட்டு ள்ளார்.
வாய் தகராறு கை கலப்பில் முடிந்தது தனது அண்ணனிடம் சண்டை போட்டது மட்டுமல்லாமல் அசிங்கமாகவும் கவிதா பேசியதாக கூறப்படுகிறது.
இதில் கோபமடைந்த அண்ணன் மாலை ராஜா தனது தங்கை கவிதாவை வீட்டில் இருந்த அரிவாளால் உடல் முழுக்க பல இடங்களில் கை, கால், தலை, வாய் என் 25 இடங்களில் வெட்டியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த கவிதா தனது வீட்டில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார் கவிதாவின் வீட்டின் அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த கவிதாவை பாளைங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கவிதா உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக, தூத்துக்குடி
அவர்கள் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது, தலைமறைவான கவிதாவின் சகோதரர் மாலைராஜாவை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார் அதன் பிறகு தலைமறைவாக இருந்த மாலை ராஜாவை முறப்ப நாடு காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.