#Udayanidhi’s son insulted by female collector; உதயநிதி மகனுக்காக மதுரை மாவட்ட கலெக்டர் அவமதிப்பு? அண்ணாமலை கண்டனம்.

January 17, 2025

By இரா. தேவேந்திரன்.

நேற்றைய தினம் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி, அவரின் மகன் இன்பநிதி மற்றும் இன்பநிதியின் நண்பர்களும் கலந்துகொண்டனர்.உதயநிதி மகன் இன்பநிதிக்காக.. மதுரை மாவட்ட பெண் கலெக்டரை மேடையில் இருந்து அகற்றியதாக அண்ணாமலை ஆவேசம் | TN BJP Annamalai Questions Was Madurai Collector Removed from ...இன்பநிதி மற்றும் அவரது நண்பர்கள் அமர்வதற்காக மதுரை மாவட்ட ஆட்சியரை பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தள்ளி அடுத்த இருக்கையில் அமர சொன்னதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த சம்பவத்தை “தமிழகத்தின் இருண்ட காலமான திமுகவின் 2006 – 2011 ஆட்சிக் காலத்தை விட மோசமான அதிகார துஷ்பிரயோகம்.” என கண்டித்துள்ளார் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை.

இன்பநிதிக்காக எழுந்தேனா? அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் நடந்தது என்ன? மாவட்ட ஆட்சியர் விளக்கம் | Collector explains about the entertainment fee issue in Alanganallur ...அண்ணாமலை பதிவு:

அண்ணாமலையின் எக்ஸ் தள பதிவில், “மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக் காண, தனது மகன் இன்பநிதி மற்றும் அவரது நண்பர்களுடன் சென்றிருக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஜல்லிக்கட்டு விழா மேடையில் தனது மகனின் நண்பர்களை அமர வைப்பதற்காக, நாற்காலியில் அமர்ந்திருந்த மதுரை மாவட்ட ஆட்சியர் திருமதி. சங்கீதா அவர்களை, மேடையில் இருந்து அகற்றியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

https://youtu.be/Jnbu67PNBI4?si=YHfjjoUGwTV2LTkC

துணை முதலமைச்சர் மகனின் நண்பர்களுக்காக, பெண் மாவட்ட ஆட்சியரை நாற்காலியை விட்டு எழுந்திருக்க செய்வது, தமிழகத்தின் இருண்ட காலமான திமுகவின் 2006 – 2011 ஆட்சிக் காலத்தை விட மோசமான அதிகார துஷ்பிரயோகம்.

உதயநிதி மகன் இன்பநிதிக்காக.. மதுரை மாவட்ட பெண் கலெக்டரை மேடையில் இருந்து அகற்றியதாக அண்ணாமலை ஆவேசம் | TN BJP Annamalai Questions Was Madurai Collector Removed from ...

முதலமைச்சர் குடும்பத்துக்குச் சேவகம் செய்வதற்காகவே இருக்கும் அமைச்சர்கள் மேடையில் இருக்கையில், பெண் அரசு அதிகாரியை ஏன் அவமானப்படுத்துகிறீர்கள்?

Google செய்திகள்

துணை முதலமைச்சர் உதயநிதிக்கு, 2011 தேர்தல் முடிவுகளும், அதற்குப் பின் வந்த பத்து ஆண்டுகளும் நினைவிருக்கட்டும். இந்த மன்னராட்சி மன நிலைக்கு, தமிழக மக்கள் வரும் 2026 ஆம் ஆண்டு முடிவு கட்டுவார்கள்.” என குறிப்பிட்டுள்ளார்.

M.S. Sangeetha assumes office as Madurai Collector - The Hinduமதுரை ஆட்சியர் விளக்கம்:

இந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது மதுரை ஆட்சியர் சங்கீதா, “தவறான தகவல் பரவி வருகிறது. யாரும் யாரையும் அவமதிக்கவில்லை விழா சுமூகமாக நடைபெற்றது. ஒரு அமைச்சர் எழுந்து  பேசும்போது மாவட்ட ஆட்சியர் நிற்க வேண்டும் என்ற நெறிமுறைப்படிதான் (Protocal) நின்றேன். யாரும் என்னை நிற்கவோ, எழுந்து போகவோ சொல்லவில்லை. இங்கு நடந்தது எதுவும் தெரியாமல், கிடைக்ககூடிய புகைப்படங்களை வைத்து ஆளாளுக்கு ஒரு கதை சொல்கிறார்கள். அதற்கெல்லாம் நாம் பதில் சொல்ல முடியாது.” என்கிறார்.

Share:

இரா. தேவேந்திரன்.

January 17, 2025

Leave a Comment