chennireporters.com

#union tamilnadu; இணைந்தெழு தமிழ்நாடு குழுவில் அசத்தும் இளைஞர்கள்.

காங்கிரஸ் கட்சியில் இளைஞர்களை ஒன்று திரட்டி இணைந்தெழு தமிழ்நாடு என்ற ஒரு அமைப்பை கட்சிக்குள் ஏற்படுத்தி தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக  கட்சி பணியாற்றி வருகிறார் சசிகாந்த் செந்தில்.

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் ஆலோசனையின் பேரில் காங்கிரஸ் கட்சியில்  இணைந்தெழு தமிழ்நாடு  ஒரு அமைப்பு இந்தியா கூட்டணியின் வேட்பாளர்களின் வெற்றிக்காக தமிழ்நாட்டில் உருவெடுத்து பாடுபட்டு வருகிறது.

இந்த அமைப்பின் தமிழ்நாடு மாநில தலைமை ஒருங்கிணைப்பாளராக இனாமுல் ஹசன்  என்பவர் செயல்பட்டு வருகிறார். இவர் காங்கிரஸ் கட்சியின் ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் தமிழ்நாடு மேலிட பொறுப்பாளராகவும் இந்த அமைப்பின் நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார்.

அதேபோல  N.K முஹம்மது (எ) வாசித் கிர்மானி என்பவர் இந்த அமைப்பின் கொங்கு மண்டல பொறுப்பாளராக மிகத் திறமையாக செயல்பட்டுவருகிறார்.  நீலகிரி இணைந்தெழு தமிழ்நாடு பாராளுமன்ற ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இவர் ஈரோடு நீலகிரி மேற்பார்வையாளராகவும் செயல்பட்டு  வருகிறார். தற்பொழுது கொங்கு மண்டல பாராளுமன்ற பகுதியான ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர்,  பொள்ளாச்சி, நீலகிரி இந்தப் பகுதியில் இந்தியா கூட்டணி வெற்றிக்காக மிகத் திறமையாக செயல்பட்டு தொண்டர்களை வழிநடத்தி வருகிறார்.

ஈரோட்டை சேர்ந்த இவர்  இணைந்தெழு தமிழ்நாடு  அமைப்பில் செயல்பட்டு வரும் சசிகாந்த் செந்தில், இனாமுல் ஹசன் அடுத்த வரிசையில் N.K முஹம்மது காங்கிரஸ் கட்சியில் இவரது தந்தை  அந்த பகுதியில் 50 வருடங்களுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் சிறப்பாக பணியாற்றி வருபவர். N.K முஹம்மது  காங்கிரஸ் கட்சியில் 21 வருடங்களுக்கு மேலாக கட்சியின் வளர்ச்சிக்கு உழைத்து வருகிறார், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில இணைச் செயலாளராகவும் ஈரோடு மே 5 அனைத்து வியாபாரிகள் நலச்சங்க செயல் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.

தமிழ்நாடு சசிகாந்த் செந்தில் ரத்ததான பேரவை என்று 28/12/23 ஒரு வாட்ஸ் அப் குழுவை உருவாக்கி தமிழகம் முழுவதும் ரத்த தானங்களை செய்து வருகிறார். ஒரு சிலருக்கு ரத்த தான செய்யும்பொழுது போக்குவரத்துக்கான செலவையும் தானே ஏற்று வருகிறார். திருவள்ளுரின் வேட்பாளராக அறிவித்த நாள் முதல் பிரச்சாரம் முடியும்  இறுதி நாட்கள் வரை தொடர்ந்து தனது பணிகளை மிகச் சிறப்பாக செய்து வந்தார். தனது தேர்தல் பிரச்சாரத்தில் உண்மையாக உழைக்கும் நபர்களுக்கும் அவர்களின் திறமைகளை கண்டறிந்து அவர்களை உயர்த்துவதில் மிகவும் பங்காற்ற கூடியவர் சசிகாந்த் செந்தில்.


பல்வேறு சமூக பணிகளையும் மக்களுக்கான சேவைகளையும் திறம்பட செய்து வருகிறார். இணைந்தெழு தமிழ்நாட்டின் சசிகாந்த் செந்தில் மற்றும் இணைந்தெழு தமிழ்நாட்டின் மாநில ஒருங்கிணைப்பாளரான புதுவை மாநிலத்தை சேர்ந்த இனாமுல் ஹசன் இவர்களின் நன்மதிப்பை பெற்று விளங்கி வருகிறார் N.K முஹம்மது (எ) வாசித் கிர்மானி.  காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடமும் பொதுமக்களிடமும் சசிகாந்த் செந்தில் பேசும் காணொளிகளை உடனுக்குடன் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறார். சசிகாந்த் செந்தில் என்று தமிழ்நாட்டில் சொன்னால் பல்வேறு இடங்களில் கிருமாணி என்பவர் ஞாபகம் வரும் அளவுக்கு இவரது பணி சிறப்பாக இருக்கிறது.

இவர்களின் ரத்ததானம் குறித்த வாட்ஸ்அப் குழுவில் நாள் ஒன்றுக்கு பத்துக்கும் மேற்பட்டோருக்கு தேவையான ரத்த தானங்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக உதவி செய்து வருகின்றனர். இந்த குழுவில் தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் உதவிகள் கேட்டு செய்திகள் வருகிறது. அந்த உதவிகளுக்கும் இவர்கள் வேகமாக பணியாற்றி வருவது தான் இவர்களின் தனிச்சிறப்பு.

இதையும் படிங்க.!