பிரியங்காவின் முகத்திரை கிழியும் நேரம் வந்து விட்டது என்று சமூக வலைதலங்களில் நெட்டிசன்கள் பிரியங்காவைப்பற்றியும் அவரின் முதல் கணவர் பற்றியும் அவரது வாழ்க்கை பற்றி பல்வேறு செய்திகளை பகிர்ந்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாகவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் ஏற்பட்ட பிரச்னைகள் குறித்த செய்திகள் காட்டு தீயாய் பரவி வருகிறது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடர்பாக மணிமேகலை வெளியிட்ட அறிக்கையில், பிரியங்காவின் பெயரைக் குறிப்பிடாமல், தனக்கு நடந்தது, தனது சுயமரியதையை சீண்டிப் பார்க்கும் செயல் எனக் கூறி, நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துவிட்டார். அதன் பின்னர் ஒரு வீடியோவும் வெளியிட்டுவிட்டார்.
மணிமேகலை தனக்கு நடந்த விஷயத்தை வெளிப்படையாக கூறியுள்ளார். இதற்கு இன்னும் பிரியங்கா தரப்பில் இருந்து எந்தவிதமான ரியாக்ஷனோ, பதிலோ வரவில்லை. பிரியங்கா எதாவது பதில் கொடுப்பாரா என பலரும் இப்போதுவரை காத்துக் கொண்டு உள்ளனர். குக் வித் கோமாளி சீசன் 5.. மணிமேகலை வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? இப்படியான நிலையில், பலரும் மணிமேகலைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தனர்.
ஆனால் மணிமேகலைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தவர்கள் யாரும், விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 5இல் இருந்தவர்கள் இல்லை. அதேநேரத்தில் விஜய் டிவியில் தற்போது பணியாற்றிக் கொண்டு இருப்பவர்களும் இல்லை. பிரச்னை வெளியே தெரிந்த சில நாட்களில் கருத்து தெரிவித்தவர்கள் அனைவரும் மணிமேகலைக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்தனர். விஜய் டிவி பிரபலங்கள்: மா.கா.ப. ஆனந்த், புகழ் உள்ளிட்டோர் இது அவர்களின் தனிப்பட்ட பிரச்னை, அதில் நாம் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை. என்ன நடந்தது எனத் தெரியாமல் பலரும் பலவிதமாக பேசி வருகின்றார்கள் என கூறினர்.
சில தினங்களுக்கு முன்னர், இந்த பிரச்னை தொடர்பாக வீடியோ வெளியிட்ட குரேஷி, பிரியங்கா மீது தவறு எதுவும் இல்லை எனக் கூறினார். இதுமட்டும் இல்லாமல், மணிமேகலை கொஞ்சம் நிதானமாக செயல்பட்டு இருந்தால் பிரச்னையே வந்திருக்காது எனக் கூறினார். அதேபோல் பிரியங்காவைப் பற்றித் தெரியாமல் நீங்களாக அவர் மீது தவறான பிம்பத்தை கட்டமைக்க வேண்டாம் எனக் கூறியும் வருகின்றனர்.
விஜய் டிவியில் பிரியங்கா தொகுத்து வழங்கும், வழங்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களை பலர் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கின்றனர். அவர்களும் பிரியங்காவுக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியின் ரசிகர்களாக இருக்ககூடிய பிரபலங்கள் மணிமேகலைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இப்படி மணிமேகலைக்கு ஆதரவாகவும், பிரியங்காவுக்கு ஆதரவாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் குறிப்பாக மணிமேகலை தமிழ் பொண்ணு, பிரியங்காவின் முழுபெயர் பிரியங்கா தேஷ்பாண்டே. பாண்டே என்பது அவரது சாதியின் பெயர். தமிழ் மண்ணுக்கு அந்நியமான இனத்தைச் சேர்ந்தவர். தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வந்தவர்கள், இன்றைக்கு தமிழ் பொண்ணான மணிமேகலைக்கு குடைச்சல் கொடுத்துள்ளார். பார்த்தீர்களா வந்தேறிகளின் ஆதிக்கத்தை? எல்லா துறைகளிலும் தமிழர்கள் நசுக்கப்படுகின்றார்கள்.
எனவே நாம் அனைவரும் தமிழச்சி மணிமேகலையின் பக்கம் நிற்கவேண்டும் என்ற கருத்தை முன் வைத்து வருகின்றனர்.
உண்மையில் யார் பக்கம் நியாயம் உள்ளதோ, அவர்களுக்கு ஆதரவாக கருத்து சொல்வதில் தவறில்லை. ஆனால் அதனை வேறு ஒரு பிரச்னையாக பரிணமிக்க வைக்கும் படியாக பிரச்னையை திசை திருப்புவது என்ன மாதிரியான மனநிலை என கேள்வி கேட்க வைக்கின்றது. பிரச்னையை இரு இனங்களுக்கு இடையில் பகையை வளர்க்கும் வகையில் திசை திருப்ப நினைப்பவர்களுக்கு ஒன்று மட்டும் சொல்லாம், “உங்கள் பருப்பு இங்கு வேகாது..
இது தமிழ்நாடு” ரசிகர்கள் யாரை ரசிக்கவேண்டும் யாருக்கு ஆதராவாக நிற்கவேண்டும் என்பதில் தெள்வாக முடிவேடுப்பார்கள். பிரியங்கா ரொம்ப மோசம் என்பதையும் அவர் புருஷனே அதனாலதான் போனான். பயில்வான் சொன்ன அந்த விஷயம்! மணிமேகலையுடன் சண்டை போட்ட பிரியங்கா பற்றி எல்லாம் ரசிகர்கள் பார்த்தும் படித்தும் தெரிந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
விஜய் டிவியில் பிரியங்கா வைத்தது தான் சட்டம். குக் வித் கோமாளி செட்டில் நடந்த சம்பவம் பிரியங்கா செய்த பாலிட்டிக்சால் மணிமேகலை மணிமேகலை நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.