chennireporters.com

#vimala corruption who amassed crores ; கோடிகள் குவித்த லஞ்ச ஒழிப்புத்துறை பெண் இன்ஸ்பெக்டர் விமலா சஸ்பெண்ட்.

#Special story ,
#big story,  #corrupted inspector, #suspend story 

லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை குறி வைத்து பல லட்சங்களை லஞ்சமாக வாங்கிய பெண் இன்ஸ்பெக்டர் விமலா திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த டிஎஸ்பி ஜாய் தயால்  ஊட்டிக்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் கோடீஸ்வரி விமலா.

சென்னையைச் சேர்ந்த வருவாய்த்துறை அதிகாரி  ஒருவர் லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஒரு புகார் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் விமலா விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.  அவர் புகாருக்குள்ளான வருவாய்த்துறை அதிகாரியை அழைத்து பேசியுள்ளார். Chennai Police Commissioner passes externment order banning 3  history-sheeters from entering the city - The Hinduலஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபி அருண்.

உங்கள் மீதான புகாரை விசாரித்து முடிக்க வேண்டும் என்றால் பெரிய அளவில் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.  ஆனால் லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத வருவாய்த்துறை அதிகாரி இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அருணிடம் புகார் அளித்துள்ளார்.  இது குறித்து ஐஜி துரை குமார், எஸ்பி தேவராணி ஆகியோர் விசாரணை நடத்த அருண் உத்தரவிட்டார்.  அவர்கள் விசாரணை நடத்தியதில் இன்ஸ்பெக்டர் விமலா பணம் கேட்டு மிரட்டியது உறுதிப்படுத்தப்பட்டது.  அவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தனர். இதை ஏற்றுக் கொண்ட ஏடிஜிபி அருண் இன்ஸ்பெக்டர் விமலா மீது அதிரடி நடவடிக்கை எடுத்தார்.லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் கோடீஸ்வரி விமலா.

வருவாய்த்துறை அதிகாரியிடம் லஞ்சம் கேட்ட விஷயத்தில் விமலா அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். லஞ்சப் புகாரில் இன்ஸ்பெக்டர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் லஞ்ச ஒழிப்புத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  அதோடு புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்ததோடு இன்ஸ்பெக்டருக்கு ஆதரவாக இருந்ததாக டிஎஸ்பி ஜாய் தயால் ஊட்டிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  இந்த இருவர் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கை லஞ்ச ஒழிப்புத்துறையில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.வழக்குகளில் சாதகமாக இருக்கும் அம்சங்களை மட்டுமே பயன்படுத்தும் லஞ்ச  ஒழிப்புத்துறைவிமலா கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஒரே துறையில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. சென்னை சிட்டி யூனிட் ஐந்தாம் பிரிவில் பணியாற்றும் விமலா தனக்கு வேண்டப்பட்ட ஏஜென்ட்கள் மூலம் எந்தெந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில் எந்த அதிகாரிகள் லஞ்சம் வாங்குகிறார்கள்.  அவர்களுடைய சொத்து என்ன பின்புலம் என்ன என்பதை குறித்து தகவல் சேகரித்துக் கொண்டு அவராகவே ஒரு புகாரை ஒரு ஏஜென்ட் மூலம் எழுத வைத்து அந்தப் புகாரை தனக்கு வரும்படியே செய்வாராம். அதன் பிறகு அந்த புகாரை எடுத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட பத்திரப்பதிவு அதிகாரியை நேரில் சந்தித்து தங்கள் மீது புகார் வந்திருக்கிறது.  உங்களை கைது செய்யப் போகிறோம் என்று மிரட்டி பணம் வாங்குவாராம்.  இப்படி பல லட்ச ரூபாயை லஞ்சமாக பெற்றுள்ளார் என்கிறார்கள்.  அவரது அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள். விமலாவிற்கு லஞ்சம் தராத அதிகாரிகள் மீது இதே பாணியை பின்பற்றி இவரே இவரது கையில் 50 ஆயிரம் அல்லது 60 ஆயிரம் ரூபாய் வரை எடுத்துக் கொண்டு எந்த பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்திற்கு ரெய்டுக்கு செல்கிறார்களோ அங்கு ஏதாவது ஒரு மூலையில் வைத்து விட்டு பணத்தை இவரை எடுப்பாராம். சம்மந்தப்பட்ட அதிகாரியை அழைத்து இவ்வளவு ரூபாய் உங்களது அலுவலகத்தில் கைப்பற்றி இருக்கிறோம். எந்த ஊரிலும் பத்திரப்பதிவு செய்யலாம்; மாற்றத்துக்கு தயாராகிறது பதிவுத்துறைஇப்போது உங்கள் கைது செய்யப் போகிறோம் என்று கேட்டவுடன் என்னை எப்படியாவது விட்டு விடுங்கள் மானம் மரியாதை போய்விடும் நான் தற்கொலை செய்து கொள்வேன். எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறேன். என்னை விட்டு விடுங்கள் என்று பல அதிகாரிகள் பல லட்ச ரூபாய் வரை பணம் லஞ்சமாக  கொடுத்ததாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் கோடீஸ்வரி விமலா.

இப்படி விமலாவின் சொத்து மதிப்பு 100 கோடியை தாண்டும் என்கின்றனர்.  சென்னையில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளும் ஒவ்வொரு குடியிருப்புகளும் ஒன்றை கோடி, இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள வீடுகள் உள்ளன என்றும் அவர் வீட்டில் உள்ள அனைவருக்கும் சொகுசு கார்கள் அனைவரும் ஆப்பிள் ஐபோன், ஆப்பிள் லேப்டாப் போன்ற பொருட்களை பயன்படுத்தி வருகிறார்கள் என்கிறார்கள் அவரது உறவினர்கள். லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் கோடீஸ்வரி விமலா.

லஞ்சப் புகாரில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் விமலா மின் சொத்துக்களை ஆய்வு செய்து அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்கின்றனர் சில நேர்மையான அதிகாரிகள்.

அவரது உறவினர்கள் மற்றும் பினாமி பெயர்களில் வாங்கியுள்ள வீடுகளை பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகளை மிரட்டி சந்தை மதிப்பை குறைத்துக் காட்டி பல வீடுகளை பத்திரப்பதிவு செய்துள்ளார் என்றும் சொல்லுகிறார்கள் பத்திரப்பதிவு துறையில் இவருக்கு லஞ்சம் கொடுத்து ஏமாந்த அதிகாரிகள். எனவே அரசு இவரை நிரந்தர பணி நீக்கம் செய்து இவரது சொத்துக்களை முடக்க வேண்டும் என்கின்றனர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்.

எங்கள் இணையதளத்தில் சென்னை ரிப்போர்ட்டர்ஸ்.காம் Chennai reporters.com வெளியாகும் செய்திகளை சில டுபாக்கூர்கள் போலி பத்திரிகையாளர்கள் காப்பி பேஸ்ட் செய்து எங்களது செய்திகளை திருடி அவர்களது வாட்ஸ் அப் குரூப்பில் பரப்பி பல அதிகாரிகளை மிரட்டி பணம் பறிப்பதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. எனவே எங்களது இணையதளத்தில் இருந்து எங்களுடைய அனுமதி இல்லாமல் யாரும் எங்களது கருத்துக்களை பிரதி எடுத்து தங்களது இணையதளத்தில் பதிவிடக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம். மீதி செயல்படுபவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இதையும் படிங்க.!