#Big story, #Vck party news, #alur shano’s news, #samaran rasing question, #thirumavalavan news
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நடந்த நேர்பட பேசு நிகழ்ச்சியில் ஆளூர் ஷாநவாஸ் பங்கேற்று பேசினார். அதில் பல்வேறு கேள்விகளை நெறியாளர் கேட்டுக்கொண்டே வந்தார் . நிகழ்ச்சின் கடைசி கேள்வியாக நெறியாளர், ஆளூர் ஷாநவாஸ்-யை பார்த்து இப்படி கேட்கிறார்….
சமரன் மாவட்ட துணைச்செயலாளர்.
ஒரு மணி நேரத்தில் நீங்க சொன்ன கருத்துகளை வைத்துப் பார்க்கும் போது நீங்கள் திமுகவின் பக்கம் நிற்கிறீர்களோ என்று எனக்கு தோன்றுகிறது என்று கேட்கிறார்.
அதற்கு ‘நான் நியாயத்தின் பக்கம் நிற்கிறேன். அப்படி நிற்கவில்லை என்றால் அது வரலாற்றுப்பிழை ஆகிவிடும்’ என்கிறார் ஷா நவாஸ்.
ஆளூர் ஷாநவாஸ்.
தோழர் ஆளூர் ஷாநவாஸ் அவர்களுக்கு எழுத்தாளரும் விடுதலை சிறுத்தைகளின் கட்சி செங்கற்பட்டு மாவட்ட துனை செயலாளர் தோழர் சமரன் அவர்கள் ஆளூர் ஷாநவாஸ் அவர்களை பார்த்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இதோ அந்த கேள்விகள் பின் வருமாறு;
ஆளூர் ஷா நவாஸ் அவர்களே..
கடந்த சில மாதங்களாக மக்கள் தலைவர் அண்ணன் எழுச்சித் தமிழர் அவர்களை குறி வைத்து வீசப்பட்ட அவதூறுகளுக்கும் வீண்பழிகளுக்கும் எவ்வித எதிர்வினையும் ஆற்றாமல், கண்டும் காணாமல் கைகட்டி வாய் மூடி இருந்தீர்களே அது வரலாற்றுப் பிழை இல்லையா?
அரசியல் வாதங்களில் திமுகவின் நிலைப்பாடுகளுக்கு ஆதரவாக பேசுவது மட்டும் தான் கட்சியின் செயல்பாடுகளா? ஒருவேளை அப்படி முட்டுக் கொடுப்பதுதான் நியாயத்தின் பக்கம் நிற்பது என்பதா?
விசிகவில் இருந்துகொண்டே காங்கிரஸ் இளைஞரணித் தலைவருக்கு அடி போட்டீர்களே, அதுதான் நியாயத்தின் பக்கம் நிற்பது என்பதா?
விசிகவில் இருந்துகொண்டே திமுகவின் ஃப்ரண்ட் ரோவுக்கு அடி போட்டீர்களே, அதுதான் நியாயத்தின் பக்கம் நிற்பது என்பதா?
ஆளூர் ஷாநவாஸ்.
தவெகவை விமர்சிப்பது வேறு. விசிகவின் அரசியல் நிலைப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்குவது வேறு!
விசிகவின் தனித்த அரசியல் நிலைப்பாட்டை கேள்விக்குறியாக்குவது தான் உங்களின் நியாயத்தின் பக்கம் நிற்பது என்பதா?
தோழரே.! விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருப்பது என்பது வேறு; விடுதலைச் சிறுத்தைகளாக இருப்பது என்பது வேறு!
சமரன், மாவட்ட துணைச்செயலாளர்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சி .


இப்படி முடிகிற முகநூல் பதிவின் பின்னூட்டத்தில் பல வாசகர்கள் நலம் விரும்பிகள் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் பல்வேறு கேள்விக்கணைகளை ஆளூர் ஷாநவாஸ் பார்த்து கேட்கிறார்கள். ஐந்து வேளை தொழுகிற மதத்தில் பிறந்து அன்பையும் பாசத்தையும் போதிக்கிற மதத்தில் பிறந்து பதவி வெறி பிடித்து அலைகிற அல்லது ஒரு குடும்பம் மட்டுமே தமிழகத்தை ஆள வேண்டும் என்று நினைக்கிற கட்சிக்குள் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதுதான் நீதியின் பக்கம் நிற்பதா?
கருணாநிதி யார் திமுக குடும்பம் எப்படி என்பதையெல்லாம் கண்ணதாசன் எழுதிய வனவாசம் என்னும் புத்தகத்தில் எழுதி இருக்கிறாரே அதை நீங்கள் படித்திருக்கிறீர்களா அப்படி படித்திருந்தால் நீங்கள் தான் நீதியின் பக்கம் நிற்பவரா?
திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிய காலத்தில் முக்கிய தலைவர்களில் ஒருவராக கூட இல்லாத கருணாநிதி திமுகவை எப்படி ஆக்டோபஸ் பறித்துக் கொண்டதோ அதுபோல திமுகவை பறித்துக் கொண்டு யாரும் வந்து விடக்கூடாது என்று பல்லாயிரம் கோடிகளை தன்னுடைய குடும்ப சொத்துகளாக மாற்றி தனது மாமன், மச்சான், பேரன் பிள்ளைகள் என தனது குடும்பங்களே ஆலமரமாய் தழைத்து ஓங்குகிற அளவுக்கு பல்லாயிரம் கோடிகளை குவித்து வைத்திருக்கிற திருட்டு திராவிட திமுகவின் பக்கம் நிற்பது தான் ஆளுர் ஷாநவாசின் நீதியின் பக்கம் நிற்கும் நீதியா?
சமரன் மாவட்ட துணைச்செயலாளர், ஆளூர் ஷாநவாஸ்
கருணாநிதியின் வாரிசாக இருக்கிற கனிமொழியை தமிழக அரசியலில் கொண்டுவரக் கூடாது என்று ஸ்டாலின் குடும்பம் மருமகன், துர்கா ஸ்டாலின் போன்றவர்கள் நினைக்கிறார்களே அந்த கட்சியில் தங்களை இனைத்துக் கொண்டு அரசியல் பயணம் மேற்கொள்ளவேண்டும் என்று நினைப்பதுதான் நீதியின் பக்கம் நிற்பதா தான் தர்மமா? நியாயத்தின் பக்கம் நிற்கும் நீதியா? என பல்வேறு கேள்விகளை சரமாரியாக கேட்டுள்ளனர் பொதுமக்கள். இதற்கெல்லாம் ஆளூர் ஷாநவாஸ் எப்படி பதில் சொல்லப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
