chennireporters.com

#Puzhal BDO; புழல் பிடிஒ ஆபிஸ் ஊழல் அதிகாரிகள் மீது கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?

லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கிய அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகமும் அரசும் இது வரை எந்த நடவடிக்கையிம் எடுக்காமல் இருப்பதற்கு காரணம் மாதவரம் தொகுதி திமுக எம்எல்ஏ சுதர்சனம் தான் காரணம் என்கின்றனர் எதிர்கட்சியினர். 

 

Sudharsanam Sundaram, DMK MLA from Madavaram - Our Neta

திமுக எம்எல்ஏ சுதர்சனம்

ஊழல் அதிகாரிகள் திருவள்ளூர் மாவட்டம், புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 25/04/2024 அன்று 11 மணி நேரமாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. இதில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. போலிசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்களும் செய்தியும் வெளியாகி இருந்தது.

அதேபோன்று கடந்த நான்கு ஆண்டுகளாக மனைப்பிரிவிற்கு அனுமதி வழங்கியது குறித்த ஆவணங்களையும் மற்றும் வீடு, தொழிற்சாலைகள், தொழிற்கூடங்கள், குடோன்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கியது குறித்தும் பல்வேறு ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர். ஏறக்குறைய 50 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பதாகவும் அது தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எடுத்துச் சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிடிஒ சித்ரா

மேலும் புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரசு ஊழியர்களாக இல்லாத தினக்கூலி ஊழியர்களான ஈஸ்வரி மற்றும் யுவாதிகா பணியாற்றி வருகின்றனர். கடந்த நான்கு வருடங்களாக புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொடுக்கப்படும் கட்டிடம் மற்றும் மனை பிரிவு அனுமதிகளுக்கு லஞ்சம் பெறுவதற்காக புழல் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆணையாளராக பணி புரிந்த மற்றும் பணி புரியும்  அமிழ்தமன்னன், சாந்தி, ராமகிருஷ்ணன், வேதநாயகம், அம்மு, சித்ரா பெர்னண்டோ மற்றும் மணி சேகர் ஆகியோர் லஞ்சப் பணத்தில் சம்பளம் கொடுத்து பணி அமர்த்தி வைத்துள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளில் பலமுறை ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அவர்கள் புழல் ஊராட்சி அலுவலகத்தில் ஆய்வு நடத்தியுள்ளார் ஆனால் எந்த ஒரு அனுமதியும் , அரசாணையும் இல்லாமல் லஞ்சப் பணம் பெறுவதற்காக  மட்டுமே இந்த இரண்டு நபர்களையும் வேலைக்கு அமர்த்தியதைப் பற்றி கேள்வி எழுப்பாதது ஏன்? ஏன் என்றால் சம்திங்க் தான் காரணம்.

கடந்த நான்கு ஆண்டுகளில் ஏறக்குறைய 400க்கும் மேற்பட்ட கட்டிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 40 க்கும் மேற்பட்ட ”லே” அவுட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு பிளாட் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பெறப்படுகிறது. ஒரு மனைப்பிரிவிற்கு 50 முதல் 300 பிளாட்டுகள் வரை அப்ரூவல் கேட்டு மனு அளிக்கப்படுகிறது. அந்த மனுக்களுக்கு அதாவது ஒரு பிளாட்டுக்கு 25 ஆயிரம் ரூபாய் என மேற்கூறிய ஈஸ்வரி மற்றும் யுவாதிகா ஆகியோர் மூலம் பெற்று சதவீத அடிப்படையில் அதிகாரிகளும் புழல் ஊராட்சி ஒன்றிய சேர்மன் அவர்களும் லஞ்சமாக பெற்றுள்ளனர். புழல் ஊராட்சி ஒன்றிய சேர்மன் தங்கமணி அவரது கணவர் திருமால் அவர்கள் பில்டிங் கட்டுவதற்கு ஒரு சதுர அடிக்கு 50 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக அதிகாரிகள் வாங்கி வருகின்றனர்.

இதுவரை 150 பில்டிங் கட்டப்பட்டுள்ளது. இதில் மட்டும் ஏறக்குறைய 6 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சமாக பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.வீடு கட்டுவதற்கு ஒரு பைலுக்கு 14,000 ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சமாக வாங்குகின்றனர். அதன் அடிப்படையில் பத்தாயிரம் வீடுகள் கட்டுவதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கி உள்ளனர். வீடுகள் கட்ட அனுமதி வழங்கியதில் மட்டும் 14 கோடி ரூபாய் வரை லஞ்சமாக பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சித்ரா பெர்னான்டோ புழல் ஊராட்சி ஒன்றிய ஆணையாளராக இருந்த பொழுது மட்டும் ஏறக்குறைய 7 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்ததாக கூறப்பட்டுள்ளது. விளாங்காடுபாக்கம் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியதில் மட்டும் ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மணி சேகர் புழல் ஊராட்சி ஒன்றிய ஆணையாளராக பொறுப்புக்கு வந்த பிறகு பல்வேறு புகார் கடிதங்கள் அவருக்கு வந்தது. குறிப்பாக விளங்காடுபாக்கம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் அதாவது விளாங்காடுபாக்கம், கண்ணம்பாளையம், பள்ளிக்குப்பம், தர்காஸ், கோமதியம்மன் நகர், சக்ரா கார்டன் ஆகிய பகுதிகளில் அனுமதி பெறாமல் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் தனியார் நிறுவனங்கள், பிளாஸ்டிக் தொழிற்சாலைகள், குடோன்கள் மற்றும் அரிசி ஆலைகள் அனுமதி இல்லாமல் தற்போது வரை இயங்கி வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.

இதன் மீது எந்தவித நடவடிக்கை எடுக்காமல் இருக்க அந்த தனியார் நிறுவன உரிமையாளர்களிடம் சித்ராபெர்னான்டோ அவர்கள் பல கோடி ரூபாய் லஞ்சமாக பெற்றுள்ளார் என்ற தகவலை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு ஆளும் கட்சியைச் சார்ந்த ஒரு விஐபி தனி நபர் ஒருவர் மூலம் புகார் அனுப்பியதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சேர்மன் தங்கமணி அவரது கணவர் திருமால்

குறிப்பாக புழல் ஊராட்சி ஒன்றிய திமுக ஒன்றிய சேர்மன் தங்கமணி அவரது கணவர் திருமால் அனைத்து நிர்வாக விஷயத்திலும் தலையிட்டு ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சமாக பெற்றுள்ளதாக தெரிய வந்ததுள்ளது. இது குறித்து அந்த அலுவலகத்தில் பணியாற்றும் சில அதிகாரிகளே  லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Planning பிரிவில் பணியாற்றும்  இந்த இரண்டு பெண் ஊழியர்களுக்கு அரசு அனுமதி இல்லாமல் பணி அமர்த்தி லஞ்சப் பணத்தில் ஊதியம் கொடுத்த அதிகாரிகள் மீது சட்டரீதியாகவும் துரை ரீதியாகவும் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தடவடிக்கை எடுக்காமல் மௌனம் காத்து வருவது மில்லியன் டாலர் கேள்வி. புழல் ஊராட்சி ஒன்றியத்தில் பெறப்படும் லஞ்ச பணங்களில் மாவட்ட நிர்வாகத்திற்கும் சதவீத அடிப்படையில்  லஞ்சம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் அப்ரூவல் வழங்கும் விஷயத்தில் பணப்பட்டுவாடா செய்து அதை அதிகாரிகளுக்கும் தி.மு.க சேர்மன் தங்கமணியின் கணவர் திருமாலுக்கு வழங்குவதாக கடந்த 25-04-2024 அன்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் நடத்திய சோதனையில் வாக்குமூலமாக கொடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடத்தக்கது.

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கடந்த 25.4.2024 அன்று மதியம் 1:30 மணிக்கு தொடங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நள்ளிரவு 12 .20 மணி வரை சோதனை நடைபெற்றது அனைவரும் அறிந்த செய்தி.புழல் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சித்ரா பெர்னான்டோ அவர்கள்இதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதற்கான ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர். முக்கிய கோப்புகள், ஆவணங்கள், லேப்டாப் , கம்ப்யூட்டர் , ஹார்ட் டிஸ்க் போன்ற முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர். மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடத்தில் ஊழல் தொடர்பாக சித்ரா பல உண்மை சம்பவங்களை ஒப்புதல் வாக்கு மூலமாக அளித்துள்ளார். 

லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சம்பத் தலைமையில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் மூன்று பெண் ஊழியர்களின் செல்போன்களை அதிகாரிகள் ஆய்வு செய்ததாக கூறப்பட்டது. ஏற்கனவே விளாங்காடு பாக்கம் கிராமத்தில் New Star City land promoters ஜாப்பர் என்பவர் ஏழு ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்திற்கு சி.எம்.டி.ஏ வில் அனுமதி பெற்று, உள்ளாட்சி அமைப்புகளில் இறுதி அனுமதி பெறுவதற்கு முன்னதாகவே நிலத்தின் உரிமையாளர் ஜாபர் என்பவர் தனது நிலத்தை பிளாட்டுகளாக பிரித்து விற்பனை செய்து விட்டார்.

ஆனால் அனுமதியே பெறாத இடத்திற்கு புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் குறிப்பாக சித்ரா பெர்னான்டோ அவர்கள் அனுமதி அளித்துள்ளார். இதே நிறுவனம் சிறுங்காவூர் என்ற கிராமத்தில் 2 ஏக்கர் நிலத்தில் லேஅவுட் போட்டுள்ளனர். அந்த இடத்திலும் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது. என்கிற பிரச்சனை தற்போது வரை இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அனைத்து ஊழல்களுக்கும் மையப்புள்ளியாக இருக்கும் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் புழல் ஊராட்சி ஒன்றிய சேர்மன் அவர்களுக்கும் இணைப்பு பாலமாக இருக்கும் யுவாதிகா மற்றும் ஈஸ்வரி ஆகியோர்கள் மீது இது நாள் வரை எந்த ஒரு நடவடிக்கையும்  மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபு சங்கர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை மர்மமாக இருக்கிறது. இந்த விஷயத்தில் நீதிமன்றம் தானாக முன் வந்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.

இதையும் படிங்க.!