#edappadi announcement ; கூட்டணி கட்சிகளுக்கு சீட்டு ஒதுக்கீடு எடப்பாடி அறிவிப்பு.

March 23, 2026

By இரா. தேவேந்திரன்.

தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணியில் 3 கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. அதிமுக இந்த முறை 168 தொகுதிகளில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வரவிருக்கும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் மார்ச் 30 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் தொடங்க இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், கூட்டணியை இறுதி செய்வதற்கான பணிகள் கட்சிகள் தீவிரமாக பணிகளை செய்து வருகிறது.அதிமுக அஸ்திவாரத்தில் கை வைத்த பாஜக.. அமித்ஷா புள்ளி வைக்க.. தினகரன்,  அன்புமணி கோலம் போட.. என்னாச்சு | Shaking the foundations of AIADMK? Amit  Shah's power secret plot ...அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக ஆகிய கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு அதிகாரப்பூர்வமாக இறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் சென்னையில் நடைபெற்ற பலகட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களின் விவரங்கள் இன்று (மார்ச் 23) வெளியிடப்பட்டுள்ளன. என்.டி.ஏ கூட்டணியில் பாஜகவுக்கு – 27 தொகுதிகள், பாமகவுக்கு – 18 தொகுதிகள், அமமுகவுக்கு – 11 தொகுதிகள், ஒதுக்கீடு செய்யப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். AIADMK, BJP seal deal for 2026 Tamil Nadu Assembly elections - The Hinduமொத்தமுள்ள 234 தொகுதிகளில் அதிமுக கூட்டணியில் இப்போது பாஜக, பாமக, அமமுகவுக்கு மொத்தமாக 56 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 178 தொகுதிகளில், மற்ற கட்சிகளுக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டாலும், அதிமுக 168 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளது. அதிமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்ற கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்னும் சில கட்சிகளுக்கு நாங்கள் தொகுதிகள் ஒதுக்க வேண்டும். இதன் முடிவில் அந்த விவரங்களை தெரிவிப்போம்” என்றார். All India Anna Dravida Munnetra Kazhagam - Wikipedia

அதிமுக கூட்டணியில் இன்னும் ஜி.கே.வாசனின் தமாகா, ஐஜேகே, புதிய நீதிக் கட்சி, தமமுக, புரட்சி பாரதம், பார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படவில்லை. அதற்கான பேச்சுவார்த்தைகளும் வேகமாக நடந்து வருவதாக பழனிசாமி தெரிவித்துள்ளார். கடந்த 2021-ல் அதிமுக 179 தொகுதிகளில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் 10 கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதில், அ.தி.மு.க. 179 தொகுதிகளில் போட்டியிட்டது. பாமக 23 (மாம்பழம்), பாஜக 20 (தாமரை) தொகுதிகளில் போட்டியிட்டன. AIADMK Seeks Disqualification of Three More MLAs in Tamil Nadu | NewsClickமற்ற கட்சிகள் அதிமுகவின் சின்னமான இரட்டை இலையிலேயே போட்டியிட்டன. தமாகா (6), தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் (1), மூவேந்தர் முன்னேற்ற கழகம் (1), அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் (1), பசும்பொன் தேசிய கழகம் (1), பெருந்தலைவர் மக்கள் கட்சி (1), புரட்சி பாரதம் (1) ஆகிய கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டன.

மொத்தமாக 191 பேர் இரட்டை இலை சின்னத்தில் களம் கண்டனர். 179 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக, 66 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிட தக்கது. திமுக கூட்டணி கட்சிகளையும் திமுக தலைவர் ஸ்டாலினையும் எடப்பாடி விமர்சித்தார். திமுக கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை சீட்டு என்று அந்த கட்சி இன்னும் அறிவிக்கவில்லை.

Share:

இரா. தேவேந்திரன்.

March 23, 2026

Leave a Comment