இந்தியை ஒருபோதும் தமிழ்நாட்டில் திணிக்க முடியாது.
இந்தியை ஒருபோதும் உலகம் முழுவதும் வாழும் ஒரு தமிழனும் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்பதை நிரூபிக்கும் வகையில் மொழிப்போர் தியாகிகள் தினத்தன்று சமூக வலைதளங்களில் பல்வேறு செய்திகள் படங்கள் இந்தி மொழியை கிண்டல் செய்யும் வகையில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
தமிழ்நாடு- தமிழ்
கேரளா- மலையாளம்
ஆந்திரா-தெலுங்கானா- தெலுங்கு
கர்நாடகா- கன்னடம்
மகாராஷ்டிரா- மராத்தி
குஜராத்- குஜராத்தி
பஞ்சாப்- பஞ்சாபி
ராஜஸ்தான்- ராஜஸ்தானி, மார்வாரி, மேவாரி
ஹரியானா-ஹரியானி
இமாசலப்பிரதேசம்-
மஹாசு பஹாரி, மண்டேலி,
காங்கிரி-பிலாஸ்புரி,சாம்பேலி
ஜம்மு-காஷ்மீர்- காஷ்மீரி, டோக்ரி,பாடி,லடாக்கி.
உத்தர்காண்ட்-கடுவாலி, குமோனி
உத்திரப்பிரதேசம்- பிரஸ்பாஷா, கரிபோலி,அவதி,கன்னோஜி,போஜ்புரி, பந்தேலி,பகேலி.
பீஹார்- போஜ்புரி, மைதிலி
ஜார்கண்ட்- சந்தாலி
சத்தீஸ்கர்-கோர்பா
மத்தியப் பிரதேசம்- மால்வி,நிமதி, பகேலி
மேற்கு வங்கம்- வங்காளி
ஒடிசா- ஒரியா
வட கிழக்கு மாநிலங்கள்-அப்பகுதி மூத்த குடிகளின் தாய்மொழிகள்.
இந்தியாவில் உள்ள 135 கோடி மக்களில் ஒருவருக்கு கூட ஹிந்தி தாய்மொழி அல்ல.ஹிந்தியும் அந்நிய மொழி தான். தாய்மொழிகளை அழித்து ஐரோப்பியர்களால் உருவாக்கப்பட்டதே ஹிந்தி என்பது வரலாறு.
இந்துஸ்தானி என்ற மொழியை உடைத்து, ஹிந்தி இந்துக்களுக்காகவும், உருது இஸ்லாமியர்களுக்கென்று 180 ஆண்டுகளுக்கு முன்பு 1800 களில் உருவாக்கப்பட்டதே ஹிந்தி வரலாறு.
ஹிந்தியில் வெளியான முதல் நூல் 1818 ல் பைபிள். ஹிந்தியின் முதல் பத்திரிக்கை உதந்த் மார்டண்ட் (Udant Martand).இது 1826 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதி கல்கத்தாவில் பண்டிட் ஜுகல் கிஷோர் சுக்லாவால் தொடங்கப்பட்டது. வார இதழாக வெளிவந்தது, இந்த தினத்தை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 30 இந்தி பத்திரிகை தினமாக அனுசரிக்கப்படுகிறது.
உதந்த் மார்டண்ட் (Udant Martand) என்றால் சூரிய உதயம் என்று பொருள்.
இந்துஸ்தானியை தேசிய மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்பதே காந்தியின் நிலைபாடாக இருந்தது.
ஹிந்தியின் தந்தை ஜான் கில் ஹிரிஸ்ட் . ஜான் கில் ஹிரிஸ்ட் எப்படி, எங்கு ஹிந்தியை உருவாக்கினான் இந்தியாவில் தோன்றிய முதல் மொழி தமிழ். கடைசி மொழி ஹிந்தி. ஹிந்தி திணிப்பை வேரறுப்போம்.
மொழிப்போர் தியாகிளைப் போற்றுவோம்.
