இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ரம்ஜான் விழாவை நேற்று உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ஈகை திருநாளான ரம்ஜான் பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழ்நாடு உள்பட உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது. அதன்படி காலையிலேயே புத்தாடை அணிந்து இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி அன்பையும், வாழ்த்துகளையும் பரிமாறி கொன்டனர். ![]()
இஸ்லாமியர்கள் நோன்பு கடைப்பிடித்த பிறகு ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் கொண்டாடி வருகின்றனர். இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று ரமலான் நோன்பு இருப்பது. இஸ்லாமியர்களின் புனித மாதம் ரமலானில் இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பை கடைப்பிடிப்பார்கள். நேற்று ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது.
தலைமை ஹாஜி அறிவிப்பு;
ஒரு மாதம் வரை இஸ்லாமியர்கள் அதிகாலை முதல் மாலை வரை உணவு உண்பதை நிறுத்தி தண்ணீர் கூட குடிக்காமல் அதாவது தங்கள் வாயில் சுரக்கும் உமிழ்நீர் எச்சிலைக்கூட முழுங்காமல் விரதம் இருப்பார்கள். மாலை நேரத்தில் இப்தார் விருந்தாக உணவு எடுத்து கொள்வார்கள். ரம்ஜான் கொண்டாட்டம் இந்த ஆண்டு மார்ச் 19ம் தேதி முதல் ரமலான் நோன்பு தமிழகத்தில் தொடங்கியது. அன்று முதல் இஸ்லாமியர்கள் நோன்பு கடைப்பிடித்து வந்தனர். ![]()
ஒரு மாதம் வரை நோன்பு காலம் இருக்கும். அதன்பிறகு இஸ்லாமிய நாட்காட்டியில் ஷவ்வால் மாதம் தொடங்கும் போது ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். ரம்ஜான் பண்டிகை வானில் பிறை தெரிவதன் அடிப்படையில் கொண்டாடப்படும். நேற்று முன்தினம் வானில் பிறை பார்க்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் பிறை தெரியவில்லை. இதையடு்து இன்று (சனிக்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சவுதி அரேபியாவில் பிறை தெரிந்ததால் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.
உங்கள் அன்புக்குரியவர்களுக்கு இனிய ரமலான் வாழ்த்துக்கள் சொல்லுங்கள்.
5 சிறப்பு தொழுகை ஆனால் தமிழகம் உள்பட இந்தியாவின் பிற இடங்களில் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று காலையிலேயே தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை களைகட்டியது. இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து மசூதிகளில் சிறப்பு வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். 
ஈத்கா மைதானங்களில் சிறப்பு தொழுகைகள் நடந்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, தூத்துகுடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், கேரளா, தென்காசி உள்பட அனைத்து மாவட்டங்களிலும் ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தலைவர்கள் ரம்ஜான் வாழ்த்து;
ரம்ஜான் பண்டிகையையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரம்ஜான் பண்டிகை நேற்று கொண்டாடப்படும் நிலையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் முஸ்லீம் கட்சி தலைவர்கள் உள்பட பிற கட்சிகளின் தலைவர்களும் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
