#Youth murdered; Police save doctor; இளைஞர் கொலை. டாக்டரை காப்பாற்றும் போலீஸ். நடவடிக்கை எடுக்குமா அரசு?

September 29, 2025

By இரா. தேவேந்திரன்.

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியை சார்ந்த டி. செல்வநாதன்- ராஜலட்சுமி தம்பதியினரின் மகன் 25 வயது நிரம்பிய ஜ.டி பொறியியல் பட்டதாரி ஹேமசந்திரன் தனது உடல் பருமனை குறைப்பதற்காக டாக்டர் பெருங்கோ என்பவரிடம் சென்னை ரேலா மருத்துவமனையில் ஆலோசனை பெற்று வந்தார்.

அங்கு சில பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. எளிய சிகிச்சை, பக்க விளைவுகள் இல்லை, மறுநாள் டிசார்ஜ் ஆகி இயல்பாக பணிகள் செய்யமுடியும் என்று நம்பிக்கை அளித்ததுடன் ரேலாவில் 9 லட்சம் செலவாகும். ஆனால் அதே ஆப்ரேஷன் ஜெயின் மருத்துவமனையில் 5 லட்சத்திற்குள் நானே செய்து விடுவேன் என்று கூறினார்.ரெலா மருத்துவமனை ஏர்போர்ட் பெட்ரூம்2 குரோம்பெட் ஏசி கிச்சன் வைஃபை சென்னைஅவரது ஆலோசனை படி சென்னை பம்மலில் உள்ள பி. பி. ஜெயின் மருத்துவமனையில் 21.04.2024 அனுமதிக்கப்பட்டார்.அங்கு மருத்துவர் நேரில் வந்து பரிசோதிக்காமல் செவிலியர் கள் மூலமாக சில ஊசி மருந்துகள் செலுத்தியுள்ளார்.மறுநாள் 22.04.2024 காலை 8.30 மணிக்கு அறுவை சிகிச்சை கூடத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். ‌

டாக்டர் பெருங்கோ அறுவை சிகிச்சை துவங்கிய சற்று நேரத்திலேயே ஹேமசந்திரனுக்கு திடீரென இதயதுடிப்பு அதிகரித்து ஆபத்தான கட்டத்தை அடைந்தார். பின்னர் உயர் மருத்துவ சிகிச்சைக்காக ரேலா மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ரேலா மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவரது உடல் நிலை மோசமடைந்தது.Tamil Nadu health minister urges Centre to help Ukraine-returned medical  students - India Today22.04.2025 அன்று இரவு அலட்சியமாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட டாக்டர் பெருங்கோ மீது நடவடிக்கை எடுக்க கோரி குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

மறுநாள் 23.04.2025 அன்று பம்மல் டி.பி.ஜெயின் மருத்துவமனை எல்லைக்குட்பட்ட சங்கர் நகர் காவல் நிலையத்திலும் டாக்டர் பெருங்கோ மீது புகார் அளிக்கப்பட்டது. 23.04.2025அன்று இரவு ஹேமசந்திரன் ரேலா மருத்துவமனையில் மரணமடைந்தார். மரணமடைந்த தகவலும் அன்று இரவே குரோம்பேட்டை காவல் நிலையத்தில் தெரிவிக்கப்பட்டது. மறுநாள் காலை ரேலா மருத்துவமனை நிர்வாகத்தினர் உடலை ஒப்படைக்க புதுச்சேரி கொண்டு வரப்பட்டு மறுநாள் 25.04.2025 அன்று புதுச்சேரியில் அடக்கம் செய்யப்பட்டது.B P Jain Hospital in Pammal,Chennai - 𝗕𝗼𝗼𝗸 𝗔𝗽𝗽𝗼𝗶𝗻𝘁𝗺𝗲𝗻𝘁  𝗢𝗻𝗹𝗶𝗻𝗲 - Best Multispeciality Hospitals near me in Chennai - Justdial24.04.2025 அன்று ஹேமசந்திரன் மரணம் குறித்த செய்திகள் அனைத்து செய்தி ஊடகங்கள், பத்திரிக்கைகளிலும் பரவியது. தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள் மூலமாக இந்த மரண செய்தி அறிந்த தமிழக சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் இறந்த ஹேமசந்திரனின் தந்தை டி. செல்வநாதனை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியதுடன், இந்த சிகிச்சை குறித்தும் மரணம் குறித்தும் தமிழக அரசு சுகாதார துறை விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி அளித்தார்.

அமைச்சர் உத்தரவின் படி செங்கல்பட்டு மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் மருத்துவர் தீர்த்தலிங்கம் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் பம்மல் பி.பி.ஜெயின் மருத்துவமனையை ஆய்வு செய்து உடல் பருமன் அறுவை சிகிச்சை போன்ற உயர் தர அறுவை சிகிச்சை செய்வதற்கு அந்த மருத்துவமனையின் அறுவை சிகிச்சை கூடம் தகுதியற்றது என்றும் அறுவை சிகிச்சையின் போது உடன் இருக்க வேண்டிய இதய நோய் மருத்துவர், மயக்கமருந்து வல்லுநர், பயிற்சி பெற்ற செவிலியர்கள் யாரும் இல்லை என்று கண்டறிந்து அந்த மருத்துவமனையின் லைசன்சை ரத்து செய்து மருத்துவமனைக்கு சீல் வைத்தனர். அலட்சியமாக செயல்பட்ட டாக்டர் பெருங்கோ மீதும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தனர்.

ஹேமச்சந்திரன் உயிர்பலிக்கு காரணமான டாக்டர் பெருங்கோ மற்றும் அவரது குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி 18.6.2024 அன்று பல்லாவரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.Dr. Perungo Thirumarai Chelvan - Bariatric Surgeon in Chennai - Book Online  Appointment

தவறான அறுவை சிகிச்சை செய்த  டாக்டர் பெருங்கோ

05.05.2024 அன்று அலட்சியமாகவும், அஜாக்கிரதையாகவும் அவசர அவசரமாகவும் அறுவை சிகிச்சை மேற்கொண்டு தனது மகன் இறப்பிற்கு காரணமான டாக்டர் பெருங்கோ மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் புகார் அளித்தார். அந்த புகார் குறித்து டாக்டர் பெருங்கோ மற்றும் மயக்கவியல் மருத்துவர் நேசமணி ஆகியோரிடம் விளக்கங்கள் பெற்று அதனை உயர் மருத்துவ வல்லுநர் குழுவினர் கருத்தறிய அனுப்பியது. உயர் மருத்துவ வல்லுநர் குழுவினர் உடல் பருமன், சர்க்கரை நோய் கட்டுபாட்டிற்குள் இல்லாத ஒரு நோயாளிக்கு அவசர அவசரமாக இந்த அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இது உயிர் காக்கும் அவசர சிகிச்சையும் இல்லை.அறுவை சிகிச்சைக்கு முன் இதனால் ஏற்படக்கூடிய முழுமையான இழப்புகள் குறித்து நோயாளியிடமோ, அவரது பெற்றோர்களிடமோ விளக்கம் அளிக்கப்படவில்லை. மயக்க மருந்து முறையாக செலுத்தப்படாதால் மூச்சு திணறல், இதயதுடிப்பு பாதிப்பு, மாரடைப்பு போன்றவைகள் ஏற்பட்டு, பல உறுப்புகள் செயலிழக்க தொடங்கியதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று தனது கருத்தினை தெரிவித்ததுடன் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் மயக்கவியல் மருந்து நிபுணர் இருவரின் அலட்சியம் மற்றும் கவனக்குறைவு தான் ஹேமசந்திரன் உயிர் இழப்புக்கு காரணம் என்று தெரிவித்து உள்ளனர்.

உயர்மருத்துவ வல்லுநர் குழுவின் கருத்துக்கள் தமிழ் நாடு மருத்துவ கவுன்சில் ஒழங்கு நடவடிக்கை குழு கூடி விவாதித்து அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர் டாக்டர் பெருங்கோ மற்றும் மயக்கவியல் மருத்துவ நிபுணர் நேசமணி ஆகிய இருவரின் மருத்துவப் பதிவை மூன்று மாத காலத்திற்கு ரத்து செய்து 18.09.2025 அன்று உத்தரவு பிறப்பித்தது. தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் பிறப்பித்துள்ள இந்த உத்தரவு மனித உயிர்களை பற்றி கவலைப்படாமல் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் செயல்படுகின்ற சில மருத்துவர்களுக்கு இது ஒரு கடுமையான எச்சரிக்கை ஆகும். மகனின் இழந்த பெற்றோர்கள் நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்று அழுதக்கண்ணீருக்கு ஆறுதலும், மன ஆறுதலையும் அளிக்கக்கூடியதாகும்.chennai tambaram he cheated three lakhs from a woman working abroad as a  nurse TNN | Crime: வெளிநாட்டில் வேலை....நர்ஸிடம் ரூ. 3 லட்சம் ஏமாற்றியது  இப்படி தான்..!ஹேமசந்திரன் என்னும் 25 வயது இளைஞரின் மரணத்திற்கு காரணமான மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட தமிழ்நாடு முதல் அமைச்சர், சுகாதாரதுறை அமைச்சர் மா. சுப்பிரமணியம், மற்றும் தமிழ்நாடு சுகாதாரதுறை அமைச்சரை வலியுறுத்திய புதுச்சேரி முதல் அமைச்சர் ந.ரங்கசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ் மாநில முன்னாள் செயலாளர் இரா.முத்தரசன், தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கத்தை சார்ந்த டாக்டர் ஜி.ஆர்.ரவிந்திரநாத், சாந்தி ஆகியோருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலக் குழு சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இறந்து போன ஹேமச்சந்திரன் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. குறிப்பாக ஹேமச்சந்திரனின் தந்தையிடம் இதுவரை போலீசார் எந்த வித விசாரணையும் நடத்தவில்லை. திட்டமிட்டே போலீசார் டாக்டர் பெருங்கோவை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அரசும், போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர் என்று குற்றம் சுமத்துகிறார் பாதிக்கப்பட்ட இறந்து போன ஹேமச்சந்திரனின் தந்தை பாண்டித்துரை.

Share:

இரா. தேவேந்திரன்.

September 29, 2025

Leave a Comment