இந்தியாவுக்கு எதிரி நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் மலைப்பகுதிகளில் இருந்து இந்திய வீரர்களை தாக்கும் நிலை ஏற்பட்டால் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய பாதுகாப்புத்துறை ஜோராவர் என்ற இலகு ரக பீரங்கி ஒன்றை தயாரித்து இருக்கின்றனர்.
ராஜ்நாத் சிங் பாதுகாப்பு துறை அமைச்சர்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனமும் ( DRDO) மற்றும் எல் அண்ட் டி (L&T) நிறுவனமும் இணைந்து ஜோரா அவர் இலகுரக பீரங்கிகளை தயாரித்துள்ளனர். கிழக்கு லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட பல முக்கியமான மலைப்பகுதிகளில் போரில் பயன்படுத்தும் வகையில் இந்த பீரங்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. 25 டன் எடை கொண்ட இந்த பீரங்கி குஜராத் மாநிலம் ஹசிராவில் நேற்று முன்தினம் பரிசோதித்துப் பார்க்கப்பட்டது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனமும் ( DRDO)
இந்தத் திட்டத்தை நேற்று முன்தினம் ஆய்வு செய்த டி.ஆர்.டி.ஓ தலைவர் சமீர் காமத் கூறும் போது நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட இலகு ரக பீரங்கியை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. இரண்டரை ஆண்டில் ஜோராவர் பீரங்கியை வடிவமைத்து தயாரித்துள்ளோம்.
டி.ஆர்.டி.ஓ தலைவர் சமீர் காமத் .
இதை அடுத்த ஆறு மாதங்களுக்குள் பல்வேறு சோதனைக்கு உட்படுத்த வேண்டும். அதன் பிறகு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பாலைவனங்கள் உயரமான மலைப் பகுதிகள் உட்பட கோடை காலம் மற்றும் குளிர்காலங்களில் தொடர் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டி உள்ளது. சோதனை வெற்றிகரமாக முடிந்த பிறகு வரும் 2027 ஆம் ஆண்டுக்குள் இந்திய ராணுவத்தில் இது சேர்க்கப்படும் என்று தெரிவித்தார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு லடாக் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவத்துக்கும் இந்திய ராணுவத்திற்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
ஜோராவர் பீரங்கி.
அதன் பிறகு இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் சீனாவுக்கு பதிலடி கொடுப்பதற்காக இந்த பீரங்கி தயாரிக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் ரஷ்யாவின் டி90 மற்றும் டி 72 , 40 முதல் 50 டன் எடை கொண்ட பீரங்கிகள் தயார் நிலையில் உள்ளன. ஆனால் இவை மலைப் பகுதியில் பயன்படுத்துவது சிரமம். எனவே இலகு ரக பீரங்கிகள் தேவைப்படுகின்றன.
நேற்று முன்தினம் ஆய்வு செய்த டி ஆர் டி ஓ தலைவர் சமீர் காமத்
டி 72 மற்றும் டி 90 ஆகிய கனரக பீரங்கியை விட செங்குத்தான மலைப் பகுதியிலும் ஆற்றின் குறுக்கிலும் மற்றும் இதர நீர்நிலைப் பகுதிகளிலும் ஜோராவர் பீரங்கி சுலபமாக பயணிக்கும் இதன் எடை குறைவாக இருப்பதால் இதை போர் நடக்கும் இடத்துக்கும் விமான மூலம் விரைவாக எடுத்துச் செல்ல முடியும். இது உயரமான கோணங்களில் கடும் திறன் வாய்ந்து செயல்படும் இது போன்ற 354 பீரங்கிகளை ரூபாய் 17,500 கோடிக்கு வாங்க மத்திய அமைச்சர் ராஜநாத் சிங் தலைமையிலான ராணுவ தளவாட கொள்முதல் கவுன்சில் கடந்த 2022 – ல் முதற்கட்ட ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.