chennireporters.com

#AC is a lustful beast in a khaki shirt ; படுக்கைக்கு அழைத்த ஏசி; காக்கி சட்டையில் ஒரு காம வெறி பிடித்த மிருகம்.

தன்னிடம் புகார் அளிக்க வந்த பெண் இன்ஜினியரை உல்லாசமாக இருக்கலாம் என்று படுக்கைக்கு அழைத்த பொறுக்கி விருகம்பாக்கம் உதவி கமிஷனர் பாலகிருஷ்ண பிரபு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து அவரை சிறைக்கு அனுப்பவேண்டும் மேலும் அவரை நிரந்தர பணி நீக்கம் செய்யவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
பல லட்சத்திற்கு ஆன்லைனில் பொருட்கள் வாங்கி ஏமாற்றிய பெண் எஸ்ஐயும் பதவி பறிபோனது.
Protection Of Women From Sexual Harassment At Workplace - PoshHelp
திருமணம் செய்வதாக உல்லாசமாக இருந்து ஏமாற்றிய காதலன் மீது புகார் அளிக்க வந்த இளம் பெண் இன்ஜினியருக்கு வாட்ஸ் ஆப் மூலம் உல்லாசத்திற்கு அழைத்து பாலியல் தொந்தரவு செய்ததாக விருகம்பாக்கம் உதவி கமிஷனர் பாலகிருஷ்ண பிரபு மற்றும் பெண் எஸ்ஐ ஆகியோரை கமிஷனர் அருண் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் அம்மு (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மென் பொறியாளரான இவர், கனடா நாட்டில் பொறியாளராக பணியாற்றும் நபரை காதலித்து வந்துள்ளார்.
அந்த பொறியாளர் சென்னை வந்தபோது, அம்முவுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இதனால் இருவரும் பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதற்கிடையே காதலனுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கும் சம்பவம் அம்முவுக்கு தெரியவந்தது.
இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் காதலர்கள் இருவரும் ஒன்றாக இருந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என கனடா இன்ஜினியர் மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அம்மு, சம்பவம் குறித்து விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் மீது உதவி ஆய்வாளர் பெனசீர் பேகம் விசாரித்தார்.
காம வெறி பிடித்த நாயும் பிச்சைக்காரி இன்ஸ்பெக்டரும்.
அப்போது புகார் அளித்த பெண் பொறியாளருக்கு நியாயம் பெற்று தருவதாக கூறி அவரிடம் உதவி ஆய்வாளர் பெனசீர் பேகம் வீட்டிற்கு தேவையான மளிகை மற்றும் ஆடம்பர பொருட்கள் என பல லட்சம் ரூபாய்க்கு ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கியுள்ளார்.  அதேபோல் புகார் அளித்த பெண்ணிடம் இருந்து காப்பாற்றுவதாக காதலனிடமும் கைது செய்யாமல் இருப்பதற்காக பல லட்சம் ரூபாய் பணம் வாங்கியுள்ளார்.
ஒரு கட்டத்தில் இளம் பெண் புகாரின் மீது கைது செய்யாமல் இருக்க காதலனுக்கு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற உதவி ஆய்வாளர் பெனசீர் பேகம் பல வகையில் உதவி செய்துள்ளார்.  இதன் மூலம் முன் ஜாமீன் பெற்ற காதலன், சென்னையில் இருந்து கனடா நாட்டிற்கு தப்பி சென்றுவிட்டார்.
இந்த தகவல் பாதிக்கப்பட்ட  அம்முவுக்கு தெரியவந்தது. உடனே விசாரணை அதிகாரியான உதவி ஆய்வாளர் பெனசீர் பேகத்திடம் நியாயம் கேட்டுள்ளார். அதற்கு அவர் முறையாக பதில் அளிக்கவில்லை.  உடனே பாதிக்கப்பட்ட அம்மு இணை கமிஷனர் தீஷா மிட்டலை நேரில் சந்தித்து நடந்த சம்பவம் மற்றும் ஆன்லைன் மூலம் பல லட்சத்திற்கு பொருட்கள் வாங்கியது தொடர்பாக ஆவணங்களுடன் புகார் அளித்தார்.
Disha Mittal IPS Transfer South Chennai Joint Commissioner Transferred to Compulsory Waiting List What is the Reason TN BJP Leader Annamalai | Disha Mittal IPS Transfer : 'கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு ...
இணை ஆணையர் தீஷா மிட்டல்.
அந்த புகாரின் மீது விசாரணை நடத்த இணை கமிஷனர் தீஷா மிட்டல் விருகம்பாக்கம் உதவி கமிஷனர் பாலகிருஷ்ண பிரபுவுக்கு உத்தரவிட்டார். அதன்படி பாதிக்கப்பட்ட பெண் பொறியாளர்  அம்மு, விருகம்பாக்கம் உதவி கமிஷனர் அலுவலகத்தில் பாலகிருஷ்ண பிரபுவை நேரில் சந்தித்து புகார் அளித்தார்.
அப்போது உதவி கமிஷனர், பெண் உதவி ஆய்வாளர் பெனசீர் பேகம் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி, பெண் பொறியாளரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு அடிக்கடி நள்ளிரவில் ஆபாச மெசேஜ் அனுப்பியுள்ளார். அதற்கு பெண் பொறியாளரும் பதில் அளித்துள்ளார். அதன் பிறகு அடிக்கடி தனது அலுவலகத்திற்கு விசாரணை என்ற பெயரில் பெண் பொறியாளரை அழைத்து தனது அலுவலகத்தில் உதவி கமிஷனர் பாலகிருஷ்ண பிரபு தன் வசப்படுத்தும் வகையில், அஅந்த பெண்ணின் தோளின் மீது கையை வைத்து தொட்டு தொட்டு பேசியுள்ளார்.
பிச்சைக்ஃகாரி உதவி ஆய்வாளர் பெனசீர் பேகம்.
அதேநேரம் புகார் அளித்த உதவி ஆய்வாளர் பெனசீர் பேகம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையே உதவி கமிஷனர் ஒரு கட்டத்தில் பெண் பொறியாளருக்கு வாட்ஸ் அப்புக்கு ‘ நீ அழகாக இருக்கிறாய்…. உன்னை பார்த்ததில் இருந்தே என்னால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை…. நான் சொல்வதை நீ செய்தால்… நீ சொல்வதை நான் செய்கிறேன்…..’ என்று மிகவும் ஆபாசமாகவும், பாலுணர்வை தூண்டும் வகையில் உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். இந்த பொம்பள பொறுக்கி நாயி இதை பார்த்த பெண் பொறியாளர் அதிர்ச்சியடைந்தார்.
உடனே இணை கமிஷனர் தீஷா மிட்டலை நேற்று முன்தினம் நேரில் சந்தித்து, திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார்.
பெண் உதவி ஆய்வாளர் வீட்டிற்கு தேவையான பொருட்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து பல லட்சம் பணம் பெற்று ஏமாற்றினார்.  அவர் மீது புகார் அளிக்க விருகம்பாக்கம் உதவி கமிஷனர் பாலகிருஷ்ண பிரபுவிடம் புகார் அளித்ததால், அவர் தன்னை படுக்கைக்கு அழைத்து மெசேஜ் போடுகிறார்.
ஏ. அருண் சென்னையின் புதிய போலீஸ் கமிஷனர் - தி இந்து
போலீஸ் கமிஷனர் அருண்.
நான் என்ன தான் செய்ய வேண்டும் மேடம் என்று அழுது புலம்பியுள்ளார்.  அதைத் தொடர்ந்து இணை கமிஷனர் தீஷா மிட்டல் புகார் அளித்த இளம் பெண் பொறியாளர் அளித்த வாட்ஸ் அப் மெசேஜ் மற்றும் புகாரை தொடர்ந்து விருகம்பாக்கம் உதவி கமிஷனர் பாலகிருஷ்ண பிரபு மற்றும் பெண் உதவி ஆய்வாளர் பெனசீர் பேகம் ஆகியோர் மீதான புகார் குறித்து போலீஸ் கமிஷனர் அருண் கவனத்துக்கு கொண்டு சென்றார்.  அதைத் தொடர்ந்து, கமிஷனர் அருண், இருவர் மீதும் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டார்.
Imposed' not 'Implemented': A journey of the Sexual Harassment Law
அதன்படி உயர் காவல் துறை அதிகாரிகள் உதவி கமிஷனர் மற்றும் உதவி பெண் ஆய்வாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம், புகார் அளிக்க வந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உதவி கமிஷனர் பாலகிருஷ்ண பிரபு மற்றும் புகார் அளிக்க வந்த இளம் பெண்ணிடம் வீட்டிற்கு தேவையான பொருட்களை பல லட்சம் ரூபாய்க்கு ஆன்லைன் மூலம் பெற்ற பெண் உதவி ஆய்வாளர் பெனசீர் பேகம் ஆகியோரை அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி கமிஷனர் அருண் உத்தரவிட்டார்.
Who Is This Arun Ias Latest Information About New Chennai Police Commissioner | யார் இந்த அருண் ஐபிஎஸ் சென்னையின் காவல் ஆணையர் பற்றிய தகவல்கள் | News in Tamil
அருண் போலீஸ் கமிஷனர்.
இந்த வழக்கில் சிக்கியுள்ள பெண் உதவி ஆய்வாளர் பெனசீர் பேகம் அண்ணாநகர் காவல் நிலையத்தில் பணியாற்றியபோது, சாலையோர வியாபாரிகள் மற்றும் புகார் அளிக்க வந்தவர்களிடம் பணம் பெற்றதாக 5-க்கும் மேற்பட்ட புகார்கள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மோகன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் சம்பந்தப்பட்ட உதவி காவல் ஆணையர் மீது போக்கு சூ வழக்கு பதிவு செய்ய வேண்டும் நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் மீதும் இளம்பெண்ணை பாலியல் உணர்வுக்கு தூண்டியதற்காக அது தொடர்பாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் அவரையும் பணி நீக்கம் செய்ய வேண்டும்.
மோகன் வழக்கறிஞர்
சென்னை உயர்நீதிமன்றம்.
இது விஷயத்தை சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் வீட்டு பெண்களை யாராவது இப்படி செய்தால் அவர் அமைதியாக இருப்பாரா அல்லது சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆணையர் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கும் இந்த நிலை ஏற்பட்டால் அவர் இப்படி தான் செய்வாரா? என கமிஷனர் அருண் விளக்க வேண்டும். அவர்களை நிரந்தர பணி நீக்கம் செய்யாமல் காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்புவதால் என்ன பயன்? மீண்டும் பதவிக்கு வந்தால் இவர் வேறு ஒரு பெண்ணிடம் தவறாக நடக்காது என்ற எப்படி சொல்லமுடியும்.
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறோம் என்று சொல்லுகிற முதல்வர் அப்பா ஸ்டாலின் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து நிரந்தர பணிநீக்கம் செய்து அவர்கள் மீது போக்சோ விளக்கும் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

இதையும் படிங்க.!