இருபதுக்கும் மேற்பட்ட அடியாட்களுடன் கூட்டமாக சென்று பண்ணை நிலத்தை சேதப்படுத்தி செல்லப்பிராணிகளை சாகடித்து அராஜகம் செய்த வக்கீல்கள் பற்றிய செய்தியும் அந்த வீடியோவும் சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த செய்தி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வக்கீல்கள் மற்றும் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சென்னை மாதாவரம் பகுதியை சேர்ந்தவர் நரேஷ் குமார் இவர் திருவள்ளூர் எஸ்.பி ஆபிசில் ஒரு புகார் அளித்திருக்கிறார். அந்தப் புகாரில் அவர் கூறியிருப்பதாவது.சென்னை மாதாவரத்தை சேர்ந்தவர் நரேஷ் குமார்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே அம்மம்பாக்கம் கிராமம் அருகில் எனக்கு சொந்தமாக 51 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் ஒரு சிறிய தோட்டம் அமைத்து செடிகளையும், மரங்களையும் வைத்து வளர்த்து வருகிறேன். அந்த இடத்தில் சுமார் 80 நாட்டுக்கோழி மற்றும் 20 முயல்கள் 16 பங்களா வாத்து 15 நாட்டு வாத்து என அனைத்து செல்ல பிராணிகளையும் வளர்த்து வந்தேன். இந்த உயிரினங்களை பாதுகாக்க என் நிலத்தை சுற்றியும் இரும்பு கேட் போட்டிருந்தேன்.
இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மூர்த்தி, முரளி, சீத்தஞ்சேரியை சேர்ந்த சுரேஷ் ஆகியோர் என் நிலத்தில் அடியாட்களை அழைத்து வந்து என் நிலத்தை சுற்றி போட்டு இருந்த கம்பி வேலிகளையும் அடித்து உடைத்து சேதப்படுத்தினார்கள். இது சம்பந்தமாக மேற்படி நபர்கள் மீது நான் ஏற்கனவே காவல்துறையில் புகார் அளித்திருந்தேன்.
இந்த புகார் சம்பந்தமாக மேற்படி நபர்களை அழைத்து விசாரணை செய்தபோது தாங்கள் செய்த தவறினை உணர்ந்து என்னிடம் மன்னிப்பு கேட்டனர். இனிவரும் காலங்களில் இது போன்ற எந்த தவறுகளையும் செய்ய மாட்டோம் என்று எழுதிக் கொடுத்து விட்டு சென்றனர்.
தொழுவூர் வக்கீல் புண்ணியகோட்டி
இந்த நிலையில் கடந்த மூன்றாம் தேதி மாலை சுமார் 4:00 மணி அளவில் எனது இடத்தி,ல் ஒரு ஆரஞ்சு கலர் ஷிப்ட் கார் TN 02 x 7710 என்ற வாகனத்தில் வந்து இறங்கிய சிலர் மற்றும் சுதேவன், ஜெகதீஷ் ஆகிய இவர்கள் தலைமையில் சீத்தஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி, முரளி, ஜம்புலிங்கம் சுரேஷ்குமார் ஆகியோர்களுடன் வக்கீல் ஜெயசுந்தர் வக்கீல் தொழுவூர் வக்கீல் புண்ணியகோட்டி ஆகியோர் ஒன்று திரண்டு அத்துமீறி என் நிலத்தில் நுழைந்து சுமார் பத்து லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் போடப்பட்டிருந்த கம்பிவேலிகளை அடித்து நொறுக்கி எங்களது இடத்திற்குள் நுழைந்து நான் வளர்த்து வந்த கோழி முயல் வாத்து ஆகிய உயிரினங்களை சேதப்படுத்தியும் சில கோழிகளை அவர்கள் எடுத்து வந்திருந்த கத்தியால் வெட்டி அந்த இடம் முழுவதும்வீசி சென்றனர்.
மேலும் சில கோழி, முயல், வாத்துக்களையும் திருடி சென்று விட்டனர். அதே வேலையில் யார் வந்தாலும் எவன் வந்தாலும் அவனை இதே இடத்தில் வெட்டிக் கொள்ளுங்கள் என்று வக்கீல் ஜெய் சுந்தரும் புண்ணிய கோட்டியும் சொன்னதோடு இடத்தில் உள்ள அனைத்து பகுதிகளையும் சேதப்படுத்தி சென்றுள்ளனர். இவை அனைத்தும் நான் எனது தோட்டத்தில் வைத்திருந்த சிசிடிவி கேமராவில் பதிவு ஆகி உள்ளது அவர்கள் செய்யும் அட்டூழியங்களை கண்டு நான் போலீசுக்கு தகவல் தெரிவித்தேன்.
போலீசார் வந்தவுடன் அவர்கள் முன்னிலையிலேயும் எனது இரும்பு கம்பிகளை அறுத்தும் கீழே தள்ளியும் என்னை தகாத வார்த்தைகளால் பேசி கொலை செய்ய முயற்சித்தனர். பிவன்னர் என்னை எனது செல்போனில் தொடர்பு கொண்டு இனி நீ இந்த நிலத்தின் பக்கம் வந்தால் இங்கேயே வெட்டி புதைத்திடுவேண்டா என்று ஆபாசமான சொல்ல முடியாத வார்த்தைகளில் திட்டி எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.வக்கீல் ஜெய்சுந்தர்.
உன்னால் எங்களை யாரும் ஒன்றும் செய்ய விட முடியாது நாங்கள் யார் என்று திருவள்ளூர் கோர்ட்டில் வந்து கேட்டு தெரிந்து கொள் என்று மிரட்டினார்கள். உனக்குத் தேவையான பணத்தை தூக்கிப் போடுகிறோம் நீ எடுத்துக்கொண்டு இடத்தை விட்டு ஓடி விடு என்று மிரட்டினார்கள். என்னுடைய இடத்தில் அத்துமீறி நுழைந்து என் நிலத்தில் இருந்த கம்பிகளையும் பொருட்களையும் செல்லப்பிராணிகளையும் சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று புகாரில் கூறியுள்ளார்.
ஏற்கனவே ஜனவரி மாதம் 13ஆம் தேதி சீத்தஞ்சேரியை சேர்ந்த சுரேஷ் முரளி மூர்த்தி ஆகியோர் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு வந்து தனது இடத்தை சேதப்படுத்தியதாக நரேஷ் குமாரின் மனைவி சுனிதா புகார் கொடுத்துள்ளார். அந்த புகார்கள் மீது போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.
இந்த நிலையில் தான் மீண்டும் மூன்று தினங்களுக்கு முன்பு வக்கீல்கள் போர்வையில் அடியாட்களுடன் இருபதுக்கும் மேற்பட்டோர் தங்களுடைய இடத்தில் புகுந்து இடத்தையும் சேதப்படுத்தி செல்லப்பிராணிகளையும் திருடி சென்றுள்ளனர். இந்த புகார் குறித்து போலீசார் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எஸ்பிஆபிசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் தேவராஜ் எதிரிகளுக்கு ஆதரவாக பேசுகிறார். நீங்கள் அந்த இடத்தை அவருக்கு விற்றுட்டு போய்விடு என்று புரோக்கர் போல பேசுகிறார் என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள். மேற்படி வழக்கறிஞர் ஜெய் சுந்தர் மற்றும் அவரது குடும்பத்தினர் மனநலம் சரியில்லாத வரை மிரட்டி சுமார் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை ஏமாற்றி பத்திர பதிவு செய்து கொண்டனர். இது தொடர்பாக அவர்கள் மீது தக்கோலம் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தி தொடர்பாக வழக்கறிஞர் ஜெய் சுந்தர் மற்றும் அவரது தரப்பினர்கள் இதுகுறித்து விளக்கம் அளித்தால் அதை நாம் பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.