#Coimbatore Spa prostitution; கோவை மாநகரில் கொடி கட்டி பறக்கும் ஸ்பா விபச்சாரம். நடவடிக்கை எடுப்பாரா கமிஷனர்?

March 16, 2025

By இரா. தேவேந்திரன்.

கடந்த மூன்று ஆண்டுகளாக கோவை மாநகரில் திரும்பிய பக்கம் எல்லாம் 200க்கும் மேற்பட்ட ஸ்பா சென்டர்கள் இயங்கி வருகிறது. அந்த ஸ்பா சென்டர்களில் ஆயில் மசாஜ், பாடி மசாஜ், பவுடர் மசாஜ் என பல மசாஜ்கள் நடைபெறும் என போர்டு மட்டும் வைத்துவிட்டு உள்ளே விபச்சாரம் நடத்தி பணம் சம்பாதித்து வருகின்றனர். இது தொடர்பாக நாம் நமது சென்னை ரிப்போர்ட்டர். காம் இணையதளத்தில் பல செய்திகள் வெளியிட்டிருந்தோம்.

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணா சுந்தர்.

ஸ்பா விபச்சார சென்டர் நடத்தும் உரமையாளர்களிடம் கோவை மாநகரை சேர்ந்த பல போலீஸ் அதிகாரிகள் மற்றும் டுபாக்கூர் ரிப்போட்டர்கள் google payவில் பணம் லஞ்சமாக பெற்று வந்ததும் ஆதாரத்துடன் வெளியிட்டு இருந்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிணற்றில் போட்ட கல்லாய் போலீசார் மௌனமாய் இருந்து வருகின்றனர்.

அழகு நிலையங்களில் விபச்சாரம் நடவடிக்கை எடுப்பாரா டி.ஜி.பி. - chennireporters.comகல்யாணம் ஆன பெண்ணை கூட்டி வந்து விபச்சாரம்.. காசுக்கு அசைப்பட்டு மாமா வேலை பார்த்த போலீஸ். - Police arrested a married woman who engaged in - Asianet News Tamil

இந்த நிலையில் கோவை சுந்தரபுரம் பொள்ளாச்சி ரோடு சிக்னல் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான வணிகவளாகத்தில் பியூட்டி பார்லர் ஒன்று செயல்பட்டு வந்தது இங்கு மசாஜ் என்ற பெயரில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக  ரிச்சர்ட்ஸ் துவாரகா அபார்ட்மெண்ட் புளியங்குளம் கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்த  ரிச்சர்ட்ஸ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சுகுணா காம்ப்ளக்ஸ், ரோஸ் பீட்டல்ஸ் ட்ரீட்மென்ட் ஸ்பாம் மசாஜ் தெரபி என்ற பெயரில் நடைபெற்று வரும் இந்த சென்டரில் விபச்சாரம் நடைபெற்று வருவதாக புகார் அளித்திருந்தார்,

அதன் அடிப்படையில் டி.5, சுந்தரபுரம் சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பெண்களை வைத்து விபச்சாரம் நடைபெற்று வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக அங்கிருந்த மதுக்கரை அறிவொளி நகர் விவேகானந்த சதுக்கத்தை சேர்ந்த ராஜ்வீ, மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மும்தாஜ், பீளமேடு ராமானுஜம் நகரை சேர்ந்த ஜெய்ஸ்ரீ, திருப்பூர் போயம்பாளையம் பகுதியை சேர்ந்த ரெகானா, திருப்பூர் மாவட்டம் பிச்சம்பாளையம் பூம்பாறை பகுதியை சேர்ந்த துர்கா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தற்போதைய போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் அவர்கள் தனிப்படை அமைத்து கோவை மாநகரின் முழுவதும் உள்ள ஸ்பா சென்டர்களை மூட வேண்டும் முறையாக செயல்படும் சென்டர்களை கண்காணிக்க வேண்டும்.சம்பந்தப்பட்ட காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் ஸ்பா சென்டர் குறித்த அனைத்து உரிமையாளர்களையும் அழைத்து தங்கள் சென்டர்களில் விபச்சாரம் நடத்தக்கூடாது என்ன போலீஸ் அதிகாரிகள் அறிவுரை வழங்க வேண்டும் என்கின்றனர் சில நேர்மையான அதிகாரிகள். சென்டர்களில் விபச்சாரம் நடப்பதை தடுப்பாரா அல்லது தட்டி தூக்கு வாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பிரபல விபச்சார புரோக்கர் டுபாக்கூர் வக்கீல் விஜய் ஆனந்த்.

இது குறித்து கோவை மாவட்டத்தை சேர்ந்த சில வழக்கறிஞர்கள் தமிழக காவல்துறை இயக்குனருக்கும் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் டேவாசீர்வாதம் அவர்களுக்கும் புகார் அனுப்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

இரா. தேவேந்திரன்.

March 16, 2025

Leave a Comment