#Durga was furious; ஸ்டாலினுக்கு நம்பிக்கை துரோகம் செய்த மூவர் அணி. கொந்தளிப்பில் துர்கா.!!!!

May 9, 2026

By இரா. தேவேந்திரன்.

#tn election26 #dmk party news #special story #big story

கடந்த ஐந்து ஆண்டுகளாக அரசுக்கு ஒரே மாதிரி, ‘ரிப்போர்ட்டை’ கொடுத்து, ஸ்டாலினுக்கு நம்பிக்கை துரோகம் செய்து ஏமாற்றிய மூவர் அணி குறித்து, அவரது மனைவி துர்கா நடத்திய ரகசிய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் தி.மு.க.,வில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அறிவாலய வட்டாரத்தில் நாம் விசாரித்த போது நமக்கு பல அதிர்ச்சி  தரும் தகவல்கள் கிடைத்தன.

கடந்த ஐந்தாண்டுகளாக தி.மு.க., ஆட்சியில், பல்வேறு புதிய திட்டங்களை ஸ்டாலின் செயல்படுத்தினார், அந்த திட்டங்களுக்கு புதுப்புது பெயர்கள் சூட்டி தம்மட்டம் அடித்து கொண்டனர். திமுகவினர் பெண்களின் ஓட்டுக்களை பெறுவதற்காகவும் , கல்லூரி மாணவிகளின் ஓட்டுக்களை பெறுவதற்காகவும்  மகளிர் உரிமை தொகை, விடியல் பயணம், புதுமை பெண்கள் போன்ற  திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.ஐந்து ஆண்டுகளாக ஒரே ரிப்போர்ட்: ஸ்டாலினை ஏமாற்றிய மூவர் அணி: துர்கா விசாரணையில் அதிர்ச்சி தகவல்‘சிண்டிகேட்’ அமைத்த மூவர் கூட்டணி.

இவற்றின் தாக்கம், சட்டம் ஒழுங்கு, வாக்காளர் மனநிலை உள்ளிட்ட விபரங்கள், உளவுத்துறை வாயிலாக சேகரிக்கப்பட்டன. மேலும் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் நடத்தும் தேர்தல் வியூக நிறுவனம் (PEN) வாயிலாகவும் தகவல்கள் திரட்டப்பட்டன. இந்த விபரங்கள், ஸ்டாலினுக்கு அவ்வப்போது வழங்கப்பட்டு வந்தன.

இப்பணியில், சபரீசனின் தேர்தல் வியூக வகுப்பு நிறுவன உயர் அதிகாரி ஒருவரும், அதன் செய்தி நிர்வாகி ஒருவரும் முருகனின் பெயர் கொண்ட உளவுத்துறை அதிகாரியும்  முதல்வரின் உதவியாளர் ஒருவரும் ஈடுபட்டு வந்தனர்.

MK Stalin: తమిళనాడులో 'ఎస్‌ఐఆర్‌'.. భాజపా-అన్నాడీఎంకేపై సీఎం ఫైర్ | bjp-aiadmk-planning-electoral-win-thru-sir-mk-stalinஐந்து ஆண்டுகளாக ஒரே ரிப்போர்ட்: ஸ்டாலினை ஏமாற்றிய மூவர் அணி: துர்கா விசாரணையில் அதிர்ச்சி தகவல்

இவர்கள் மூவரும் தங்களுக்குள் ‘சிண்டிகேட்’ அமைத்து, ஒரே மாதிரியான அறிக்கையை ஸ்டாலினுக்கு வழங்கி கடந்த ஐந்து ஆண்டுகளாக அவரை ஏமாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

தேர்தல் தோல்விக்கு பின் திமுக தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா ஒரு குழுவை நியமித்து விசாரிக்க தொடங்கிய போது தான்  இந்த மூவர் அணி தொடர்பாக பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளது. இதனால் அந்த கட்சியில்  பரபரப்பு எழுந்துள்ளது.

இது குறித்து அறிவாலய வட்டாரத்தில் சொல்லப்படும் செய்திகள்:

பெண்கள் உள்பட  கடந்த ஐந்து ஆண்டுகளாக, பல தரப்பட்டவர்கள் மத்தியில், தி.மு.க.,வின் செல்வாக்கு அதிகரித்து வருவதாகவும் தவறான அறிக்கையை ஸ்டாலினுக்கு வழங்கி உள்ளன. தமிழ்நாடு முழுவதும் அமைச்சர்களின் செயல்பாடுகளால் சிறப்பாக உள்ளதாகவும் இதனால் தி.மு.க.,வின் செல்வாக்கு உயர்ந்துள்ளதாகவும், மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் இந்த மூவர் அணி கூறியுள்ளது.Income Tax department searches premises of MK Stalin's son-in-law Sabareesanஅதிருப்தி

தி.மு.க., எம். எல்.ஏ.,க்களும் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக கூறி, அவர்களுக்கு மீண்டும் ‘சீட்’ வழங்க பரிந்துரை செய்துள்ளனர். ஆனால், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் மீது சொந்த கட்சியினரே அதிருப்தியில் இருந்ததை மறைத்து
விட்டனர். அதை ஐந்து ஆண்டுகளாக திமுக தலைவர் ஸ்டாலினும் நம்பி வந்துள்ளார்.

இந்த மூவர் கூட்டணி தேர்தல் நேரத்தில் சபரீசன் சொன்னவர்களுக்கும் அமைச்சர்கள் சொன்னவர்களுக்கும், எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும் சீட் வழங்க பரிந்துரைத்துள்ளனர். மேலும் அவர்கள் கண்டிப்பாக வெற்றி பெற்று விடுவார்கள் என்று பொய் தகவல்களையும் கட்சி தலைமைக்கு சொல்லி இருக்கிறார்கள்.

சீட் கிடைத்தவர்களிடம் இருந்து பெருந்தொகையை தேர்தல் வியூக வகுப்பு நிறுவனம் வசூல் செய்துள்ளதாக தெரிய வருகிறது. துர்கா மேடம் நடத்திய விசாரணையில் இந்த அதிர்ச்சி தகவல் அம்பலமாகியுள்ளது.திராவிட மாப்பிள்ளைக்கு பிறந்தநாள்..." எம்.பி முதல் எம்.எல்.ஏ வரை வரிசை கட்டி வாழ்த்து.. சபரீசனுக்கு திமுகவினர் வாழ்த்து மழை | DMK Party Members ...இந்த பிரச்னையை திசை திருப்புவதற்காக, தேர்தல் வியூக நிறுவனத்தில் பணிபுரிந்த, 200க்கும் மேற்பட்டவர்களை திடீரென வேலையை விட்டு நீக்கி உள்ளனர். இந்த மூவர் அணி தன்னை ஏமாற்றியதை இப்போதுதான் ஸ்டாலினும் அவரது குடும்பத்தினரும்  உணர தொடங்கி உள்ளனர். மேலும் அமைச்சர்கள் அடித்த கொள்ளையை கேட்டு துர்கா மேடத்திற்கு பி.ப்பி ஐலெவலுக்கு எகிறியதாம்.

மேலும் மாவட்ட செயலாளர்கள், மாநகராட்சி மேயர்கள், மாநகரப் பொறுப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என அவரவர்கள் அடித்த கொள்ளையை கேட்டு அதிர்ந்து போனதாம் கட்சி தலைமை.

இது போன்ற அராஜகங்கள் குறித்து சில பத்திரிகையாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் செய்திகளாக வெளியிட்டு பெண் நிறுவனத்தில் பணியாற்றிய தலைமை பொறுப்பில் இருக்கும் இளங்கோவனுக்கு அனுப்பியும் கூட அவர் கட்சி தலைமைகோ அல்லது சபரீஷனுக்கோ தெரிவிக்காமல் கடந்து சென்று விட்டதாக சொல்கிறார்கள் சில பத்திரிகையாளர்கள். அவர் பல செய்தி நிறுவனங்களுக்கு லட்சக்கணக்கில் பணம் வாங்கி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.சபரீசனுடன் PEN அமைப்பின் முக்கிய நிர்வாகி இளங்கோவன்.

மேலும் பல youtube நிறுவனங்களுக்கு அதாவது சில டுபாக்கூர் நிறுவனங்களுக்கு பல லட்ச ரூபாய் மாத, மாதம் தங்களை ஆதரித்து பேசும்படி பணம் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த youtube நிறுவனங்கள் உண்மையை மறைத்து திமுகவுக்கு ஜால்ரா தட்டி ஸ்டாலின் வாழ்க, உதயநிதி வாழ்க , திமுக வாழ்க என்று பேசி திமுகவிற்கு வாய்கரிசி போட்டு விட்டனர் என்கிறார்கள் திமுக வழக்கறிஞர் அணியை சேர்ந்த  சில மூத்த வழக்கறிஞர்கள். நிற்கவே முடியாத துரைமுருகனுக்கு சீட்டு வழங்கியது மிகப்பெரிய தவறு என்றும் அவர் நிச்சயம் வெற்றி பெற மாட்டார் என்ற பல தகவல்கள் கிடைக்கும் கூட இவர்கள் கட்சி தலைமைக்கு தெரிவிக்காமல் ஏமாற்றியுள்ளனர்.Madras High Court Cancels Acquittal of TN Minister Duraimurugan in Disproportionate Assets Case | Chennaionlineதேர்தல் பிரச்சாரத்தின் போது துரைமுருகன் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஒரு பொறுப்பாளரை எனக்கு சமமாக நீ நிற்கக்கூடாது வேனை விட்டு கீழே இறங்கு என்ற செய்தி சமூக வலைதளங்களில் வெளியானதும் ஒட்டுமொத்த தலித் மக்களும் திமுகவுக்கு வாக்களிக்கக் கூடாது குறிப்பாக துரைமுருகனுக்கு  தலித் மக்கள் ஓட்டு போடக்கூடாது என்று முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.MK Stalin Duraimurugan Meet: முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு... ஒருபக்கம் நியூ இயர் மீட், மறுபக்கம் ED ரெய்டு!அது மட்டும் இல்லாமல் நன்றி என்ற வார்த்தைக்கு துரை முருகன் குடும்பத்திற்கு பிடிக்காத வார்த்தை என்றும் காட்பாடி திமுகவினரும், மற்ற எதிர்க்கட்சிணரும் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். 

இது மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள குடிமகன்கள் பல இடங்களில், பல வீடியோக்களில் இன்னும் கூட டாஸ்மாக் கடைகளில் குவாட்டருக்கும் , பீர் வகைகளுக்கும் கூடுதலாக பணம் வசூலித்து வருகிறார்கள் என்றும், டம்ளர் ஊறுகாய் என சைடிஸ் விலை அதிக விலைக்கு  விற்கப்பட்டு வருகிறது என்றும் குடிமகன்கள் புகார் சொல்லி வருகின்றனர். அதே போல கேட்ட பணத்தை தரவில்லை என்றால் குடிமகன்களை போலீசாரை வைத்து மிரட்டுவதாகவும், புகார்கள் வந்தும் கூட  அரசு டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் சம்பள உயர்வு வழங்கினார்கள். இது குறித்து பல்வேறு செய்திகள் வெளியிட்டும் கூட அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் இன்று வரை டாஸ்மாக் மது கடைகளில் கூடுதலாக பணம் வசூலித்து கொண்டு  தான் வருகிறார்கள். இதுவே திமுக வெற்றிக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாத உண்மை. அமைச்சர்களுடன் சேர்ந்து கொண்டு தமிழக முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் அடித்த கொள்ளை, போலீஸ் அதிகாரிகள் அடித்த கொள்ளை சொல்லி மாளாது.  எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை லாபம் என்கிற நிலையில் பல கோடி ரூபாய் அரசு திட்டங்கள் பெயரில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள நூலகத்தின் பெயரிலும் முதலமைச்சர் படிப்பகத்தின் கட்டிடம் கட்டுவதில் அடித்த கொள்ளைகளை சொல்லி மாளாது என்கின்றனர் சில சமூக செயற்பாட்டாளர்கள்.Happy Birthday #sabareesan anna.. 😍❤️‍🔥 . #hbdsabareesan #dycmudhay #trendingnow #udhayanidhifan #udhayanidhistalin #udhayanna #udhaynidhistalin #udhayanidhistalin #udhay_stalin #illayathalapathyudhayanna💓 #makkalanban #iloveudhayanna ...அதேபோல அரசு செய்த மிக முட்டாள்தனமான காரியங்களில் சொத்து வரி உயர்த்தியது, மின் கட்டணத்தை உயர்த்தியது, பத்திரப்பதிவு கட்டணத்தை உயர்த்தியது என பல்வேறு விஷயங்களில் அரசுக்கு எதிரான மனநிலையை மக்கள் இடத்தில் கொண்டு செல்ல அதிகாரிகளே காரணமாக இருந்தார்கள். மேலும் கோயம்பேட்டில் இருந்த அரசு பேருந்து நிலையத்தை 30 கிலோமீட்டர் அப்பால் உள்ள கிளாம்பாக்கத்திற்கு மாற்றியதற்கு பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இது வெளிப்படையாகவே மக்கள் மத்தியில் திமுகவுக்கு எதிரான மணநிலையை உருவாக்கியது என்றால் மிகையல்ல. மேலும் தேர்தல் நேரத்தில் பூந்தமல்லி, மாதாவரம், கிளாம்பாக்கம், தாம்பரம், வேலூர் போன்ற பகுதிகளில் பேருந்து தட்டுப்பாடு ஏற்பட்டது.  பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானதும் பூந்தமல்லியில் திருவள்ளூர் கலெக்டர் பிரதாபை பொதுமக்கள் சுற்றி வளைத்து போராட்டம் நடத்தியது சமூக வலைதளங்களில் வைரலானது இது திமுகவின் தோல்விக்கு பெரும் காரணம் என்பதை மறுக்க முடியாது.

ஆவடி நாசர் மீண்டும் அமைச்சர் ஆகிறார்? - Avadi Nazar becomes minister again?

மகளிர் உரிமைத் தொகை.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் அதிகாரிகள் மெத்தனம் காட்டியது பெரும்பாலான பெண்கள் மத்தியில் திமுகவுக்கு ஓட்டு போடக்கூடாது என முடிவெடுத்தனர். திமுக குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கும் அவர்களது உறவினர்கள் குடும்பத்தை சார்ந்த பொருளாதாரத்தில் நல்ல நிலையில் உள்ளவர்களுக்கும் சில வசதி படைத்த குடும்பங்களுக்கு அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள், திமுக நிர்வாகிகள், மகளிர் உரிமை தொகை கிடைக்க அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்து தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு அந்த மகளிர் உரிமை தொகை கிடைக்க வழிவகை செய்தனர்.இரவில் எனக்கு வந்த தகவல்.. ஸ்டாலின் எச்சரித்த 4 நாளில் எ.வ வேலு வீட்டில் ரெய்டு.. நடந்தது என்ன? | CM Stalin warned about raids juts 4 days before IT raid on the places belonging ...இதனால் பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கிற மக்களுக்கு அந்த உரிமைத் தொகை போய் சேரவே இல்லை என்பது நிதர்சனமான உண்மை. இதுகுறித்து வேண்டுமானால் திமுக  கட்சி தலைமை அந்தந்த பகுதியில் உள்ள நிர்வாகிகளை அழைத்து விசாரணை நடத்தினால் உண்மை என்னவென்று தெரியவரும். அதேபோல கனிம வளத்துறையிலும் பொதுப்பணி துறையிலும் நெடுஞ்சாலை துறையிலும் அடித்த கொள்ளைகளும், நடந்த மோசடிகளும் சொல்லி மாளாது.V.G. Raajendran - V.G. Raajendran added a new photo.பாஜக கட்டிய பாலங்கள் இடிந்து போனால் அது குறித்து விமர்சித்து கேலி கிண்டல் அடித்து வந்த திமுக தனது துறை அமைச்சரவையில் உள்ள ஏவ. வேலு கட்டிய பாலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டபோது நடவடிக்கை எடுக்காமல் மௌனமாக இருந்ததற்கு காரணம் என்ன என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். அப்படி என்றால் அந்த பாலம் கட்டுவதில் நடந்த மோசடி குறித்து அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்புகின்றனர் பொதுமக்கள்.திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான மகளிர் உரிமைத் தொகை கடந்து வந்த பாதை!அரசு அறிவித்த கறவை மாடு திட்டம் எத்தனை பேருக்கு போய் சேர்ந்தது என்று அரசுக்கு தெரியுமா? இத்திட்டம் குறித்து பொதுமக்களுக்கு போய் சேரவே இல்லை என்பதை திமுக தலைமை க்கு அறியுமா அல்லது அந்த திட்டத்தில் திமுகவினர் அடித்த கொள்ளை எவ்வளவு என்பது மில்லியன் டாலர் கேள்வி. அதேபோல திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி, ஆவடி போன்ற தொகுதிகளில் திமுக  வெற்றி பெறாது என்றும் புதிய வேட்பாளர்களை களத்தில் நிறுத்த வேண்டும் என்றும் பல செய்திகள் வெளியீட்டும் கூட அதை கட்சி தலைமையின் காதுக்கு போய் சேரவிடாமல் 3வர் கூட்டணியினர் பார்த்து கொண்டனர்.

PEN அமைப்பின் முக்கிய நிர்வாகி இளங்கோவன்.

மேலும் சேகர்பாபு பெரிய லாபி செய்து தனது சமூக மக்களுக்கு திமுக வெற்றி பெறக்கூடிய தொகுதியில் வேட்பாளரை மாற்றி களத்தில் நிற்க வைத்ததால் பல வெற்றி பெற வேண்டிய தொகுதிகள் சென்னையில் தோல்வியடைந்தது. இதுபோல உட்கட்சி பிரச்சனை, கோஷ்டி அரசியல், சாதி அரசியல் என பல முட்டாள் தனமான செயல்களை கட்சி நிர்வாகிகள் செய்ததை  கட்சி தலைமை கண்டிக்காததே திமுகவின் தோல்விக்கு காரணம் என்றால் அது மிகையல்ல. இவ்வாறு தி.மு.க., வட்டாரத்தில் பல செய்திகளையும் தகவல்களையும் வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள்.

இந்த செய்தி குறித்து பெண் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான இளங்கோவன் தனது தரப்பு விளக்கத்தை அளித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.

@ig senthil velan @durga @udhayanidhi #stalin @duraimurugan

#elangovan @sabareesan

Share:

இரா. தேவேந்திரன்.

May 10, 2026

Leave a Comment