chennireporters.com

ஆண்களை மிரட்டி பணம் பறிக்கும் வட நாட்டு பேரழகி.

பேஸ் புக்கில் பரவும் ஆன்லைன் விபச்சாரம்..

கடந்த சில நாட்களாக முகநூலில் குஞ்ஜன் ஷர்மா(Gunjan Sharma) என்னும் பெயரில் ஒரு வடநாட்டு இளம்பெண் ஃபேஸ்புக்கில் பிரபலமான ஆண்கள், வசதியான ஆண்கள் மற்றும் தொழிலதிபர்கள் என ஒரு லிஸ்ட் தயார் செய்யப்பட்டு அவர்களுக்கு பிரண்ட் ரெக்வஸ்ட் கொடுப்பார்.

சபலமடைந்த சிலர் அந்த பெண்ணின் நட்பில் இணைந்து கொள்வார்கள்.உடனே அவர்களுக்கு இந்த பெண் அவரின் வாட்ஸப் என்னையும் தருவார்.சாதாரனமாக அசடு வழியும் படி பேசுவார்.அவரது வாட்ஸ் அப் எண் 7099872017 என்பதாகும்.பிறகு அந்த நம்பருக்கு சில ஆபாசப்படங்களை அனுப்பி வைப்பார்.

தன் காம வலையில் அவர்களை விழும் படி பேசி பணம் பறிப்பதில் குறியாக இருப்பார்.அதன் பிறகு வீடியோ காலில் போய் அரை நிர்வாண நின்று போஸ் தருவார் எதிரில் இருப்பவரையும் நிர்வாண ப்படுத்தி நிற்க வைப்பார்.இதை இந்த ஆண்களுக்கு தெரியாமலே வீடியோ எடுத்து கொள்வார்கள்.

இன்னும் பல சேட்டைகள் தொடரும் அதை எல்லாம் நாம் இங்கே பதிவேற்றம் முடியாது அவ்வளவு மோசமான செயல்களாக இருக்கும்.பின்னர் அவர்களின் பின் புலத்தை தெரிந்து கொள்வார்.வசதியானவர்கள் ஆக இருந்தால் என்ன தொழில் செய்கிறார்கள் என்பதைப் பார்த்து விட்டு கொஞ்சிக் கொஞ்சிப் பேசி சில ஆபாச படங்களை அனுப்பி செலவுக்கு பணம் கேட்பார்.

பணம் கொடுத்தால் ஆச்சு இல்லை என்றால் எதிர்முனையில் இருக்கும் ஆண்கள் பேசவில்லை என்றால் சில ஆபாச படங்களை அவர்களின் நண்பர்கள் வட்டத்திற்கு அனுப்பி விடுவதாக மிரட்டுவார்கள்.தான் அந்த பெண்ணிடம் பேசிய ஆபாச ஆடியோ, வீடியோ வெளியாகிவிடுமோ என்ற பயத்தில் அவர்கள் கேட்கும் பணத்தை கொடுக்க சம்மதிப்பார்கள்.இப்படி பல திருமணமான பெருசுகள் மற்றும் இளைஞர்கள் பலர் இந்த குஞ்ஜன் ஷர்மா விடம் பணத்தை இழந்துள்ளனர்.

தமிழகத்தை மிரட்டும் இந்த ஃபேஸ்புக் விபச்சாரம் பற்றி யாரும் தாமாக முன் வந்து புகார் அளிக்க விரும்ப வில்லை.கோவை, திருப்பூர், திருச்சி, ஓசூர், பெங்களூர் சென்னை போன்ற பெரு நகரங்களில் குஞ்ஜன் ஷர்மா தனது வியாபாரத்தை செய்து வருகிறார்.குஞ்சன் சர்மா தொடர்பாக நாம் பேஸ்புக்கில் தேடியபோது இந்த புகைப்படம் மாற்றப்பட்டு வேறொரு புகைப்படம் இருக்கிறது.

அதிலும் பல கிளு கிளுப்பான புகைப்படங்களும் அரைநிர்வாண படங்களும் இடம் பெற்றுள்ளன.இந்தப் பெயரில் உள்ளவர்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருப்பதாக முகநூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பணம் பறிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் யாராவது இந்த குஞ்ஜன் சர்மா பெயரை தவறாக பயன்படுத்துகிறார்களா அல்லது இந்த கொஞ்சம் சர்மா தான் பணம் பறிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழக இளைஞர்களை ஏமாற்றி வருகிறார் என்று காவல் துறையினர் தான் கண்டுபிடிக்க வேண்டும்.

தமிழக இளைஞர்கள் முகம் தெரியாத வடநாட்டு பெண்கள் ஃபேஸ்புக்கில் பிரண்ட் ரெக்வஸ்ட் கொடுத்தால் யாரும் நட்பு பாராட்டாமல் தங்களுடைய பணத்தை பாதுகாத்து கொள்வது நல்லது.

இதையும் படிங்க.!