ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 30 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்ட பல முக்கிய ஆவணங்கள் கைபற்றப்பட்டது இதனால் அந்தப்பகுதியில் உள்ள அதிகாரிகள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர் அப்போது கணக்கில் வராத ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது இந்த அலுவலகத்தில் பொறுப்பு அதிகாரியாக இன்ஸ்பெக்டர் குணசேகரன் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று அவர் வழக்கமான அலுவலக பணியில் ஈடுபட்டிருந்தபோது அந்த அலுவலகத்திற்குள் ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராஜேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரேகா மற்றும் சதீஷ் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு இருந்த இடைத்தரகர்கள் புரோக்கர்கள் உள்ளிட்ட அனைவரும் வெளியேற விடாமல் அவர்களை ஒரு அறையில் உட்கார வைத்து தீவிர விசாரணை நடத்தினர். பின் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக சோதனை மேற்கொண்டனர்.
அந்த சோதனையில் கோபிசெட்டிபாளையம் பிரேக் இன்ஸ்பெக்டர் பொறுப்பு குணசேகரனின் உதவியாளராகவும் செந்தில் என்பவர் செயல்பட்டு வருகிறார். அவரிடம் கட்டுக்கட்டாக லஞ்சப் பணம் பெற்று பாக்கெட்டில் வைத்திருந்தார். அவரிடம் இருந்த சில ஆவணங்களையும் பணத்தையும் போலீசார் கைப்பற்றினர். இதனை அடுத்து பொறுப்பு அதிகாரியான பிரேக் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் ஆர்.டி.ஓ. அலுவலக ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்..
பின்னர் அங்கிருந்த புரோக்கர்களிடம் இருந்து கைப்பற்றிய லஞ்சப் பணத்தை மொத்தமாக ஆய்வு செய்து பார்த்ததில் கணக்கில் வராமல் இருந்த ரூபாய் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது சில ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
மேலும் குணசேகரன் மற்றும் ஆர்டிஓ ஆபீஸ் அலுவலக அதிகாரிகளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒரு சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர் இதனால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது. லஞ்சம் வாங்கிந அதிகாரிகள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் சமீப காலமாக திருவள்ளூர் திருத்தணி ஈரோடு சேலம் வேலூர் என பல்வேறு மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆர்டிஓ அலுவலகங்களில் சோதனை நடத்தி பல லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்து அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.
இதற்கு காரணம் தமிழ்நாடு முழுக்க வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பிரேக் இன்ஸ்பெக்டர்,. ஆர்டிஓ, சூப்பர் ட்ரென்ட் போன்ற முக்கிய பணிகளின் காலி இடங்கள் நிறைய உள்ளன அந்த காலியிட பணிகளை சரி செய்ய ஒரு மாவட்டத்தில் ஒரு பகுதியில் பணியாற்றும் இன்னொரு அதிகாரி காலியிடங்களில் உள்ள பகுதிகளுக்குச் சென்று பணியாற்றுகின்றனர் இதனால் வேலை பளுவும் அதிகரிக்கிறது. அவர்கள் அதிகமாக லஞ்சம் வாங்குவதும் அதிகரித்து வருகிறது எனவே அரசு உடனடியாக வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்கின்றனர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்.