chennireporters.com

#srilanka terrorists; இலங்கை தீவிரவாதிகளை பிடிக்காமல் கோட்டை விட்ட சென்னை கியூ பிரிவு போலிசார்.

இலங்கை கொழும்பில் இருந்து சென்னை வந்த  இஸ்லாமிய தீவிரவாதிகளை கோட்டை விட்ட தமிழக கியூ பிரான்ச் போலீசார் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மத்தியில் குழப்பம் கடந்த இரு தினங்களுக்கு முன் கொழும்பிலிருந்து இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த மூன்று தீவிரவாதிகள் முகம்மது நவ்ஷாத், முகமது பாரூக் மற்றும் முகமது நஃப்ரான் ஆகிய மூன்று இலங்கை குடியுரிமை பெற்றவர்கள். இந்த  பயணிகள் விமானம் மூலம் கொழும்பு பன்னாட்டு கம்பன் கட்ட விமான நிலையத்தில் இருந்து சென்னை வந்தனர்.

பின்னர் அவர்கள் சென்னையில் இருந்து உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து அகமதாபாத் புறப்பட்டுச் சென்றார்கள்.  ஏறத்தாழ இவர்கள் சென்னை விமான நிலையத்தில் சுமார் 10 மணி நேரம் தங்கி இருந்தனர்.

இவர்கள் கொழும்பிலிருந்து வந்து பன்னாட்டு விமானநிலையத்திலிருந்து இருந்து உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்து அங்கிருந்து அகமதாபாத் செல்லும் வரை விமான நிலைய க்யூபிரான்ஞ் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை படையினர் உட்பட போலீசார் கண்களில் படாமல் இவர்கள் அகமதாபாத் சென்றுள்ளனர்.

அங்கு இந்த மூன்று நபர்களையும் குஜராத் பயங்கரவாத தடுப்பு ஆன்ட்டி டெரடிஸ்கோ ஸ்குவாட் சுருக்கமாக ஏடிஎஸ் பிரிவினர் மிக நுட்பமாக கவனித்து அவர்களை கைது செய்தனர். இந்த மூன்று பேரும் கொழும்பிலிருந்து சென்னை வழியாக அகமதாபாத் வந்த காரணம் குறித்து குஜராத் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர் இந்நிலையில் இந்த மூவரையும் சென்னை வந்த போது கண்காணிக்காமல் விட்ட விமான நிலைய கியூ பிரான்ச் போலீசார் மீது உயர் அதிகாரிகள் உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளதாக தெரிய வருகிறது.

இந்த மூவரும் சென்னை வந்த சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்து வருகின்றனர். இதுகுறித்து தமிழக போலீஸ் உயரதிகாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருவதாக தெரிய வருகிறது. இது குறித்த தகவல்களை ரகசிய போலீசார் எவ்வித தகவலும் நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் தெரிவிக்கவும் இல்லை என தெரிய வருகிறது. தீவிரவாதிகள் வந்த விவரம் கூட தெரியாமல் பணிபுரிந்தவர் கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட உள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை வழியாக அகமதாபாத் சென்ற இலங்கை தீவிரவாதிகள் சென்னை விமான க்யூப் பிராஞ்ச் சி ஐ ஏஸ் எப் போலிசார் கண்ணில் மண்ணைத் தூவி மூன்று துப்பாக்கி மற்றும் 20 தோட்டாக்களுடன் அகமதாபாத்தில் பிடிபட்டனர். பிடிபட்ட மூவரும் தமிழ் பேசுவதால் கு‌ஜராத் போலிசார் சந்தேகம் அடைந்துள்ளானர்.

விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் உதவியுடன் தான் இந்த தீவிரவாதிகள் அகமதாபாத் சென்றிருக்க முடியும் என்று உறுதியாக சொல்கின்றனர் மூத்த உளவுத்துறை அதிகாரிகள் எனவே தீவிரவாதிகள் இலங்கையில் இருந்து சென்னை வழியாக குஜராத் செல்லும் போது அன்று சென்னை விமான நிலையத்தில் பணியில் இருந்த அனைத்து  அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த வேண்டும் அவர்களின் செல்போன்களை ஆய்வு செய்யப்பட வேண்டும் என்கின்றனர் அதிகாரிகள்.

இதையும் படிங்க.!