chennireporters.com

#collection hunt; RTO OFFICEகளில் தொடரும் டுபாக்கூர்களின் வசூல் வேட்டை.

தமிழக RTO அலுவலகத்தின் சிறப்பு செய்தி…

தமிழக RTO அலுவலகங்களில் தொடர்ந்து டுபாக்கூர் ரிப்போர்ட்டர்களும் செல்லான் வாங்கித் தரும் புரோக்கர்களும் நடத்தும் வசூல் வேட்டையில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் இதை அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.

தமிழ்நாடு முழுவதும் எழுதப் படிக்கத் தெரியாத நான் பல வருடங்களாக நாங்கள் சீனியர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பல டுபாக்கூர்கள் தாங்கள் ஒரு செல்லாக் காசாக இருக்கும் ஒரு பத்திரிகை அடித்து அக்களத்தில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு RTO ஆபிசுக்கும் தாங்கள் அடித்து வைத்திருக்கும் 50 புத்தகங்களை எடுத்துக் கொண்டு வசூல் வேட்டைக்கு சென்று விடுவார்கள்.

சில அதிகாரிகளிடம் நேரில் சென்று நலம் விசாரிப்பார்கள் தங்கள் குடும்பம் எப்படி இருக்கிறது என்று அன்போடு விசாரித்து காலில் விழுந்து பிச்சை கேட்பார்கள். சிலர் ஐயா நான் சென்னையிலிருந்து வந்து விட்டேன் சாப்பிடுவதற்கும் பஸ்ஸுக்குமாவது காசு கொடுங்கள் என்று காலில் விழுந்து கெஞ்சாத குறையாக கேட்பார்கள்.

இப்படி சில டுபாக்கூர்கள் இருக்கையில் சில டுபாக்கூர்கள் அதிகாரிகளின் நான்தான் அவர்களுக்கு பினாமி ஜூனியர் அசிஸ்டென்டாக இருந்தவரை நான் தான் பிரேக் இன்ஸ்பெக்டராக பதவி வாங்கி கொடுத்தேன். ஆர்டிஓவாக ஆக்கினேன். என்று சொல்லி துறைக்கு வந்து சில ஆண்டுகளே ஆன அதிகாரிகளிடம் பொய்யான விஷயங்களை சொல்லி மிரட்டாத வகையில் அன்பாக மிரட்டும் தொணியில் பிச்சை கேட்டு சம்பாதித்து வருவார்கள். சிலர் ஐயா நூறாவது கொடுங்கள், சாப்பிட்டுவிட்டு போகிறேன். என் கையில் பஸ்ஸுக்கு கூட காசு இல்லை என்று கேட்பார்கள் ஆனால் இப்படி போகிறவர்கள் அனைவருமே டிப், டாப் ஆசாமிகள் தான்.

ஒவ்வொருவரும் கார்களில் சென்று தான் வசூல் வேட்டை  நடத்துகிறார்கள். ஆனால் இப்படிப்பட்ட டுபாக்கூர்களுக்கு படி அளக்கும் அறிவு கெட்ட அதிகாரிகளை செருப்பால் அடித்தால் கூட புத்தி வராது என்கிறார்கள் சில நேர்மையான அதிகாரிகளும் லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றும் மூத்த அதிகாரிகளும்.

#rtos are trapped; டுபாக்கூர்களின் கையில் சிக்கித் தவிக்கும் (RTO)ஆர்டிஓக்கள். – https://www.chennaireporters.com/news/rtos-are-trapped-in-the-hands-of-drug-dealers/

பணம் கேட்டு வரும் டுபாக்கூர்களை காவல்துறையிடம் புகார் கொடுக்காமல் ஐந்தாயிரம் கேட்டால் 2000 கொடுத்து அனுப்புகிறார்கள். சில இடங்களில் நூறு ரூபாய் கூட வாங்கிக் கொண்டு வருகிறார்கள் ஒரு சில அலுவலகத்தில் 200 ஆர்டிஓவிடம் 300 பிஏவிடும் 200 சூப்பர் இடம் 200 என ஒரு ஆயிரம் ரூபாயாவது பிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார்கள்.

ஒரு சிலர் அய்யா எங்களுக்கு பணம் எல்லாம் தேவையில்லை எங்களுக்கு ஏதாவது வேலை செய்து கொடுங்கள் என்று செத்துப் போனவனுக்கு லைசென்ஸ் செத்துப் போன காருக்கு ஆர்சி புக் டூப்ளிகேட் ஆர்சி, பைனான்ஸ் ஆர்.சி என எல்லா வகையில் எப்படியெல்லாம் ஊழல் செய்ய வேண்டுமோ அப்படி எல்லாம் ஊழல்களை செய்ய அதிகாரிகளுக்கு இந்த டுபாக்கூர்கள்தான் கற்றுத் தருகிறார்கள்.

அதிகாரிகள் திருடுவதற்கு கற்று தரும் டுபாக்கூர் ரிப்போட்டர்கள்.

திருடுவதற்கு அதிகாரிகளுக்கு இவர்கள்தான் வழியையே கற்றுத் தருவார்கள் அந்த அதிகாரியை அப்படி செய்வார் இந்த அதிகாரி இப்படி செய்வார் என்று அலுவலகத்தில் புகுந்து ஆர்சி புக் திருடுவது, பைல்களை திருடுவது, லைசன்சை திருடுவது இப்படி எல்லா திருட்டு வேலைகளையும் இந்த டுபாக்கூர் பத்திரிகையாளர்கள் தான் செய்கிறார்கள்.  ஏன் சில பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பெயரிலும் சில ஆங்கில பத்திரிகையில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் ஆங்கிலத்தில் பேசி ஆர்டிஓவிடம் தனது பினாமி களின் google play எண்ணிற்கு பணம் போட சொல்லும் வேலைகளையும் செய்து வருகிறார்கள்.

டுபாக்கூர் ரிப்போர்ட்டர்களின் மாத மாமூல்  தொகை.

தமிழ்நாட்டில் அதாவது எழுதப் படிக்கத் தெரியாத ஆர்டிஓ ஆபீஸ்களில் கெஞ்சி கூத்தாடி பிச்சை எடுக்கும் டுபாக்கூர்களில் மாத வருமானம் ஒரு லட்சத்து 75 ஆயிரம் அதாவது சராசரியாக ஒரு ஆபீசில் ஆர்டிஓ, பிரேக் இன்ஸ்பெக்டர், சூப்பர் ரெண்ட், பிஏ என நான்கு அதிகாரிகளிடம் சராசரியாக 300 ரூபாய் வாங்கினால் கூட 1500 ரூபாய் தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 85 அலுவலகங்களில் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 500 ரூபாய் பிச்சை எடுத்து வருகின்றனர்.

அதாவது ஓரளவு விஷயம் தெரிந்து நீண்ட நாட்களாக பிச்சை எடுக்கும் டுபாக்கர்களின் மாத மாமுல் தொகை 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய், இதையே ஏறக்குறைய பல வருடங்களாக சீனியர் ரிப்போர்ட்டர் நான் பல அதிகாரிகளை உயர் பதவிகளில் அமர்த்தி இருக்கிறேன் சாதாரணமாக இருந்தவர்களை அதிகாரிகள் அளவிற்கு பதவி உயர்வு வாங்கி தந்து இருக்கிறேன். என சொல்லி 85 அலுவலகங்களிலும் வசூல் வேட்டை நடத்தும் சில சீனியர் டுபாக்கூரின் மாத மாமூல் 8 லட்சத்து ஐம்பதாயிரம், சிலர் நான்தான் தமிழ்நாட்டின் மொத்த ஆர்டிஓ ஆபீஸ் என் கையில்தான் இருக்கிறது என்று சொல்லும் சில ஜாதி வெறி பிடித்த திமிர் பிடித்த டுபாக்கூரின் மாத மாமூல் தொகை 15 லட்சத்திலிருந்து 20 லட்சம் ரூபாய் வரை என்கிறார்கள் அஞ்சுக்கும் பத்துக்கும் மாரடிக்கும் சில ஏரியா டுபாக்கூர் ரிப்போர்டர்கள் சொல்லும் தகவல்.

எனவே யார் எந்த பத்திரிகையை சேர்ந்தவர்கள் எதற்காக மாதமாதம் வருகிறார்கள் நாம் ஏன் பணம் தர வேண்டும் என்று நேர்மையாக தன்னுடைய அதிகாரத்தை செய்யத் தொடங்கினால் ஆர்டிஓ ஆபீஸ்களில் லஞ்சம் தலைவிரித்தாடும் நிலை மாறிவிடும் ஆனால் டுபாக்கூர் களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு தன் குடும்பத்தையும் வப்பாட்டி குடும்பத்தையும் ஸ்டெப்னி குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பல சட்டத்துக்கு எதிரான விஷயங்களை செய்து கொடுத்து பணம் சம்பாதிக்கும் அதிகாரிகளால் தமிழக ஆர்டிஓ ஆபீஸ் அதிகாரிகளின் சட்ட விரோத செயல்கள் அதிகரித்து வருகிறது.

சாலை மற்றும் போக்குவரத்து துறை செயலாளர். கிரண் குரலா ஐஏஎஸ்.

எனவே லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தலைமை பொறுப்பேற்று இருக்கும் நேர்மையின் சிகரம் டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள சாலை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு புதிய அறிவிப்பையும் டுபாக்கூர் பத்திரிகையாளர்களுக்கு பணம் தரக்கூடாது நேர்மையாக அதிகாரிகள் நடந்து கொள்ள வேண்டும்.மக்கள் வரிப்பணத்தை வீணடிக்க கூடாது அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தக் கூடாது என்கிற வகையில் புதிய சுற்றறிக்கை அனுப்பினால் ஓரளவு ஆர்டிஓ ஆபீஸ்களில் லஞ்சத்தை தவிர்க்கலாம் எழுதப் படிக்கத் தெரியாத குடிகார கஞ்சா பொறுக்கிகளின் ஃபிராடுத்தனங்களை ஒடுக்கலாம்.

தமிழக செக் போஸ்ட்களில் வசூல் வேட்டை ;
தமிழ்நாடு முழுவதும் உள்ள செக் போஸ்ட்களில் குறிப்பாக ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டில் நுழையும் பெத்தி குப்பம், கர்நாடகாவில் இருந்து சென்னைக்குள் நுழையும் செக்போஸ்ட் கேரளாவில் இருந்து சென்னைக்குள் நுழையும் செக்போஸ்ட் களில் சில டுபாக்கூர்கள் மற்ற  டுபாக்கூர்களுக்கு எவ்வளவு லஞ்சப்பணம் தருகிறாயோ அவ்வளவு எனக்கு தர வேண்டும் என்று மிரட்டி வருகிறார்கள். இப்படி தமிழ்நாட்டில் 1000த்திற்கும் மேற்பட்ட டுபாக்கூர் ரிப்போட்டர்கள் இருக்கிறார்கள்.சில பழைய டுபாக்கூர்கள் எழுதப் படிக்கத் தெரியாத நாய்களுக்கு 100, 200 கூட தர வேண்டாம் அவர்கள் மீது போலீசில் புகார் கொடுங்கள் என்று சொல்லி வருகிறார் என்கிறார்கள் இந்த எழுதப் படிக்கத் தெரியாத டுபாக்கூறுகள். எந்த அடிப்படையில் இந்த ஃபிராடு நாய்கள் ஆர்டிஓ அதிகாரிகளை மிரட்டி பணம் கேட்கிறார்கள் அதற்கு அவர்கள் ஏன் பணம் தருகிறார்கள் என்ற தகவல் இதுவரைக்கும் தெரியவில்லை என்பதுதான் ஆச்சரியத்தில் ஆச்சரியம்.

 

ஜெயிலுக்குப் போயும் திருந்தாத அதிகாரிகள்.
தனது பனிக்காலங்களில் வேலைகள் செய்து தருவதற்கே ஆயிரங்களில் தொடங்கி லட்சங்களில் வரை லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் தனது எதிரிகளின் தாக்குதலுக்கு இறையாகி சிறை சென்று பெயிலில் (BAIL) வெளியே வந்த பிறகு அதிகாரிகள் எப்படியாவது வழக்கிலிருந்து தங்களை விடுதலையாக வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கும் தனது அலுவலகத்தில் பணியாற்றும் மூத்த அதிகாரிகளுக்கும் பணம் கொடுப்பதும் அரசியல்வாதிகளின் வீட்டிற்கு சென்று கூஜா தூக்குவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்படி இருந்தும் சிறைக்கு சென்றும் கூட திருந்தாத அதிகாரிகள் மீண்டும் லஞ்சம் வாங்கும் வேலையில் மிக கவனமாகவும் கூடுதலாகவும் லஞ்சம் வாங்கி வருகின்றனர் என்பது கூடுதல் தகவல்.

தமிழக (RTO)ஆர்டிஓ ஆபீஸ்களில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் புரோக்கர்கள் டுபாக்கூர் ரிப்போர்ட்டர்கள் என பல அதிகாரிகளின் புகைப்படங்கள் நம்மிடம் இருந்தாலும் அதை வெளியிட விரும்பவில்லை காரணம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவர்களது குடும்பத்தினர்கள் அதைப் பார்த்தால் அவமானத்தால் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடும் என்பதால் நாம் புகைப்படங்களை தவிர்த்து விட்டோம். யார் யார் என்பது அந்தந்த அதிகாரிகளின் மனசாட்சிக்கு தெரியும்.

இதையும் படிங்க.!