chennireporters.com

#thiruvalangadu mantheeswarar kovil; மாந்தீஸ்வரர் பெயரில் கோடிகளில் கொள்ளை; கும்மாளம் அடிக்கும் கோயில் நிர்வாகிகள்.

#exclusive story.

தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில்களில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்களில் இருந்து பூசாரிகள் ஐயர்கள் உயர் அதிகாரிகள் வரை கொள்ளையடிக்கும் கொள்ளை கூட்டமாக தான் இருந்து வருகிறார்கள். இப்படி பக்தர்களின் பணத்தை மோசடி செய்யும் திருடர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு?தி.மு.க. ஆட்சி தான் இந்து சமய அறநிலையத்துறைக்கு பொற்காலம்- அமைச்சர் சேகர்பாபு- Minister Sekhar babu says DMK regime was the golden age of the Hindu charitable sectorஇந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலுக்கு சொந்தமான உப கோயிலாக விளங்குவது திருவலங்காட்டிலுள்ள பாடல் திருத்தலங்கள் பெற்ற வட ராணேஸ்வரர் திருக்கோயில்.ரத்தக் கரையான ரயில் நிலையம்; திணறடிக்கும் திருவாலங்காடு சம்பவம்! | nakkheeranஇந்தத் திருக்கோயிலின் உள்ளே மாந்தீஸ்வரர் என்கிற சாமி சன்னதி உள்ளது. இந்த இடத்தில் தங்கள் குடும்பத்தில் தீராத பிரச்சனை , திருமணத்தடை குடும்ப பிரச்சனை, பதவி பிரச்சனை என அனைத்து பரிகாரங்களுக்கும் ஒவ்வொரு வாரம் சனிக்கிழமை தோறும் பரிகார பூஜை நடைபெறும். இந்த பூஜைக்காக அரசு 1600 ரூபாய் கட்டணமாக வசூலித்து வருகிறது.

இந்த பூஜை அரைமணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை நடைபெறும். இந்த பூஜை முடிந்த உடன் பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு ஒரு வெள்ளை நிற துண்டு, சிறிதளவு மிளகு சாதம், ஒரு சிறிய சில்வர் டப்பாவில் பஞ்சாமிர்தம் பத்து ரூபாய் மதிப்புள்ள ஒரு தேங்காய் ஐந்து ரூபாய் மதிப்புள்ள இரண்டு மஞ்சள் பழம் இரண்டு விபூதி பாக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.திருமண தடை போக்கும் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர்இதனுடைய மதிப்பு மொத்தம் 200 ரூபாயை கூட தாண்டாது என்கிறார்கள் பக்தர்கள் குடும்பத்தில் ஆயிரம் பிரச்சனை தொடர்பாக சாமியை கும்பிட்டு விட்டு பரிகார பூஜை செய்தால் தன் கரும்பு தன் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையுடன் வரும் பக்தர்களை கோயில் நிர்வாகம் ஏமாற்றுவது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக சொல்கிறார்கள் பக்தர்கள்.

எதுவும் தரவில்லை என்றால் கூட நாங்கள் ஏன் தரவில்லை என்று கேட்கப்போவதில்லை. ஆனால் பட்டப் பகலில் கண் கட்டி வித்தையைப் போல பக்தர்களின் தலையில் மிளகாய் அரைப்பது பெரும் கோபத்தை ஏற்படுத்தி வருகிறது என்கிறார் குடியாத்தத்தை சேர்ந்த ஒரு பக்தர்.Thiruvalangadu temple online booking!இந்த 1600 ரூபாய் யாருக்காக எங்கே போகிறது என்ற கேள்விக்கு பதில் தெரிந்தே ஆக வேண்டும் என்கின்றனர் பக்தர்கள் இது தவிர பரிகார பூஜை நடந்து வெளியே வரும்பொழுது ஒவ்வொருவரி டமும் கட்டாய வசூலாக தலைக்கு நூறு இருநூறு என வசூலிக்கிறார்கள் இப்படி வசூலிக்கப்படும் தொகை வாரம் சனிக்கிழமை ஒரு நாள் மட்டும் 25 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்யப்படுகிறது.

தவிர இந்த பரிகார பூஜைக்கு வாங்கப்படும் பாத்திரம் பஞ்சாமிர்தம் செய்ய தேவைப்படும் பொருட்கள் தேங்காய் அனைத்திலும் தரம் இல்லாத பொருட்களை வாங்கி அதில் பழம் இலட்ச ரூபாய் கொள்ளை அடிக்கப்படுகிறது அது தவிர தரம் அற்ற முறையிலேயே இந்தப் பொருட்கள் செய்யப்படுகிறது என்கிற குற்றச்சாட்டை முன்வைக்கின்றார் சென்னை வடபழனியை சேர்ந்த தேவராஜ்.திருவலாங்காடு கோயில் நிர்வாகி கார்த்தி.

அது தவிர இந்த பரிகார பூஜையில் பயன்படுத்தப்படும் நவதானியங்கள் ஒரு பூஜைக்கு பயன்படுத்தப்படும் நவதானியங்களே மீண்டும் இரண்டு மூன்று நான்கு முறையாக என ஒவ்வொரு பூஜைக்கு ஒரே நவதானியத்தையே பயன்படுத்தி வருகின்றனர் அதை நாம் கண்கூடாக பார்த்தோம். 

கோயிலில் உள்ள கோசலைக்கு பயன்படுத்தப்படும் வைக்கோல், மற்றும்  புல் மற்றும் அதற்கு தேவையான பொருட்களில் பல லட்ச ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டு வருகிறது. அங்கு திருக்கோயிலில் பணியாற்றும் தினக்கூலி ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திலும் பல முறைகேடுகள் நடந்துள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகி கார்த்திக் என்பவரிடம் தொடர்பு கொண்டு கேட்டோம். அதற்கு அவர் அனைத்து விஷயங்களும் கோயில் உயரதிகாரிகளுக்கு தெரியும் நீங்கள் சொல்வதைப் போல அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏதாவது நடக்கும் நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று தெரிவித்தார்.கோயில் நிர்வாகத்தில் நடைபெறும் அனைத்து ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும் நீங்கள் தான் காரணம் என்று கேட்டதற்கு அவர் எதுவும் பதில் சொல்ல மறுத்துவிட்டார். இது குறித்து நாம் விசாரித்த போது அவர் திருத்தணியில் பணியாற்றிய போது அங்கு கோயில் நிர்வாகிகள் இரண்டு பேரை முருகேசன் மற்றும் சதீஷ் என்பவரை சாதியின் பெயர் சொல்லி திட்டியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியதால் அவருக்கு ஒரு வருடம் பணி வழங்காமல் அவரை பணிநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார் என்ற தகவலும் கிடைக்கப்பெற்றது. அதன் பிறகு உயர் அதிகாரிகளின் காலை பிடித்து திருவலங்காடு கோயிலுக்கு பணிக்கு வந்ததாக சொல்லுகிறார்கள்.

எனவே பக்தர்களை ஏமாற்றி கோடிகளில் கொள்ளை அடித்து தங்களது குடும்பங்கள் சுகபோகமாய் வாழ்ந்து வரும் கோயில் நிர்வாகியின் மீது இந்து அறநிலையத்துறை நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது தான் மாந்தீஸ்வரர் கேட்கும் கேள்வி.?  பக்தர்கள் தான் கடவுளுக்கு பயப்பட வேண்டும் என்பது மட்டும் விதி அல்ல.. கோயில்களில் பணியாற்றும் எல்லா நிர்வாகிகளும் ஊழியர்களும்  கடவுளுக்கு பயப்பட வேண்டும் என்ற விதி பொருந்தாதா? என்கின்றனர் பக்தர்கள்.

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மட்டும் தான் இந்த மாந்தீஸ்வரர் பரிகார பூஜை நடைபெறும் ஒரு சனிக்கிழமைக்கு மட்டும் வசூலிக்கப்படும் கட்டாய வசூலில் தொகை 20 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது ஒரு மாதத்திற்கு மொத்தம் நான்கு சனிக்கிழமைகள் ஒரு வருடத்திற்கு மொத்தம் 48 சனிக்கிழமைகள். ஒரு சனிக்கிழமைக்கு சராசரியாக 20 ஆயிரம் ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் கூட 48*20000= 9,60000 வசூலிக்கப்படுகிறது. 200 ரூபாய் கூட மதிப்பில்லாத 1600 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் பரிகார பூஜையில் கொள்ளையடிக்கப்படும் பணத்தின் மொத்த தொகை எவ்வளவு என்று வாசகர்களாகிய உங்கள் பார்வைக்கு விட்டு விடுகிறோம்.

இந்த குற்றச்சாட்டில் நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை நாங்கள் நேர்மையாக இருக்கிறோம் என்று தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்து அறநிலையத்துறையில் பணியாற்றும் ஊழியர்கலோ அல்லது நிர்வாகிகளோ அல்லது உயர் அதிகாரிகளோ தெரிவித்தால் அவர்களுக்கு நமது ஆபீஸ் நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு விழாவும் பத்திரமும் வழங்கப்படும் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தக் கோயிலில் நிர்வாகிகள் சம்பாதிப்பதை விட கொள்ளையடிப்பதை விட ஐயர் என்கிற போர்வையில் உள்ளவர்கள் அடிக்கும் கொள்ளை சொல்லி மாளாது என்கிறார்கள் சில கோயில் நிர்வாகிகள்.

இதையும் படிங்க.!