chennireporters.com

வழிப்பறி செய்த சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் இடமாற்றம்.

இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த்

திருவள்ளூர் கடந்த 15ஆம் தேதி ஊரடங்கு நேரத்தில் செவ்வாப்பேட்டை அருகே உள்ள சிறு கடல் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன்.

அவர் உடல் நலம் சரியில்லாத தன் மகன் நிதிஷ்குமாருக்கு மருந்து வாங்க திருவள்ளூருக்கு மோட்டார் பைக்கில் சென்றார்.

அப்போது அவரை காக்களூர் என்ற இடத்தில் போலீஸ் செக் போஸ்டில் வழி மடக்கிய சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் என்பவர் ஊரடங்கு நேரத்தில் ஏன் வெளியே வந்தாய்.

ஹெல்மட் இல்லை வேகமாக வந்து இருக்கிறாய் என அவரை மிரட்டி அவரைப் பேசவிடாமல் அவர் வைத்திருந்த 500 ரூபாய் பணத்தை மிரட்டி பறித்துக் கொண்டார்.

அவர் தன் மகனுக்கு மருந்து வாங்க செல்கிறேன் என்று சொன்னதைக் கூட காதில் வாங்காத சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன்,

கோர்ட்டுக்குப் போனால் 2,500 ரூபாய் ஆகும் அமைதியாக இந்த பணத்தை கொடுத்துவிட்டு திரும்பி போ என்று மிரட்டியுள்ளார்.

பாலகிருஷ்ணன்.

இதுதொடர்பாக பாலகிருஷ்ணன் போலீஸ் மிரட்டிய மிரட்டலில் பயந்து போய் செய்வது அறியாமல் வீட்டிற்கு சென்று முதல்வரின் ட்விட்டர் பக்கத்தில் தனக்கு நடந்த சம்பவத்தை பதிவு செய்தார்.

ஒரு ஒரு மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட காவல் துறையினருக்கு முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் நேரடியாக பாலகிருஷ்ணன் வீட்டிற்கு சென்று சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழிப்பறி செய்த 500 ரூபாய் பணத்தையும் அவருக்கு தேவை மருந்தையும் வாங்கி கொடுத்துள்ளார்.

அதன் பிறகு நடந்த தவறுக்கு அவர் மன்னிப்பும் கேட்டுள்ளார்.அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் டி.எஸ்.பி துரை பாண்டியனும் சம்பந்தப்பட்ட பாலகிருஷ்ணன் வீட்டிற்கு வந்து
நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் இரண்டு நாட்களில் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் காஞ்சிபுரத்திற்கு மாற்றப்பட்டார்.

ஊரடங்கு நேரத்தில் மனிதாபிமானம் இல்லாமல் செயல்பட்ட சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மீது துறைரீதியான நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை என்று இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் திருக்கழுக்குன்றத்தில் திடீர் பணி மாற்றம் செய்யப்பட்டார். துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் மீது ஏற்கனவே புல்லரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஊரடங்கு காலத்தில் அரசு அறிவித்த வழிகாட்டுதலின்படி செயல்பட்டு வந்த கடைகளில் குறிப்பாக ஆட்டு இறைச்சி கடை பிரியாணி கடை ஆகியவற்றில் அத்துமீறி நுழைந்து தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஆட்டுக்கறி மற்றும் பாத்திரத்துடன் இருந்த பிரியாணி குண்டானையும் எடுத்துச் வந்துவிட்டார்.

இதே போல தனக்கு வேண்டப்பட்ட இடங்களில் கடையில் நடத்த அனுமதி வழங்கிய இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த்.

காவல் நிலையத்தில் வைத்து மதுபாட்டில்களை விற்க தனது ரைட்டர் ஒருவருக்கு அனுமதி வழங்கினார் என்ற குற்ற சாட்டும் எழுப்பபட்டது.

அதுதவிர மே 8 ம் தேதி தண்ணீர் குளத்தை சேர்ந்த விமல் குமார் என்பவர் தனது நீல நிற ஐ.டென் காரில் (Tn.14.s.7976) காரில் கடத்தி வரப்பட்ட மது பாட்டிலோடு பிடிப்பட்ட விமல் குமார் மீது மட்டும் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் வழக்கு பதிவு செய்து மற்றொரு வரை ஜாமீனில் விடுதலை செய்துள்ளார்.

இதற்கு அவர் பெரும் தொகையை பெற்றாக கூறப்படுகிறது பின்னர் பின்னர் பிடிப்பட்ட மதுபாட்டில்கள் மீண்டும் ரஜினிகாந்துக்கு வேண்டப்பட்ட புரோக்கரிடம் கொடுக்கப்பட்டு மீண்டும் கள்ள சந்தை விற்பனை க்கு போய் விட்டது.

இப்படி இரண்டு ஆண்டுகளில் ஏறக்குறைய ஒரு கோடி ரூபாய் அளவிற்கு லஞ்சமாக தனது அதிகாரத்தை பயன்படுத்தி சம்பாதித்துள்ளதாக உளவுத்துறை ஐ.ஜிக்கு திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த நாம் தமிழர் மற்றும் அறப்போர் இயக்கத்தை சார்ந்தவர்கள் ஏற்கனவே புகார் கடிதம் எழுதியிருந்தனர்.

அதன் அடிப்படையில் டி.ஐ.ஜி. ரஜினிகாந்தை இடம் செய்து உத்தரவிட்டார் தவறு செய்யும் அதிகாரிகள் குறித்து முதல்வரின் தனி பிரிவிற்கு போன் மூலமாகவோ அல்லது எழுத்து பூர்வமான புகார் அளிக்கலாம் அவ்வாறு அளிக்கும் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்திருந்தார் அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க.!