வயநாடு நிலச்சரிவில் உறவுகளை இழந்து தவிக்கும் மனிதர்களைப்போல செல்லப் பிராணிகளும் செல்லப்பிராணிகளும் வனவிலங்குகளும் உறவுகளை இழந்து வரும் புகைப்படங்கள் வீடியோக்கள் சமூகவலை வலைதளங்களின் வைரல் ஆகி வருகிறது பார்ப்போரின் நெஞ்சை உள்ளுக்கும் வகையில் உள்ளது. கேரளா. வயநாடு சேதாரத்தை தேசியப் பேரிடராக அறிவித்தால் அதிக நிதி கொடுக்க வேண்டி இருக்கும் என்பதால் ஒன்றிய அரசு அறிவிக்காமல் உள்ளது.
அதானி அம்பானி கோயாங்கோ மிட்டல் ஜிண்டால் வேதாந்தா நீரவ் லலித் விஜய் மல்லையாக்களுக்கு எவ்வளவு சலுகை மற்றும் கடன் தள்ளுபடி செய்வார்கள்…..!?
ஆனால்….. பாதிக்கப்பட்ட உழைக்கும் அப்பாவி ஏழை எளிய மக்களுக்கு துயரத்தில் துடிக்கின்ற மக்களுக்கு உதவி செய்வதற்கு கேடுகெட்ட மத்திய அரசுக்கு மனம் வருவதில்லை…!
மேலே உள்ள படத்தைப் பார்த்தாவது, ஒன்றிய அரசு பேரிடர் என்று அறிவிக்காமல் இருக்குமேயானால் இது போன்ற அரசு ஆளுகின்ற நாட்டில் நாம் வாழ்வதைவிட செத்தொழிவது மேல் என்று கோழையாக இருப்பதை விட இந்த அரசு நாசமாய் அழிந்து போகட்டும் என்று ஒற்றை குரலோடு ஒருமித்த கருத்தோடு போராடி மடிவதே மேல்.
ஆளுகின்ற மத்திய அரசு உரிய நேரத்தில் சரியான உதவிகளை செய்திருந்தால் இவர்களைப் போன்ற திக்கற்ற எதுமற்ற மனிதர்கள் மோசமான நிலையில் இருந்திருக்கவும் மாட்டார்கள் இருக்கப்போவதுவுமில்லை.
வயநாடு இயற்கை சீற்றும் மனிதன் செய்த தவறுகளால் நிகழ்கிறது. இதனால் மனிதன் மட்டும் பாதிக்கவில்லை விலங்குகளும் தான் பாதிப்புகளை அனுபவிக்கின்றன.
“நாங்கள் எங்கள் பெற்றோர்களை இழந்து அனாதைகளாக ஏங்குகிறோம்; எங்களுக்கு கை கொடுக்க, எங்களை பாதுகாக்க யாராவது வர மாட்டார்களா…?” என விலங்கினங்களின் வேதனையை யார் கவனிக்கிறார்கள்…?
இந்த படிப்பினையை மனிதன் உணர்ந்து கொள்ளவில்லை என்றால், இயற்கையை அழிக்கும் செயலில் மனிதன் தொடர்ந்து ஈடுபட்டான் என்றால்…
காடுகளை அழித்து மரங்களை வெட்டி, மலைகளை அழித்து தனக்குத் தானே பேராசை பிடித்த மனிதர்களின் இத்தகைய செயல்களால் இயற்கையின் கோபம் தவிர்க்க முடியாததாகும்.
இயற்கையின் சீற்றத்தால் மனிதன் உயிர் மட்டுமல்ல, பல வகையான வன விலங்குகளும் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் எப்படி தவிக்குமோ அதேபோல்தான் அனைத்து உயிரினங்களும் பெற்றோர்களை இழந்து நிற்கதியாக நிற்கும் அவல நிலை உருவாகிறது.
இந்த நிலை இனி எப்போதும் யாருக்கும் வரக்கூடாது என்றால்…மனிதர்களின் சுயநலப் பேராசையால் மலைகளை உடைக்காமல், காடுகளை அழிக்காமல், மரங்களை வெட்டாமல் பாதுகாத்தால் மட்டுமே நிம்மதியாக வாழ முடியும்.
இயற்கை / இறைவன் கொடுத்த அனைத்து உயிரினங்களுக்கும் அதற்குண்டான இடங்களில் சுதந்திரமாக வாழ்ந்தால் மட்டுமே இயற்கை இயற்கையாக நிலைத்து இருக்கும்.
நாமும் வாழ்வோம்… வன விலங்குகளையும் அனைத்து உயிரினங்களையும் இயற்கையையும் இயல்பாகவும் பாதுகாப்பாகவும் வாழ விடுவோம்.