தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் தாமதமாக வெளியிடப்பட்டது. இது குறித்து டெல்லியில் உள்ள நமது செய்தியாளர் புதிய தகவலை அளித்துள்ளார். காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் மெல்ல மெல்ல அழிந்து வரும் கட்சியாக இருந்து வரும் நிலையில் சத்தியமூர்த்தி பவனில் எப்பொழுதும் அந்த கட்சியில் மோதலும், குழப்பமும் வெடித்துக் கொண்டே இருக்கும் அதுவே பெரிய களவரம் ஆகிவிடும்.
இந்த நிலையில் தேர்தல் நேரம் என்றால் சொல்லவே தேவையில்லை. அவ்வளவு பிரச்சனைகள் அந்த கட்சியில் வெடிக்கும். தங்களுக்கு வேண்டியவர்களுக்கு சீட்டு கொடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் குதிப்பார்கள், தீக்குளிக்க கூட முயற்சிப்பார்கள், போஸ்டர் ஒட்டுவார்கள், டெல்லிக்கு போவார்கள். இந்த நிலையில் திமுக திட்டமிட்டு காங்கிரசுக்கு வெற்றி பெற முடியாத தொகுதிகளை கொடுத்து விட்டார்கள் என குமுறுகிறார்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகை ஸ்டாலினுக்கு அடிமையாகவே ஆகிவிட்டார். அவர் செய்த ஊழல்கள் கொள்ளையடித்த சொத்துக்கள் பணங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஸ்டாலின் சொல்லுகிற விஷயத்தை திமுக காரனை போல தலையாட்டிக் கொண்டு வருகிறார். என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் டெல்லிக்கு புகார் அனுப்பினார்கள்.
ஜோதிமணி.
கரூர் தொகுதி எம்பி ஜோதிமணி வெளிப்படையாகவே பேசினார். இந்த வேட்பாளர் தேர்வு ரகசியமாக நடைபெறுகிறது என்று ராகுல் காந்திக்கு இமெயில் மூலமும் தகவல் அனுப்பி விட்டார். அது தவிர வாட்ஸ் அப்பிலும் தமிழக காங்கிரஸில் என்ன நடக்கிறது என்பதை விரிவாக ராகுல் காந்தி கவனத்திற்கு எடுத்துச் சென்றார் எம்பி ஜோதிமணி.
இந்த நிலையில் என்னதான் நடக்கிறது காங்கிரஸ் கட்சியில் என்று டெல்லி காங்கிரஸ் அலுவலகத்திலும் தமிழ்நாட்டில் சத்தியமூர்த்தி பவனிலும் நாம் விசாரணை நடத்தினோம். தொகுதி பங்கெட்டில் தொடங்கிய பஞ்சாயத்து அமெரிக்கா மீது ஈரான் ராணுவம் போட்ட வெடிகுண்டு போல வெடித்து சிதறியது.
செல்வப் பெருந்தகை.
கடந்த தேர்தலை விட மூன்று தொகுதிகளைத் தான் கூடுதலாக பெற்று இருக்கிறார் செல்வப் பெருந்தகை. செல்வப் பெருந்தகையின் செயல்பாடு குறித்து பல தலைவர்கள் அவர் கவனத்திற்கு புகாராக எடுத்துச் சென்றதற்கு பிறகு செல்வப் பெருந்தகை மீது ராகுல் காந்தி கடும் கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. ராகுல் தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்து கடும் மூட் அப்சட்டில் இருந்தார் என சொல்லுகிறார்கள் டெல்லி வட்டாரங்கள்.
கே.சி. வேணுகோபால்.
தமிழ்நாட்டில் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது குறித்து செல்வ பெருந்தகை மீது டெல்லி மேலிடம் நம்பவில்லை அவர் கட்சியில் மாறுவதில் மிகத் திறமையானவர் தமிழக தேர்தலுக்குப் பிறகு அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து திமுகவில் சேர்ந்தாலும் சேரலாம் அதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர் கதர் சட்டைக்காரர்கள்.
இந்த நிலையில் மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட கோவாவை சேர்ந்த கிரிஷ் ஜோடங்கரை சிறப்பாக கவனித்து விட்டாராம் செல்வப் பெருந்தகை.
கிரிஷ் ஜோடங்கர்.
முதல்வர் ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் தனியாக சென்று பர்சனலாக பேச வைத்து விட்டாராம் செல்வப் பெருந்தகை. இந்த செய்தி கட்சி தலைமைக்கு தெரிந்தவுடன் கிரிஷ் ஜோடங்கருக்கு செம டோஸ் விழுந்ததாம். காங்கிரஸ் தலைமை காங்கிரஸின் முக்கிய தலைவர்கள் கேட்ட பல தொகுதிகளை திமுக வழங்கவில்லை என்பதை விட செல்வப் பெருந்தகை திமுகவில் கேட்கவில்லை என்பதைத்தான் குற்றச்சாட்டாக வைக்கிறார்கள்.
வேட்பாளர் பட்டியலை தயார் செய்வதற்கான உயர்மட்ட குழு கூட்டம் இரண்டு முறை சத்தியமூர்த்தி பகுதியில் ஒருமுறை வீடியோ கான்சென்சிலும் நடந்தது. ஒவ்வொரு காங்கிரஸ் கட்சியின் சீனியர் தலைவர்கள் தனது ஆதரவாளர்கள் தனது மகன்களுக்கு சீட்டு கேட்டு பேசினார்கள். இந்த முறை வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில் தனது ஆதரவாளர்களுக்கு பல பேருக்கு சீட்டு வழங்கியுள்ளார். செல்வப் பெருந்தகை என்கிறது காங்கிரஸ் வட்டாரம்.
தொகுதிக்கு ஒருவர் வீதம் 28 பெயர்கள் கொண்ட பட்டியலில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமைக்கு அனுப்பி வைத்தார் செல்வப் பெருந்தகை.
காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஒரு தொகுதிக்கு மூன்று பேர் கொண்ட பட்டியலை அனுப்பி இருக்க வேண்டுமானால் இவரை முடிவெடுத்து விட்டு ஒரு பெயரை மட்டும் அனுப்பினார். இந்த விஷயத்திலேயே ராகுல் காந்திக்கு செல்வப் பெருந்தகை மீது கடும் கோபம் இருந்தது.
இந்த நிலையில் டெல்லிக்கு செல்வப் பெருந்தகையை அழைத்த மேலிடம் நீண்ட நேரமாக செல்வப் பெருந்தகையை பார்க்காமல் காத்திருக்க வைத்தனர்.
ஒருவழியாக இரண்டு தினங்களுக்கு முன்பு மாலை 6 மணி அளவில் ராகுல் காந்தி செல்வப் பெருந்தகையை சந்தித்தார். அப்போது தமிழகத்திலிருந்து எடுத்துச் சென்ற வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தியிடம் வழங்கினார். அதை வாங்கிப் பார்த்து ராகுல் காந்தி படித்துப் பார்த்துவிட்டு பட்டியலை கிழித்து செல்வப் பெருந்தகை முகத்தில் வீசி உள்ளதாக கூறப்படுகிறது.
ராகுல் என் முகம் சிவந்து விட்டதாகவும் செல்வப் பெருந்தகைக்கு வேர்த்து விறுவிறுத்து விட்டதாகவும் சொல்கிறார்கள் டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள். இந்த செய்தியை ஒரு முழுக்க whatsapp மூலம் முக்கியமான தலைவர்களுக்கு அனுப்பி விட்டார்கள் டெல்லி காங்கிரஸ் தலைவர்கள். அதன் பிறகு தொகுதிக்கு மூன்று பெயர்களை தேர்வு செய்து புதிய பட்டியலை அனுப்ப உத்தரவிட்டார் ராகுல் காந்தி.
மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்த செல்வப் பெருந்தகை தனது பதவியை காப்பாற்றிக் கொள்ள தனது வழிகாட்டி கார்கேவின் வீட்டு கதவை தட்டி தனக்கு உதவும் படி கேட்டு இருக்கிறார். அவர் சரி நான் பார்த்துக் கொள்கிறேன் ராகுல் காந்தி சொன்னதை போல தொகுதிக்கு மூன்று பெயர்களை தேர்வு செய்து உடனடியாக அனுப்பி வையுங்கள் என்று அறிவுரை சொல்லி அனுப்பி வைத்துள்ளார்.
மல்லிகார்ஜுன கார்கே.
பிறகு ராகுல் காந்திக்கு மூன்று பேர் கொண்ட பட்டியலை 28 தொகுதிகளுக்கும் லிஸ்ட் கொடுத்து இருக்கிறார். காலமும் இல்லாத நிலையில் தன்னுடைய விருப்பமும் இல்லாமல் இந்த லிஸ்ட்டை ஓகே செய்து விட்டார் ராகுல் காந்தி. பிறகு பட்டியல் வெளியிடப்பட்டது.
தமிழ்நாட்டில் ஏறக்குறைய காங்கிரஸ் கட்சி 30 ஆண்டுகளுக்கும் மேல் கோமாவிற்கு சென்று விட்டது. இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்திற்கு அவர் பெற்ற தொகுதியை வழங்கவில்லை என்ற கோபத்தில் செல்வப் பெருந்தகை இடம் மிகக் கடும் தடித்த வார்த்தைகளில் தனது கோபத்தை வெளிப்படுத்தினாராம் கார்த்திக் சிதம்பரம்.
கார்த்திக் சிதம்பரம்.
வேட்பாளர் தேர்வில் செல்வப் பெருந்தகை பெரும் பணம்பேரம் பேசி பல பெட்டிகளை வாங்கி விட்டார் என்கிறார்கள் டெல்லி காங்கிரஸ் வட்டாரத்தினர். இந்த நிலையில் தேர்தல் முடிந்தவுடன் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்து விடுகிறேன் என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
செல்வப் பெருந்தகை.
காங்கிரஸ் கட்சியின் கோஸ்ட் அரசியலை அறவே ஒதுக்கி வைத்துவிட்டு இளைஞர்களுக்கு வழிவிட்டு பழைய தலைவர்கள் ஒதுங்கிக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு கட்சி வேலைகளை மட்டும் செய்ய வற்புறுத்தி, அறிவுரை சொல்லி இளைஞர்களை கட்சியை புத்துணர்ச்சி பெற செய்ய வேண்டும் என ராகுல் காந்தி உத்தரவிட்டால் மட்டுமே தமிழ்நாட்டில் கை ஓங்கும் இல்லை என்றால் ஒரு கட்சி இருந்தது என்கிற அளவிற்கு போய்விடும்.
