


வீரமணி மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக அரசு தங்களுடைய விசாரணை கீழ்த்தரமாக உள்ளது என்பதை வெளிப்படையாக சொல்லி மக்களிடத்தில் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொன்னால் அது மிகை அல்ல.
ஒரு இருட்டு அறைக்குள்ளோ அல்லது பூட்டப்பட்ட வீட்டிற்குள்ளோ அல்லது சொகுசு விடுதிகள் அல்லது நட்சத்திர ஹோட்டல்களில் என்ன நடக்கிறது என்பதை போலீஸ் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அங்கு நடக்கும் விஷயங்களுக்கு போலீஸ் பொறுப்பேற்க முடியாது என்பதை அனைவரும் அறிந்தது தான் இல்லை என்று மறுக்க முடியவில்லை. ஆனால் வெளி உலகத்திற்கு அந்த விஷயம் தெரிந்து விட்ட பிறகு நடவடிக்கை எடுக்காமல் சில பெண் அதிகாரிகள் நம் குடும்பத்தில் உள்ள அம்மா அக்கா தங்கை சகோதரிகள் பாதிக்கப்பட்டால் என்ன மனநிலையோடு நாம் விசாரிக்க வேண்டும் என்கிற மனநிலையை மீறி காசுக்காக பணத்திற்காக நீதியை மறைத்து ஒரு தொழிலதிபரிடம் பணம் பெற்றது இதுவும் ஒரு வகையில் விபச்சாரமே.
![]()
ஏ. அருண்,தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த 1998-ஆம் ஆண்டு தொகுதி இந்தியக் காவல் சேவை (IPS) அதிகாரி
கிராமங்களில் ஒரு வழக்கமான பழமொழி ஒன்று உண்டு. ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோனை என்பார்கள் அறுக்க தெரியாதவனுக்கு 58 அருவா என்பார்கள் பத்து ரூபாய்க்கு நடிக்க சொன்னால் பத்தாயிரம் ரூபாய்க்கு நடிக்கிறார் என்பார்கள் அதைப் போலத்தான் இருக்கிறது யாஸ்மின் நடத்திய விசாரணையும் இன்னும் பிற போலிஸ் அதிகாரிகள் நடத்திய விசாரணையும்.

தமிழகத்தின் மாண்பை தமிழகத்தின் கற்பு என்று சொல்லப்படுகிற புனிதத்தை கிழித்தரமான ஒரு பணத்திற்காக ஒரு பணக்கார முதலாளியின் பாதத்தில் வைத்து கைக்கூலியாய் மாறிப்போனது தமிழக காவல்துறையின் களவாணித்தனம் அது தமிழக காவல்துறைக்கு ஏற்பட்ட தலைகுனிவு.
காசு கொடுத்தால் கற்பை கூட சூறையாடி காணாமல் போய்விட்டது சிறப்பு படையமைத்து தேடிக் கொண்டிருக்கிறோம் என்று சொல்வார்கள் தமிழக காவல்துறையினர் அவர்களுக்கு தேவை பணம் பணம் பணம்.
நீதி நேர்மை மனசாட்சி இவை எல்லாம் உங்களுக்கு இல்லையா என்று சொன்னால் இவை அனைத்தும் தலப்பாக்கட்டியில் கிடைக்குமா அடையார் ஆனந்த பவனில் கிடைக்குமா இல்லது சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்குமா என்று சொல்வார்கள் கேட்பார்கள்.
அடிப்படையில் இந்த வழக்கை விசாரித்தவர்கள் விசாரணை நடத்த தெரியவில்லையா அல்லது வீரமணியை மிரட்டி பணம் பறித்தார்களா பணம் பறித்தவர்கள் யார்? பணம் பறித்ததாக சொல்லப்படும் அதிகாரிகள் அனைவரும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடச் சொன்னால் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறார்களா?
யாருமே வீரமணியிடம் பணம் வாங்கவில்லை என்று சொன்னால் தங்களது காக்கி சட்டை மீது சத்தியம் செய்ய தயாராக இருக்கிறார்களா என கேள்வி எழுப்புகின்றனர் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உறவினர்கள். வலியை சொல்ல முடியாமல் தங்கள் வாழ்க்கையை இழந்தவர்கள் தங்கள் குழந்தைகளின் கற்பை இழந்தவர்கள் வெட்கி தலைகுனிகிறார்கள் வேதனையில் வாடுகிறார்கள்.
நடந்த தவறை வெளியில் சொன்னால் தங்களது குடும்பம் மானம் அசிங்கமாகிவிடும் சமூகத்தில் தங்களுக்கு இருக்கிற பெயர் கெட்டுப் போய்விடும் என்ற காரணத்திற்காக பலர் பயந்து கொண்டு சென்னையை விட்டு வேறு மாநிலத்திற்கு ஓடி ஒளிந்திருக்கிறார்கள் என்கிறார்கள் சில நேர்மையான அதிகாரிகள்.
விசாரிக்க தெரியாதவர்கள் அல்லது ஆதாரத்தை சீர்குலைத்தவர்கள் அல்லது சீர்குலைக்க நினைப்பவர்கள் எல்லாம் காவல்துறையை வேலையில் இருந்து வெளியேறலாம் பெண்களை தெய்வமாக மதிக்கிற சமூகத்தில் பெண்களை தெய்வமாக மதிக்கிற தமிழகத்தில் காக்கிகள் பணத்திற்காக விலை போனது அவமானத்தின் உச்சம்.

காவல்துறையின் இதயம் சீர்கெட்டு உள்ளது சீழ் பிடித்திருக்கிறது காவல்துறையின் அடிமட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை நீதி நேர்மையை மறந்து பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது இன்னும் திமுகவின் ஆதரவு அதிகாரிகள் இன்னும் திமுகவின் முன்னாள் ஆதரவு அமைச்சர்களால் அதிகார தோரணையில் இருந்த உயர் அதிகாரிகளின் பினாமிகள் ஜால்ராக்கள் இன்னும் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.
முதல்வர் விஜய் சாட்டையை எடுத்து சுழற்ற ஆரம்பித்தால் தான் சட்டம் ஒழுங்கு தன் கட்டுப்பாட்டில் இருக்கும். இல்லை என்றால் திருட்டு திமுக ஆட்சிக்கும் தவெக ஆட்சிக்கும் வித்தியாசம் இருக்காது. என்ன செய்யப்பொகிறார் முதலமைச்சர் விஜய் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.