#government impose a ban on biryani ; சுத்தமாக சமைக்காத பிரியாணி மற்றும் ஃபாஸ்ட் ஃபுட் கடைகளுக்கு தடை விதிக்குமா தமிழக அரசு.

November 3, 2026

By இரா. தேவேந்திரன்.

உடல் நலத்தை கெடுக்கும் தரமில்லாத பிரியாணிகள்;

பிரியாணி சாப்பிட்டு வாந்தி மயக்கம் ஏற்பட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் உரியிழந்த பல செய்திகளை நாம் பார்த்து இருக்கிறோம் . ஆனாலும் நாளுக்கு நாள் பிரியாணி மீது மனிதர்களுக்கு இருக்கும் ஆசை நாஈளுக்கு நாள் அதிகரித்துகொண்டே போகிறது ஆதற்கு காரணம் குடும்ப தலைவிகளின் சோம்பரித்தனம் என்று சொல்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.

தரம் இல்லாத பொருட்களைக் கொண்டு அதாவது அழுகிய தக்காளி வெங்காயம் இஞ்சி பூண்டு போன்ற பொருட்களை கொண்டு பிரியாணி மற்றும்  துரித உணவுகளை பல கடைகள் அதாவது தள்ளு வண்டி கடைகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை உணவை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். ஒரு கிலோ பிரியாணி விலை சாதாரன கடைகளில் 120 ரூபாயகவும் பெரிய கடைகளில்  SS HYDRABAD மற்றும் arcot biryani, KARIM, AMBUR BIRYANI, VANIYAMBADI BIRYANI, COPPER KICTHEN, POGARI BIRYANI போன்ற கடைகளில் தரத்திற்கு ஏற்றமாதிரி 240 முதல் 350 ரூபாய் வரை விலையை நிர்ணயித்து விற்பனை செய்து வருகின்றனர்.  மட்டன் பிரியாணி என்றால் அது தனி விலை.

பிரியாணி மோகத்தால் சிக்கி சீரழியும் குழந்தைகள்.

பிரியாணி ஓட்டலில் சமைப்பவர்கள் பெரும்பாலும் வட இந்தியாவை சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் வாயில் பான்பராக், ஆன்ஸ், கூலிப்  போன்ற போதை பொருட்களை வாயில் வைத்துக் கொண்டு தான் சமைக்கிறார்கள்.  உணவு சமைக்கும் போது வாயில் உள்ள எச்சில் உணவில் தெறித்து  விழுகிறது. அதே போல சமைப்பவர்கள் வேர்வை தண்ணீரும் உணவில் விழுகிறது. இதனால் உணவு விஷமாக மாறுகிறது. மேலும் சமைக்கின்ற போது சமையல் மாஸ்டர் தான் போட்டிருக்கும் சட்டை நனைந்து  வியர்வை கொட்டும்போது அப்படியே தங்களது சட்டையில் முகத்தையும், வாயையையும் துடைத்து கொள்கின்றனர். இதனால் நோய் தொற்று பரவுகிறது.

இதை கண்காணிக்க வேண்டிய பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் பணம் வாங்கிக் கொண்டு மாதம் லஞ்சம் வாங்கிக் கொண்டு அமைதியாக விட்டுவிடுகின்றன மேலும் அரசு அதிகாரிகள் சமைக்கும் இடத்தையும் சமைப்பவர்களின் நடை, உடை , பாவனைகளையும் வீடியோ மூலம் பொதுமக்களுக்கு கண்காணிக்க வேண்டும் என்று ஒரு உத்தரவு போட வேண்டும் . அதேபோல தமிழகத்தில் பெரும்பாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ளே சென்று பிரியாணி எப்படி சமைக்கிறார்கள் என்று பார்க்க அனுமதிக்க வேண்டும்.

எல்லா கடைகளிலும் சுத்தமாக சமைத்தால்  உடல்நலம், சுகாதாரத் கேடும் ஏற்படாது. பொது மக்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது.  தரமில்லாத கோழிகளைக்கொண்டு பிரியாணி சமைப்பதாக பெரும் குற்றசாட்டு எழுந்து வருகிறது.  சுகம் இல்லாத கோழிகளையே கடைக்காரர்கள்  குறைந்த விலைக்கு கோழியை வாங்கி சமைக்கிறார்கள்.  எனவே கோழிகள் வாங்கும் இடத்தையும் சமையல் செய்யும் இடத்தையும் சிசிடிவி மற்றும் வீடியோ எடுத்து அந்த காட்சிகளை பொதுமக்களுக்கு காட்ட வேண்டும் என்று அரசு ஒரு உத்தரவை வழங்கினால் நோய் தொற்றும் தூய்மையாக உணவு சமைக்கும் முறையும் ஏற்படும் என்கின்றனர் பொது மக்கள். அதேபோல தூய்மையாக சமைக்காத உணவை சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனையால் சாதாரண பொது மக்களுக்கு பெரும் பொருள் இழப்பு ஏற்படுகிறது, மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழல் மாத்திரை வாங்க வேண்டிய சூழல் பள்ளிக்கூடம் போகுது வாய்ப்பை இழக்கின்றனர்.

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் லஞ்சம் வாங்க கூடாது. 

எனவே தூய்மையாக சமைக்க வேண்டும் சமைக்கும் போது  தொடங்கி சமையல் முடியும் நேரம் வரை பொதுமக்களுக்கு  வீடியோ எடுத்து காட்ட வேண்டும். எந்த  இடத்திலிருந்து கோழிகள் வாங்கப்படுகிறது என்றும் அதன் உடல் நிலை எப்படி இருக்கிறது? தரமான கோழிகளாக இருக்கிறதா அதை தூய்மையாக சுத்தப்படுத்தி சமைக்கிறார்களா என்பதையும் அரசு கண்காணிக்க வேண்டும் என்கின்றனர் பிரியாணி பிரியர்கள். பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது விட்டு விட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பணியாற்றவேண்டும் தரமாக லசமைக்காத எந்த நிர்வாகத்தின் மீதும் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கின்றனர் நுகர்வோர் நீதிமன்ற ஊழியர்கள்.

Share:

இரா. தேவேந்திரன்.

November 4, 2026