#Ilaiyaraaja; இளையராஜா சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் டெல்லி கோர்ட்டு உத்தரவு.

September 12, 2026

By இரா. தேவேந்திரன்.

நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மீறிவரும் இசை ஞானி இளையராஜாவின் சொத்துக்களை பறிமுதல் செய்து அதை விற்பனை செய்ய தனி அதிகாரியை நியமிக்க வேண்டும் எனக் கூறி சரிகமப என்ற நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.இசை ஞானி இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! – வல்லமை

இளையராஜா இசையமைத்த சில திரைப்பட பாடல்களுக்கான உரிமைக்கு சரிகம நிறுவனம் சொந்தம் கொண்டாடி வருகிறது இது தொடர்பாக இளையராஜாவுக்கும் சரிகம நிறுவனத்திற்கும் இடையே டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

கடந்த பிப்ரவரி 13 இல் சரிகம நிறுவனம் தொடர்ந்து வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்தது அதில் சரிகம நிறுவனம் காப்புரிமை பெற்ற பாடல்களை இளையராஜாவோ அல்லது அவரது பிரதிநிதிகள் பயன்படுத்தக்கூடாது எனக் கூறி இடைக்கால தடை விதித்தது.40 YEARS OF INDUSTRY HIT MURATTU KAALAI ❤😍இந்த தடையை நீக்க கோரி இளையராஜா தாக்கல் செய்த மனுவை கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது இந்நிலையில் இளையராஜா நீதிமன்ற உத்தரவை பகிங்கரமாக மீறிவிட்டதாக கூறி அவருக்கு எதிராக சரிதம் நிறுவனம் டில்லி உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.வகுப்பறை: இளையராஜா என்னும் மாமேதை!இது தொடர்பாக சரிகம நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது.

இசை பிரியர்களுக்குக்கான, பாட்டிபை youtube போன்ற டிஜிட்டல் தலங்களில் எங்கள் வசம் காப்புரிமை உள்ள பாடல்கள் ஒளிபரப்பாகின்றன ஆனால் அந்தப் பாடல்களின் காப்புரிமை தன்னிடம் இருப்பதாக கூறி ஒளிபரப்புக்கு இளையராஜா ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்.

இதன் மூலம் நீதிமன்ற உத்தரவை அவர் வெளிப்படையாக மீறி உள்ளார் மேலும் முரட்டுக்காளை என்ற தமிழ்த் திரைப்படத்தில் இடம்பெற்ற பொதுவாக எம்மனசு தங்கம் என்ற பாடலின் உரிமை தமக்குரியது எனக் கூறி அதை பயன்படுத்த நம்மை நம்மிடம் உரிமம் அல்லது ஒப்புதல் பெற வேண்டுமென வலியுறுத்தி பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதுவும் நீதிமன்றம் விதித்த தடைக்கு முரணானது.இளையராஜா சொத்துக்களை பறிமுதல் செய்யக்கோரி சரிகம நிறுவனம் வழக்குதடையை மீறியதற்காக இளையராஜாவை சிறையில் அடைக்க வேண்டும் அவரது அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் அந்த சொத்துக்களை விற்று அதன் மூலம் கிடைக்கும் தொகையை எங்கள் நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் இந்த நடவடிக்கைகளுக்காக பிரத்தியேக அதிகாரியையும் நீதிமன்றம் நியமிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

டெல்லி உயர்நீதிமன்றம் தயாரிப்பாளரின் காப்புரிமை உரிமையை  உறுதிப்படுத்துகிறது; இளையராஜாவுக்கு எதிராக சரேகம தடை உத்தரவு - சன்ஸ் லீகல்

இம்மனு போய் விசாரித்த நீதிபதி அனுப் ஜெயராம் அம்பானி சரிகம நிறுவனம் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்குமாறு இளையராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார்.

இந்தப் புகார் தொடர்பாக தமிழக இசைத்துறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share:

இரா. தேவேந்திரன்.

September 12, 2026

Leave a Comment