#MISA; திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்படவில்லை.

September 12, 2026

By இரா. தேவேந்திரன்.

‘‘மு.க.ஸ்டாலின் மிசாவில் கைதுசெய்யப்படவில்லை’ என்று சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் சட்டமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியிருப்பிது. அதாவது, 50 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்திற்கு த.வெ.க. தற்போது உயிர் கொடுத்திருப்பதுதான் பெரிய விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

Govt will appeal against Madras HC ruling on caste status of converts to  Islam: Min Nirmal Kumar

சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார்
தமிழக சட்டமன்றத்தில் ‘‘ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை’’ என அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் பேசியது சர்ச்சையை கிளப்பியது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனமும் தெரிவித்தனர்.1959: C.N. Annadurai presenting a gold ring to Karunanidhi after the DMK  won 45 seats in the Madras Municipal Corporation elections. Karunanidhi was  in charge of the election campaign.
இந்த நிலையில்தான் மீண்டும், ‘‘ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லைவேற ஏதோ ஒரு சில காரணங்களுக்காக கைது செய்யப்பட்டார் என்பது 30வருடம், 40 வருடம் சர்ச்சை ’’ என அமைச்சர் நிர்மல்குமார் மதுரையில் பேசியது மீண்டும் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது.

 

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், ‘‘மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு வரும் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இல்லாத அளவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட உள்ளது. மிசாவில் ஸ்டாலின் கைதாகவில்லை என்று எல்லோரும் சொல்கிறார்கள்.

ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டதற்கு ஆதாரம் இருக்கா; கைதான எல்லோரும் ஆதாரம் வைத்து இருக்கிறார்கள். ஒருவர் கைது ஆகியிருந்தால் டிடென்ஷன் காப்பி காட்ட வேண்டும்; டிடென்ஷன் காப்பி இல்லாத ஒரே தியாகி இவராக தான் இருப்பார் போல. இவரை நீங்கள் திரும்ப, திரும்ப தியாகியாக ப்ரொஜெக்ட் பண்றதுனால ஒரு பிரயோஜனமும் இல்லை. ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை. வேற ஏதோ ஒரு சில காரணங்களுக்காக கைது செய்யப்பட்டார் என்பது 30வருடம், 40 வருடம் சர்ச்சை. இதுவரைக்கும் அவர்களால் ஒரு டிடென்ஷன் காப்பி கூட கொடுக்க முடியவில்லை.

DMK Chief MK Stalin's MISA act experiences : Avarum Naanum

இவ்வளவு பெரிய தியாகி கைது செய்யப்பட்டார் என்றால் எதுக்கு டிடென்ஷன் காப்பி அழிக்கப்பட்டது. எல்லோரும் சொல்கிற குற்றச்சாட்டு 1989ல் அவர் ஆட்சி காலம் வந்த பிறகு அதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்க கூடாது என்று அழித்துவிட்டார்கள் என்று சொல்கிறார்கள்.

DMK Chief MK Stalin shares his MISA arrest memories

மிசாவில் கைது செய்யப்பட்ட எல்லோருக்கும் ஆதாரம் இருக்கிறது; ஸ்டாலினுக்கு மட்டும் ஆதாரம் இல்லை. சட்டசபையில் அவர்கள் நடந்து கொண்ட விதத்தை பார்த்து அனைவரும் சிரிக்கின்றனர். மக்களுக்கு தெளிவாக தெரியும்; இரண்டு இடைத்தேர்தலில் இவர்கள் வந்து திருமங்கலம் பார்முல்லான்னு சொல்லி எப்படி 100 கோடி, 200 கோடி ரூபாய் கொண்டு வந்தாங்களோ.எத்தனை 100 கோடி ரூபாய் கொண்டு வந்தாலும் மக்கள் அதை வாங்கிட்டு, என்ன செய்ய வேண்டுமோ, அதை தெளிவாக செய்வார்கள். அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. இவர்கள் எல்லாம் எங்கே இருந்து கொள்ளை அடித்தார்கள்; எத்தனை லட்சம் கோடி ரூபாய் தமிழகத்தில் இருந்து கொள்ளை அடித்தார்கள்.

Remembering Karunanidhi Who Shaped Tamil Nadu Politics For 8 Decades - Oneindia News

அத்தனை லட்சம் கோடி ரூபாயில் இருந்து இன்றைக்கு 100 கோடி ரூபாய், 200 கோடி ரூபாயை வைத்து கொண்டு ஒவ்வொரு இடைத்தேர்தலுக்கும் வருவார்கள். இவர்களை எப்படி சமாளிக்க வேண்டும் என்று மக்களுக்கு தெரியும். இடைத்தேர்தலில் இரண்டு கட்சிக்கும், திமுகவுக்கும், அதிமுகவுக்கும் டெபாசிட் கூட கிடைக்காது, அது நல்லா தெரியும்.

லண்டன் சென்ற தமிழக முதல்வர் ; இரவு முழுவதும் காத்திருந்து ஈழத்தமிழ் பெண் செய்த செயலால் நெகிழ்ச்சி - ஜே.வி.பி நியூஸ்

மக்கள் அவர்களை தமிழகத்தில் இருந்து தூக்கி எறிந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. தமிழக முதல்வர் லண்டனுக்கு சென்று இருப்பது தொழிற்துறைக்கான ஒரு கூட்டம் ஒவ்வொரு நாளும் நிறைய தொழில்துறையினரை சந்திக்கிறார். முதலீட்டு ஒப்பந்தம் குறித்து சந்திப்பு முடிந்த பிறகு அறிவிப்புகள் முறையாக வெளியிடப்படும்’’ இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.

Share:

இரா. தேவேந்திரன்.

September 12, 2026

Leave a Comment