#Nakkheeran reporter news, #Nakkheeran Prakash news, #Obscenity news, #Nakkheeran Prakash Vulgarity speech, #Savuku malathi news, #Savukku sankar news.
நக்கீரன் வாரம் இருமுறை இதழில் தாமோதரன் பிரகாஷ் என்பவர் நிருபராக பணியாற்றி வருகிறார். இவர் மீது பெண் வண்கொடுமை சட்டத்தின் கீழ் 2026 செப்டம்பர் மாதம் (16-09-2026 ) புதன் கிழமை அன்று ஆதம்காக்கம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து சில பத்திரிகையாளர்கள் சங்கம் ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ளன. சில சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல பத்திரிகையாளர்கள் நக்கீரன் பிரகாஷ் அப்படி பேசி இருக்க்கூடாது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பெண் ஊடகவியலாளரை இழிவு படுத்திய புகாரில்
நக்கீரன் நிருபர் தாமோதரன் பிரகாஷ் கைது செய்யப்பட்டதை
இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனம் வரவேற்கிறது !
பெண் ஊடகர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்ப வேண்டிய
சென்னை பத்திரிகையாளர் மன்றம் பெண் ஊடகர்களுக்கு
எதிராகச் செயல்படுதை வன்மையாகக் கண்டிக்கிறது !
இது தொடர்பாக, இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனத்தின் தேசியச் செயலாளர் கே.அசுதுல்லா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பதிவு செய்யப்பட்ட செய்திப் பத்திரிகைகள் அதற்கான கண்ணியத்தையும், அறத்தையும் கடைபிடிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக அத்தகைய பத்திரிகையில் பணியாற்றும் செய்தியாளர்களும் உண்மைக்குப் புறம்பான, ஆதாரமற்ற செய்திகளை அவதூறுகளாகப் பரப்பும்போது அது செய்திப் பத்திரிகை ஊடகங்களின் மீதான சமூகத்தின் நம்பிக்கையை குலைத்துவிடும்.
அத்தகைய செயல்தான் நக்கீரன் நிருபர் தாமோதரன் பிரகாஷ் தொடர்ந்து செய்து வருவது.
ஊடகங்கள், மற்றும் சமூக ஊடகங்களில் கருத்துக்களை கருத்தால் எதிர்ப்பதை விடுத்து அவர்களை முடக்கும் விதமாக ஆபாசமாக பேசுவது, அவதூறு பரப்புவது, பொய்யான வதந்திகளைப் பரப்புவது ஆகியவை சட்டத்தின்படி மட்டுமல்ல பத்திரிகை ஊடக அறத்தின்படியும் குற்றமே.
பெண் ஊடகவியலாளர் குறித்து ஆபாசமாகவும், இழிவாகவும் பேசிய எஸ்.வீ. சேகர் வீட்டின் மீது கல் எறிந்து போராடிய மாற்றத்திற்கான ஊடகவியலாளர் சங்க பிரதிநிதி ஹாசீப் மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மற்றும் சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் ஆசிப் இப்போது பிரகாஷ் வீட்டின் முன் கல் எரிந்து போராட்டம் நடத்துவாரா இல்லை ? மௌனம் சாதிப்பாரா? என்ற கேள்வி அனைத்து பத்திரிகையாளர்களிடமிருந்தும் கேள்வி எழுந்து வருகின்றது.
பத்திரிகை ஊடகத் துறைக்குப் பெண்கள் வருவதே பெரும் சவாலாக உள்ள நிலையில், பத்திரிகை ஊடகத்துறையைச் சேர்ந்த அதிலும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத் துறையில் அனுபவம் உடைய தாமோதரன் பிரகாஷ் போன்றவர்கள் ஊடகப் பெண்களை அவதூறாகப் பேசுவது பெண்களுக்கு முட்டுக்கட்டை போடும் ஆணாதிக்கத் திமிர் அன்றி வேறல்ல.
இப்படிப்பட்ட ஆணாதிக்கத் திமிர், அவதூறு, ஆபாசம், அருவருப்பு ஊட்டும் நபர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுப்பது வரவேற்கத்தக்கது. பெண் ஊடகர்களைப் பாதுகாக்க வேண்டிய சென்னை பத்திரிகையாளர் மன்றம் பாதிக்கப்பட்ட பெண் ஊடகருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்ட தாமோதரன் பிரகாஷ்க்கு ஆதரவாகக் குரல் கொடுப்பது அவலமான செயல்.
தாமோதரன் பிரகாஷ் மீது புகார் கொடுத்து 8 மாதங்களாகிய நிலையில் இப்போது ஏன் நடவடிக்கை என்று கேட்கும் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தினர் எட்டு மாதங்களாக தூக்கத்தில் இருந்தர்களா ? இல்லது போதையில் இருந்தார்களா?
புகார் கொடுதாபோது திமுக ஆட்சிதானே ? அப்போதே ஏன் சென்னை பத்திரிகையாளர் மன்றம் இந்தக் கேள்வியை கேட்கவில்லை ?
திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்காததால், தவெக ஆட்சியில் பாதிக்கப்பட்ட பெண் ஊடகர் காவல்துறையை அணுகியுள்ளார், அதனடிப்படையில் காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது. இதில் சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகளுக்கு என்ன பிரச்சனை ?!
இந்த பிரகாஷ் போன்ற நபர்களுக்கு ஆதரவு தரும் சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள் அவருக்கு ஆதரவு தருவதற்கு முன்பு அவரவர் வீட்டில் உள்ள அம்மா, மனைவி, பெண் குழந்தைகளிடம் தாமோதரன் பிரகாஷ் பெண்களுக்கு எதிராகப் பேசிய காணொலிகளை போட்டுக் காண்பித்து அவர்கள் அனுமதியோடு தாமோதரன் பிரகாஷ் கைதுக்கு கண்டனம் தெரிவித்து அவருக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கே.அசுத்துல்லா, தேசியச் செயலாளர், IFWJ – இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனம்,
நக்கீரன் பிரகாஷ் தொடர்ந்து பலரைப் பற்றி ஆபாசமாகவும் அவதூராகவும் பேசி வருகிறார். லண்டனுக்கு சென்ற முதல்வர் பற்றியும் அவதூராக பேசியிருக்கிறார். எனவே தமிழகம் முழுவதும் இவர் மீது புகார்கள் கொடுக்க தவெகவினர் மகளிர் அமைப்பை சார்ந்தவர்கள் புகார் அளிப்பார்கள் என சொல்லப்படுகிறது.
பெண்கள் பாதுகாப்பு குறித்து அல்லது பத்திரிகையாளர்கள் தாக்கப்படுகின்ற பொழுது ஆர்ப்பாட்டம் செய்யும் பத்திரிகையாளர்கள் சங்கங்கள் மற்றும் மூத்த பத்திரிகையாளர்கள் அதாவது இந்து என்.ராம் பகவான் சிங் போன்ற மூத்த பத்திரிகையாளர்கள் அதாவது ஆர்ப்பாட்டம் என்றவுடன் டிப் டாப் ஆசாமிகளாக பத்திரிகையாளர்கள் சங்க அலுவலகத்தில் கூடி நின்று கோஷமிடம் யோக்கிய சிகாமணிகளின் வீட்டில் உள்ள (பெண்கள்,)
இந்து என்.ராம்.
மனைவிகள், சகோதரிகள், மருமகள்கள், பேத்திகள் போன்றவர்கள் பற்றி எச்ஐவி உள்ளது என்றும் அவர்களை பற்றி ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் பேசினால் ஏற்றுக் கொள்வார்களா என்று கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஊடகங்களை பார்த்து வீடியோ வெளியிடும் பொதுமக்கள்.
திமுக ஆதரவு youtubeபர்கள் யாரும் அவர்கள் வீட்டுப் பெண்களுக்கு எந்த தொற்று நோயும் இல்லை என்று பொதுவெளியில் வீடியோ வெளியிடுவார்களா என்கின்றனர் சவுக்கு மீடியாவில் வேலை பார்க்கும் ஊழியர்கள்.
நக்கீரன் தாமோதரன் பிரகாஷ் பேசி வெளியிட்ட வீடியோ தற்போது youtube தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. அவர் பேசிய இழிவான ஆபாசமான பேச்சுக்கே கருத்து தெரிவிக்க விரும்புவோர் அல்லது எதிர் கருத்து தெரிவிக்க விரும்புவர்கள் Chennai reporters.com தங்களது கருத்துக்களை பதிவு செய்யலாம்.