சென்னை தெற்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள முத்துக்குமார் செய்த பல ஊழல்கள் குறித்து பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. அதில் அவர் செய்த முத்தான பத்து ஊழல்கள்பற்றி புதிய தகவல் வெளியாகி உள்ளது.
அமைச்சருக்கு தெரியாமல் கல்லாக்கட்டும் ஆடிட்டர் முத்துக்குமார் என்ற தலைப்பில் கடந்த 7ம் தேதி நாம் செய்தி வெளியிட்டிருந்தோம் அதில் தமிழ்நாட்டில் உள்ள பத்திரப்பதிவு துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு பணி மாறுதல் வாங்கித் தருவதாக பலரிடம் பல லட்சம் ரூபாய் பெற்றுள்ளார்.
#Auditor Muthukumar was executed; அமைச்சருக்கு தெரியாமல் கல்லாக்கட்டும் ஆடிட்டர் முத்துக்குமார்.
ஒரு சிலருக்கு பணி மாற்றம் செய்து கொடுத்திருக்கிறார் பல பேருக்கு டிரான்ஸ்பருக்கு வாங்கிய பணத்திற்கு இன்னும் பதவிகள் வாங்கித் தரவில்லை, பணி மாற்றங்களும் வாங்கித் தரவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால் ஒரு டிரான்ஸ்பருக்கு கோடிகளை கொள்ளையடித்த மீனாட்சி என்கிற பத்திரப்பதிவாளருக்கு பணி மாற்றம் செய்து கொடுக்க அமைச்சருக்கு மனமில்லை.
அவரைப் பற்றி பல்வேறு புகார்கள் அமைச்சரிடம் உள்ளது. இந்த நிலையில் 2 கோடி ரூபாய் கொடுத்தால் உடனடியாக நான் பணி மாறுதல் வாங்கித் தருகிறேன் என்று ஆடிட்டர் முத்துகுமார் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியின் பெயரைச் சொல்லி முன் பணமாக சில லட்சங்களை பெற்றதாக சொல்கிறார்கள் தெற்கு மண்டல பத்திரப்பதிவு துறையில் பணியாற்றும் அதிகாரிகள்.
ஆடிட்டர் முத்துக்குமார்.
இந்த செய்திகளைத் நாம் நேரில் சென்று பலரிடம் விசாரித்தோம். அந்த செய்தி உண்மை என்று பத்திரப்பதிவு துறையில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் வெளிப்படையாகவே சொல்கிறார்கள். இந்த செய்தி அனைத்து அதிகாரிகளுக்கும் தெரிந்துள்ளது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட ஆடிட்டர் முத்துக்குமார் சம்பந்தப்பட்ட சப் ரிஜிஸ்டர் மீனாட்சி ஆகியோரை தொடர்பு கொண்டு அவர்களது தரப்பு விளக்கத்தை அறிய நாம் முயன்றோம்.
அவர்கள் தங்களது தரப்பு விளக்கத்தைத் தரவில்லை மாறாக ஆடிட்டர் முத்துக்குமாரின் டிபியில் அதாவது வாட்ஸ் அப் டிபியில் வைத்திருந்த அவரது படத்தை நீக்கி விட்டு அவரது அப்பாவின் படத்தை வைத்திருக்கிறார். அதே போல மீனாட்சியும் வேறொரு படங்களை வைத்திருக்கிறார். இந்த செய்தியை சொன்ன உளவாளியார்? என்று புதிய விசாரணை குழுவை அமைத்து விசாரித்து வருகிறாராம் ஆடிட்டர் முத்துக்குமாரும் மீனாட்சியும் ஆனால் மீனாட்சி செய்த ஊழல்களும் ஆடிட்டர் முத்துக்குமார் செய்த ஊழல்களும் நாளுக்கு நாள் பட்டியல் பட்டியலாக நமது அலுவலகத்திற்கு வந்து கொண்டே இருக்கிறது.
சப் ரிஜிஸ்டர் மீனாட்சி.
1916 வாக்கில் முத்துக்குமாரும் மீனாட்சியும் ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணியில் இருந்த பொழுது நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 10 லட்ச ரூபாய் லஞ்சமாக எடுத்துச் சென்றது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் அரசு வகைப்பாட்டில் உள்ள நிலங்களுக்கு போலி பட்டா தயாரித்து கொடுத்தவர்களுக்கு பத்திர பதிவு செய்து கொடுத்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக பல புகார்கள் லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுப்பிய பிறகு ஒருநாள் திடீரென லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அப்போது கொஞ்சமும் எதிர்பார்க்காத முத்துக்குமாரும் மீனாட்சியும் தாங்கள் வைத்திருந்த பணத்தை புரோக்கர்கள் வைத்திருந்த பணம் அனைத்தையும் ஜன்னலில் கட்டு கட்டாக தூக்கி வீசி எறிந்தனர். அந்தப் பணங்களை தங்களுக்கு வேண்டப்பட்ட புரோக்கர்களிடம் தகவல் சொல்லி அந்த பணத்தையும் பத்திரமாக மீட்டனர். 
பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி.
இந்த செய்தி லஞ்ச ஒழிப்பு துறைக்கு தெரியாமல் சோதனையை மட்டும் நடத்திவிட்டு ஃபார்மாலிட்டிக்காக ஒரு வழக்கை போட்டுவிட்டு சோதனையை முடித்து விட்டு சென்றார்கள்.
அதன் பிறகு லஞ்ச ஒழிப்பு துறையில் ஒரு அதிகாரியை கையில் வைத்துக் கொண்டு மீனாட்சியும் முத்துக்குமாரும் தாங்கள் பணியாற்றும் இடங்களுக்கெல்லாம் சோதனை வரக்கூடாது. அப்படி சோதனைக்கு வந்தால் முன்கூட்டியே தகவல் தெரிவித்து விட வேண்டும் என்று ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டனர்.
அந்த வகையில் இது நாள் வரையில் முத்துக்குமார் பணியாற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியதே இல்லை என்கின்றனர் பத்திரப்பதிவு துறையில் பணியாற்றும் சில நேர்மையான அதிகாரிகள். அதேபோல நீலாங்கரையில் மீனாட்சியை பத்திரப்பதிவு சார்பதிவாளராக பணியாற்றிய பொழுது அடித்த கொள்ளை எத்தனை கோடி என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்களாம் அதிகாரிகள். தனது துறை அமைச்சர் மூர்த்தி சொல்லியும் சில பத்திரங்களை மீனாட்சியை பதிவு செய்யாமல் இருந்து விட்டதாலும் அதற்கு கூடுதலாக லஞ்சம் கேட்டதாலும் அவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறாராம் அமைச்சர். 
அமைச்சர் சொன்னால் செய்து கொடுத்து விட வேண்டுமா என்ன?அமைச்சருக்கு கல்லா கட்டி விட்டு தான் இந்த இடத்திற்கு போஸ்டிங் வாங்கி வந்திருக்கிறேன். நான் கொடுத்த பணத்தை எப்போது சம்பாதிப்பது என்று கேள்வி எழுப்பிருக்கிறார் இந்த விஷயத்தை அதாவது மீனாட்சி பேசிய ஆடியோவை அமைச்சர் தரப்பில் வந்த ஆட்கள் ஒருவர் வீடியோ வடிவிலும் ஒருவர் ஆடியோ வடிவிலும் பதிவு செய்து அமைச்சரிடம் கொண்டு போய் கொடுத்துள்ளனர்.
அதனால்தான் இதுவரை மீனாட்சிக்கு எந்தவித உதவிகளையும் செய்யாமல் கட்டம் கட்டி வைக்கப்பட்டுள்ளார். தற்போது அரசு அலுவலராக இருக்கிறாரே தவிர அவர் சம்பாள பணம் பெறாத அதிகாரியாகவே இருக்கிறார் என்கிறார்கள் துறை அதிகாரிகள்.
எனவே இன்னும் இவர்கள் செய்த ஊழல்கள் குறித்து நிறைய புகார்களை நமது அலுவலகத்திற்கு முத்துக்குமாரின் எதிர்த்தரப்பினரும் மீனாட்சியின் எதிர் தரப்பினரும் தொடர்ந்து அனுப்பி வருகின்றனர்
இந்நிலையில் சம்பந்தப்பட்ட ஆடிட்டர் முத்துக்குமார் மீனாட்சியும் அவர்களது தரப்பு விளக்கத்தை அளித்தால் நான் பதிவு செய்ய தயாராக இருக்கிறோம். அவர்களது தரப்பைத் தெரிவிக்காமல் அவர்களுக்கு வேண்டப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மூலம் அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் தங்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் பொய் புகார் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள் என்கிறார்கள் நமக்கு தகவல் சொல்லும் சில நேர்மையான அதிகாரிகள்.
நாம் (சென்னை ரிப்போட்டர்ஸ் நிர்வாகம் chennai reporters.com ) எதையும் சந்திக்க தயாராக இருக்கிறோம் சட்ட ரீதியாக சந்திப்போம் மீண்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுகிறோம் இது குறித்து தங்களது தரப்பு விளக்கத்தை அளித்தால் நாம் அதை மீண்டும் பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.
