#Corrupt should be hanged until they die; மக்கள் பணத்தை கொள்ளையடித்து, ஊழல் செய்யும் அரசு அதிகாரிகளை சட்டத்தின் முன் நிறுத்தி சாகும் வரை தூக்கிலிடவேண்டும்.

April 28, 2025

By இரா. தேவேந்திரன்.

ஓய்வு பெற இரண்டு நாள் இருக்கும் பொழுது அரசு  பெண் அதிகாரி ஒருவரை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் திடீரென பணி இடை நீக்கம் செய்தது அரசு ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அரசு அதிகாரிகளை சட்டத்தின் முன் நிறுத்தி சாகும் வரை தூக்கிலிட்டால் கூட தவறில்லை என்கின்றார் முதுபெரும் பத்திரிகையாளர் கண்ணோட்டம் சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார்.

ஊழலில் சிக்கி பணி நீக்கம் செய்யப்பட்ட பி.டி.ஒ.சித்ரா.

திருவள்ளூர் மாவட்டம் புழல் வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றியவர் சித்ரா பெர்னான்டோ இவர் அந்தப் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் போடப்பட்ட லே-அவுட்டில் அரசு வழிமுறைகளையும் அனுமதி இல்லாமல் போடப்பட்ட லேஅவுட்டிற்கு பல லட்சம் லஞ்சம் வாங்கிக்கொண்டு அனுமதி வழங்கியுள்ளார். அது தவிர நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் கம்பெனிகள் அரசு விதிமுறை மீறி அந்தப்பகுதியில்  இயங்கி வருகிறது. அது மட்டும் அல்லாமல் அரசு அனுமதி இல்லாமலும் இயங்கி வருகிறது. இது குறித்து மல்லிகா மீரான் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். அது தவிர அங்கு இருந்த திமுக சேர்மன் தங்கமணி  என்பவரின் கணவர் திருமாலுடன் சேர்ந்து முறைகேடாக பல கோப்புகளில் கையெழுத்து போட்டு பல லட்சம் ரூபாய் லஞ்சமாக பெற்றுள்ளார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட BDO சித்ரா பெர்னான்டோ.

இது குறித்து நாம் நமது சென்னை ரிப்போர்ட்டர்.காம் இணையதளத்தில் பல்வேறு செய்திகள் ஆதாரங்களுடன் வெளியிட்டிருந்தோம். இது தொடர்பாக சித்ரா பெர்னாண்டோ எந்தவித விளக்கத்தையும் தரவில்லை. அது தவிர  வழக்கறிஞரின் மூலம் நமக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

சட்ட ரீதியாக நாம் அதை சந்திக்க தயார் என்று அவருக்கு தெரிவித்திருந்தோம். இந்த நிலையில் மாவட்ட திட்ட இயக்குனர் ஜெயக்குமார் என்கிற அதிகாரியுடன் சித்ரா பெர்னாண்டோ கூட்டு சேர்ந்து கொண்டு பல லட்ச ரூபாய் கொள்ளை அடித்ததாக புதிய செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சித்ராபெர்னாண்டோ மற்றும் திட்ட  இயக்குனர் ஜெயக்குமாரும் அவர்களது தரப்பை தெரிவித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம் என்று அவர்கள் இருவருக்கும் ஏற்கனவே நாம் வாட்ஸ்அப் மூலம் தகவல் அளித்து இருந்தோம். ஆனால் அவர்கள் இதுவரை அவர்களது தரப்பு விளக்கத்தை நமக்கு அளிக்கவில்லை.

பி.டி. ஜெயக்குமார்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு கும்மிடிப்பூண்டிற்கு  ஆய்வுக்குச் சென்ற மாவட்ட கலெக்டர் பிரதாப் திடீரென ஆய்வு செய்ததில் சித்ரா பெர்னாண்டோ செய்த முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் பிரதாப் பி.டி. ஜெயகுமாருக்கு உத்தரவிட்டிருந்தார். அப்போது உடல் நலம் சரியில்லாத்தைப்போல நாடகம் ஆடி பி.டி.ஒ. சித்ரா மயக்கம் போட்டு விழுந்தார். உடல்நிலை காரணம் காட்டி பி.டி. ஜெயக்குமார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அவரிடம் பல லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிக்கொண்டு பி,டி,ஒ சித்ராவை தப்ப வைத்து விட்டாத  குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் அவரை திடீரென நள்ளிரவில் பணி மாற்றம் செய்து கலெக்டர் பிரதாப் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு கோடி கணக்கில் கொள்ளையடித்து திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தை சீரழித்த பி.டி. ஜெயக்குமார் என செய்தி வெளியிட்டு இருந்தோம். அதனைத் தொடர்ந்து அதில் யார் யார் எந்தெந்த அதிகாரிகளிடம் ஜெயக்குமார் எவ்வளவு பணம் பெற்றார் என்பது குறித்து விளக்கமாக எழுதியிருந்தோம். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஊழல் அதிகாரியான சித்ராவுக்கு 17B, சார்ஜ் கொடுத்து (இன்று அதாவது 2025 ஏப்ரல் மாதம் வியாழன் கிழமை 24 ம்தேதி )அவரை திடீரென பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தார்.ஆனால் இந்த ஊழலுக்கு காரணமாக அமைந்த, ஊழலை ஊக்குவித்து அதிகாரிகளிடம் லஞ்சம் பெற்று ஊராட்சி நிர்வாகத்தை சீரழித்து மக்கள் பணத்தை வீணடிக்க காரணமாக இருந்த திட்ட  இயக்குனர் ஜெயக்குமார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கலெக்டர் பிரதாப் மௌனம் காப்பது எதற்கு என்ன காரணம் என்ற விவரம் தெரியவில்லை என்கின்றனர் ஜெயக்குமாரால் பாதிக்கப்பட்ட கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மக்கள்.

#PD Jayakumar crores and corrupted; கோடிக்கணக்கில் கொள்ளையடித்து திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி நிர்வாகத்தை சீரழித்த பிடி ஜெயக்குமார்.

மக்கள் வரிப்பணத்தை வீணடித்து அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் அரசு அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விரைந்து நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி சாகும் வரை தூக்கிலிட்டால் கூட தவறு இல்லை. மக்களுடைய பணம் வீணடிக்கப்படுவதை  எந்த காரணத்தாலும் எந்த நிலையிலும் ஏற்க முடியாது. அரசியல்வாதிகளை விட மக்கள் பணிகளை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கக் கூடிய பொறுப்பிலும் அதிகாரத்திலும் இருக்கக்கூடிய அதிகாரிகள் மக்கள் பணத்தை கொள்ளையடித்து மக்களுக்காக தேவையான அடிப்படை பணிகளை செய்யாமல் லஞ்சம் பெற்று தன்னுடைய குடும்பத்தை வளப்படுத்திக் கொள்ளுகிற ஊழல் அதிகாரிகளை சாகும் வரை தூக்கிலிட வேண்டும் என்கிறார் தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளரான கண்ணோட்டம் சண்முகம்.

எனவே தமிழக அரசு ஊழல் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அது மட்டும் இல்லாமல் நீதிமன்றம் தாமாக முன்வந்து ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து தண்டனை அளிக்க வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.

மாவட்ட கலெக்ட்ர் பிரதாப் 

இந்த மாதம் 30 ம்தேதி பி.டி.ஒ. சித்ரா ஓய்வு பெற இருந்தார். இந்த நிலையில் மாவட்ட கலெக்ட்ர் பிரதாப் பி.டி.ஒ. சித்ராவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ள செய்தி அரசு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பி.டி.ஒ சித்ரா பணி செய்த காலத்தில் முறையாக ஆய்வு செய்யாமல் கொடுத்த அப்ரூவல், கம்பெனி அனுமதி உள்ளிட்ட அனைத்து அனுமதிகளையும்  கலெக்டர் ரத்து செய்வாரா என்று கேட்கிறார்கள் பொதுமக்கள்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளாட்சி நிர்வாகத்தில் 200 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடைபெற்று நடைபெறுவதற்கு காரணமாக இருக்கும் திருவள்ளூர் மாவட்ட திட்ட இயக்குனர் ஜெயக்குமார் மீது எப்போது கலெக்டர் பிரதாப் நடவடிக்கை எடுப்பார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக அமைந்துள்ளது.

Share:

இரா. தேவேந்திரன்.

April 29, 2025

Leave a Comment