chennireporters.com

#shameful conduct by vck members ; விசிகவினரின் தரங்கெட்ட செயல். இளைஞரை அடித்து உதைத்த காக்கிகள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்த நாள் மாநாடு தஞ்சாவூரில் நடைபெற்றது.  அந்த நிகழ்வில் பேனர் வைப்பதில் ஏற்பட்ட பிரச்சினயில் காவல் துறைக்கும் விசிகவினருக்கும் ஏற்பட்ட தகராறில்
அந்த கட்சினர்  சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதில்
பொதுமக்களுக்கு பெறும் இடையூறாக இருந்தது. இதில் அந்த வழியாக பைக்கில் வந்த இளைஞன் போக்குவரத்து பாதிக்குதுனு  கொஞ்சம் கோபமா பேசினான்அதை தொடர்ந்து அங்கிருந்த காவலர் அந்த பையன்கிட்ட வாக்குவாதம் பண்ண பதிலுக்கு அந்த பையனும் பேச, ஒரு காவலர் அரைஞ்சிருவேன்னு சொல்ல பதிலுக்கு இந்த பையனும் ஒருமையில அரைடான்னு சொல்லும்போதே
அந்த காவலரும் அந்த இளைஞனை ஒரு அரை விட பதிலுக்கு இந்த பையன் ஒரு நொடி யோசிக்காம திரும்ப பதிலுக்கு அந்த எஸ்ஐயை ஓங்கி ஒரு அரை விட்டதில் தொப்பி எகிறி விழுந்துடிச்சி அடுத்த கனம் பல காக்கிகள் ஒன்று சேர்ந்து அந்த இளைஞனை அடித்து துவைத்து விட்டனர். காவலர்கள் பொதுமக்களுக்கு தடை இல்லாமல் போக்குவரத்திற்கு அனுமதித்து இருக்கவேன்டும்  அதை விடுத்து தேவையில்லாமல் பொது மக்களிடம் விவாதம் நெய்திருக்ககூடாது.  காரனம் பொதுமக்களை அவமதிக்கும் செயலில் இறங்கி இருக்க கூடாது. இதை தமிழக காவலர்கள் எப்போது உணருகிறார்களோ அன்றைக்குத்தான் சட்டம் ஒழுங்கு பாது காக்கப்படும்.

அதன் பிறகு சமூக வலைதளங்களில் பொது மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்களை நாம் அப்படியே பொது மக்களுக்கும் நமது வாசகர்களுக்கும் வழங்குகிறோம்.

அவுங்களோ அதிகாரத்துல இருக்க ஆட்கள் அதுக்காக தப்பே செய்யாம நாம பயப்படனும்னு எந்த அவசியமும் இல்லை,
ஆனா அந்த சூழல்ல அவுங்க பேச்சை கேட்டு கடந்து போறது தேவையில்லாத பிரச்சனைகளுக்கு வழி வகுகக்காம இருக்கும்…

இப்போ அதன் விளைவா அவுங்க அத்தனை காவலர்களும் அந்த பையனை ஒரு பெரிய குற்றவாளி மாதிரி தர தரன்னு இழுத்து வண்டியில ஏத்துரத பாக்கவே ஒரு மாதிரி கஷ்ட்டமா இருக்கு…

நடுரோட்டுல அந்த பையனை இப்படி குண்டுகட்டா தூக்கி இழுத்துட்டு போற
வீடியோவ அந்த பையனுக்கு சம்மந்தப்பட்ட ஆட்கள், அப்பா, அம்மா, மனைவி, காதலினு யார் பாத்தாலும் எவ்வளவு வேதனையா இருக்கும்..??

இன்னொன்னு சாமானிய மக்கள்கிட்ட காட்டும் இதே வீர தீர செயலை,
காவலர்களும் பெரிய பெரிய குற்றங்கள் செய்யும் பெரிய இடங்களில் காட்டுவதிலை என்பதும் நிதர்சனம்…இன்னைக்கு நடந்த இந்த சம்பவத்துல இரண்டு தரப்புலையும் தவறு இருக்கு,
காவலர் கை நீட்டினதும் தப்பு, அந்த பையனும் ஒருமையா பேசி பதிலுக்கு அரைஞ்சதும் தப்பு…

அந்த பையன் இனி இதன் விளைவாக இனி என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடுமோ..?! இந்த பகையுணர்வு வளர்ந்தா அந்த பையனோட எதிர்காலமே சில நேரம் கேள்விக்குறி ஆக கூடும் தானே..?!

இந்த இளைஞர் காவலரை கன்னத்தில் அடித்தது மிகவும் பாராட்டக்கூடிய விஷயம் தான் ஆனால் முதலில் அந்த இளைஞரை அடித்தது காவலர் தான் பதிலுக்கு தான் அந்த இளைஞன் அவரை அடித்திருக்கிறார் அவனிடம் இருக்கும் துடிப்பு அவன் நேர்மையை காட்டுகிறது.

இந்த இடத்தில் காவலர்கள் தவறு மறைக்கப்பட்டு விடும் முதலில் தாக்கிய காவலர் மீது என்ன வழக்கு பாய்ந்திருக்கிறது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த இளைஞன் அந்த காவலரை அடித்த வீடியோவை சமூக வலைதளங்களில் சம்பந்தப்பட்ட காவலரின் குடும்பத்தினர் பார்த்தால் அவர்களின் மனநிலை என்னவாக இருக்கும்.  அதை பார்த்து கோபப்பட்டு இருக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கு ஏற்பட்ட கோபத்தை போல தானே சம்பந்தப்பட்ட இளைஞன் குடும்பத்தாருக்கும் ஏற்பட்டிருக்கும் காவலர்கள் என்பவர்கள் மக்களை பாதுகாக்க கூடிய வேலையாட்கள் மக்களின் வரிப்பணத்தில் நாம் சம்பளம் வாங்குகிறோம் என்பதை ஒருபோதும் அவர்கள் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள் என்பது தான் அவமானத்தின் உச்சம். காவலர்கள் நடுநிலையானவர்களாக இருந்திருந்தால் பொதுமக்களை பாதுகாப்பாக போக அனுமதித்திருக்க வேண்டும். கூட்டத்தை தடுத்து பொதுமக்களை பாதுகாத்து இருக்க வேண்டும்.  அந்த காவலர்கள் தங்களுடைய பணிகளை சரியாக செய்யாதது அங்கு சட்டம் ஒழுங்கு சீர்கெடுவதற்கு காரணமாக அமைந்திருக்கிறது. அந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அனைவரையும் உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும்.

அந்த இளைஞனுக்கு ஏற்பட்ட அவமானத்தை தாங்கிக் கொள்ளக்கூடிய மனநிலை அவனுக்கு இருக்குமா ஒரு காவலரை தான் அவன் அடித்தான் ஆனால் பல காவலர்கள் அவனை அடித்துக் கொண்டே இருக்கிறார்கள். சினிமாவில் வரும் காட்சியைப் போல இருக்கிறது.

#conspiracy; அல்லக்கைகள் செய்யும் “சதி”. திருமாவளவன் உயிருக்கு ஆபத்து?

ஒரு இந்திய குடிமகனை நியாயம் நீதி கேட்கும் ஒருவனை காவலர்கள் அடிக்க என்ன தகுதி இருக்கிறது சட்டத்தில் என்ன இடம் இருக்கிறது என்பதை அவர்கள் எப்போது அறிவார்கள்? பொதுமக்களுக்கு சட்டத்தின் மீது ஒரு பயம் பெறும் வேண்டும் என்பதற்காகவே உங்கள் கையில் லத்தியும் துப்பாக்கியும் கொடுக்கப்பட்டிருக்கிறது தவறு நடக்கும் இடத்தில் அதை பயன்படுத்த வேண்டும் ஆனால் நீங்கள் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு கூஜா தூக்குவதும் நியாயத்தை கேட்பவர்களை அடித்து துன்புறுத்துவதும் எந்த வகையில் நியாயம் என சமூக வலைதளங்களில் பல பொதுமக்கள் பல கேள்விகளை முன் வைத்து வருகின்றனர்.

ஒரு பிரச்சனை நடக்கும் இடத்தில் அந்த இடத்திலிருந்து கடந்து போவது தான் சரி அந்த இளைஞன் ஆரம்பம் முதலே எல்லோரிடமும் மிக மோசமாக வாடா போடா என்று பேசினான். இல்லை என்று மறுக்க முடியாது சமாதானம் செய்ய வந்த காவல் அதிகாரிகளையும் அவன் கடுமையாக பேசினான். இருந்தாலும் காவலர்கள் அவனை பாதுகாப்புடன் அனுப்பி வைத்திருந்தால் அந்த ஒரு பிரச்சனையை அங்கே எழுந்திருக்காது நீண்ட நேரம் பொதுமக்கள் காத்திருந்த காரணத்தினால் அந்த இளைஞனுக்கு கோபம் ஏற்பட்டது முதலில் காவலர் தான் அடித்தார் மீண்டும் அடிடா பார்க்கலாம் என்று அவர் சொன்ன போது அவன் அடித்தான்.

இந்த காட்சி வீடியோவில் பதிவாகி இருக்கிறது ஏற்கனவே போலீஸ் அந்த கட்சிக்காரர்களை அடிக்க முடியாமல் தடுக்க முடியாமல் கைகட்டி வேடிக்கை பார்த்ததினால் தான் பொதுமக்களுக்கு கோபம் ஏற்பட்டது.  அந்த கோபம் சரியான கோபம் தான் அந்த கட்சித் தலைவரையே பாதுகாக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அந்த கட்சிக்காரர்களே கட்சிக்காரர்களை கடுமையாக சாடி இருக்கிறார்கள் கட்சிக்காரர்கள் தலைவரின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது என்றும் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு இருக்கிறார்கள் அப்போது தனது கட்சிக்காரர்களை தன் தலைவர் கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள தெரியவில்லை என்று தான் தோன்றுகிறது.

ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளில் வைத்திருக்கும் தொண்டர் படை இளைஞர்கள் படைபோல விடுதலை சிறுத்தைகளின் கட்சித் தலைவர் திருமாவளனும் தலைவரின் கருஞ்சிறுத்தைகள் பாதுகாப்பு படை என்ற ஒரு குழுவை தொடங்கி ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை பாதுகாப்பு வழங்க விடுதலை சிறுத்தைகள் கட்சி வழிவகை செய்து கொள்ள வேண்டும். நான்கு அணிகளை உருவாக்கி ஆறு மணி நேரத்திற்கு ஒரு குழு என்று தலைவருக்கு பாதுகாப்பு குழுவை உருவாக்கி 24 மணி நேரமும் பாதுகாப்பு அரணாக அமைத்துக் கொள்ள தலைவர் திருமாவளவன் தயார் செய்து கொள்ள வேண்டும் என்பது நமது தனிப்பட்ட கருத்து தன்னை பாதுகாத்துக் கொள்ள வருங்கால தலித் மக்களுக்கு இது போன்ற தலைவர் கிடைப்பது அரிதிலும் அரிது என்பதை உணர்ந்து உடனடியாக இதை அமல்படுத்த வேண்டும் என்பது நமது கோரிக்கை.

இதையும் படிங்க.!