#sabarisan statement ; திமுக தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன். சபரீசன் அறிக்கை.

May 22, 2026

By இரா. தேவேந்திரன்.

டிஜிட்டல் தளங்களில் வெளியாகி வரும் தேர்தல் முடிவுகள் குறித்த பல்வேறு யூகங்களுக்கும் விமர்சனங்களுக்கும் பதிலளிக்கும் வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகனும் போபுலஸ் எம்பவர்மென்ட் நெட்வொர்க் (PEN) அமைப்பின் நிறுவனருமான சபரீசன் வேதமூர்த்தி விரிவான அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மக்களின் தீர்ப்பை முழுப் பணிவுடன் ஏற்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், ஒரு பெரிய அரசியல் முடிவை அல்லது தேர்தல் தோல்வியை ஏதோ ஒரு குறிப்பிட்ட ஒற்றைக் காரணியாகச் சுருக்கி, அதன் முழுப் பொறுப்பையும் தங்களின் PEN அமைப்பின் மீது மட்டும் சுமத்த முயல்வது யதார்த்தத்திற்குப் புறம்பானது என்று தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தில் தேர்தல் முடிவுகள் என்பது அரசியல், சமூக, அமைப்பு மற்றும் மக்களின் மனநிலை உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தீர்மானிக்கப்படுபவை என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்தச் சூழலில் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்ளாமல், தவறான தகவல்களையோ அல்லது தனிநபர் சார்ந்த தாக்குதல்களையோ பரப்பாமல் ஆரோக்கியமான விவாதங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும், மக்களின் கருத்துக்களைக் கேட்டு, தங்களின் குறைகளை நேர்மையுடன் சுயபரிசோதனை செய்து கொண்டு முன்னேறுவதே தற்போதைய நோக்கம் என்றும் கூறியுள்ளார்.மேலும், கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் முடிவை அமைதியாகவும் தைரியமாகவும் எதிர்கொண்டு நேரடியாகக் கொளத்தூர் தொகுதி மக்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த அரசியல் பண்பை தங்களுக்கு முன்மாதிரியாகக் குறிப்பிட்டுள்ள சபரீசன், தங்களின் PEN குழுவின் கடின உழைப்பைப் பாராட்டுவதோடு, இந்தத் தேர்தல் முடிவில் தன் தரப்பில் ஏதேனும் தவறு அல்லது பங்கு இருந்திருந்தால் அதற்கான பொறுப்பைத் தான் ஏற்கத் தயாராக இருப்பதாகவும், இனிவரும் காலங்களில் மக்களின் எதிர்பார்ப்புகளை இன்னும் ஆழமாகப் புரிந்து கொண்டு தொடர்ந்து பொறுப்புடன் உழைக்கப் போவதாகவும் தனது அறிக்கையில் மிக அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும் தோல்வி அடைந்தது.இதற்கு சமூக வலைத்தளங்கள் காரணம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறி வந்தார்.  இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் சமூக வலைதளங்கள் பல்வேறு ஊடகங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் நடத்தும் PEN நிறுவனமே பொறுப்பு பல்வேறு தவறுகளை சுட்டிக்காட்டாமல் பல தவறுகளை செய்தது என்று குற்றம் சாட்டி வந்தனர். இதனை ஆமோதிக்கும் வகையில் அந்த நிறுவனத்தின் இயக்குனர் சபரீசன் வேதமூர்த்தி தனது தோல்வியை கட்சியின் தோல்வியை திமுக தோற்றதற்கான காரணத்தை உள்வாங்கிக் கொண்டு நானே பொறுப்பேற்கிறேன் என்று வெளிப்படையாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.இது சமூக வலைதளங்களில் பெரும் விவாத பொருளாகியுள்ளது.

ஏற்கனவே நாம் நமது இணையதளத்தில் ஸ்டாலினுக்கு நம்பிக்கை துரோகம் செய்த மூவர் கூட்டணி என்று செய்தி வெளியிட்டு இருந்தோம்.

#Durga was furious; ஸ்டாலினுக்கு நம்பிக்கை துரோகம் செய்த மூவர் அணி. கொந்தளிப்பில் துர்கா.!!!!

தங்கள் நிறுவனத்தில் தனக்குத் தெரியாமல் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த பலரிடம் பணம் வாங்கிய நபர்கள் குறித்து சபரீசன் இதுவரை அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தான் பொறுப்பேற்றுக் கொண்டதை ஏற்க முடியாது என்கின்றனர் சில மூத்த நிர்வாகிகள்.PEN நிறுவனத்தின் முக்கிய நிர்வாகி இளங்கோவன்.

எனவே சபரீசன் பெயரை பயன்படுத்தி பலரிடம் பணம் வாங்கி அவர்களுக்கு சீட்டு வழங்க வேண்டும் என்று திமுக தலைமைக்கு சிபாரிசு செய்த முக்கிய  PEN நிர்வாகிகள் மீது சபரிசன் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பி வருகின்றனர் சில திமுகவின் முக்கிய  நிர்வாகிகள். திமுகவிற்கு சபரீசன் தேவையில்லை என்றும் சில நிர்வாகிகள் போர்கொடி தூக்கி உள்ளதாக அறிவாலய வட்டாரத்தில் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.

Share:

இரா. தேவேந்திரன்.

May 22, 2026

Leave a Comment